23 February 2017

மதுரமங்கலம்..

எம்பார் ஸ்வாமிகளின் (எம்பெருமானார் என்கிற கோவிந்த பட்டர்) அவதார ஸ்தலம்...மதுரமங்கலம்..



சென்னையில் இருந்து 60 km தொலைவில் உள்ளது



 மூலவர்       : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்

 தாயார்       : கமலவல்லி

புஷ்கரணி: கருட புஷ்கரணி


       இந்த க்ஷேத்ரம் எம்பார் ஸ்வாமிகளின் அவதார ஸ்தலம். எம்பார் சுவாமிகள் ஸ்ரீ ராமானுஜர் பிறந்து 9 ஆண்டுகள் கழித்து அவதரித்தவர்.



        மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர் ஸ்ரீதேவி அம்மாள் தம்பதியினருக்கு திருக்குமாரராய் திருவதாரம் செய்தவர் கோவிந்தப்பெருமாள். இவர் கோவிந்த தாசர், கோவிந்த பட்டர் மற்றும் ராமானுஜ பதச்சாயையார் என்றும் அழைக்கப் படுகிறார்



         எம்பார் சுவாமிகள் ஆரம்பத்தில் சிவ பக்தராக இருந்து, ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஸ்ரீ திருமலை நம்பிகளது முயற்சியால் ஸ்ரீவைஷ்ணவத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். ஸ்ரீ ராமானுஜரால் எம்பெருமானார் என்று பெயரிடப்பட்ட சிறப்புக்குரியவர்.

      எம்பார் சுவாமிகள் பெரிய திருவடி கருடாழ்வாரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். ஆகையாலே இங்கு உள்ள புஷ்கரணி கருட புஷ்கரணி என்றழைக்கப் படுகிறது.


  இக்கோவில் சுமார் 1000 ஆண்டு பழமையானது.


  எம்பார் சுவாமிகள் திருவாராதனம் செய்த பெருமாள் இங்கு உள்ள ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்.



   எம்பார் ஸ்வாமிகளின் அவதாரத் திருநக்ஷத்ரம்  தை புனர்பூசம் .

  தை மாதத்தில் எம்பார் சுவாமிகளுக்கு மஹா உற்சவம் புனர்பூச நக்ஷத்திரம் வரை பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த வருடம்  மதுரமங்கலத்தில்  நடைப் பெற்ற விழாவில் அப்பா எடுத்த சில படங்கள் இன்று...






 எம்பார் சுவாமிகள் 







எம்பார் வாழித் திருநாமம்

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கைமுதல் பதின்மர்கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் புதூரான் மலர்பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
தேவும் எப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலை நம்பிக்கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியே
பட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே.

எம்பார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்








அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. எம்பார் திருவடிகளே சரணம்.
    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்//

    படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  2. மதுரமங்கலம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், அருமையான படங்கள்.

    ReplyDelete