04 July 2017

திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயில்....

வாழ்க வளமுடன்...


ஒரு சிறிய சுற்றுலா பகிர்வு இந்தமுறை....பணி நிமித்தமாக கணவர்  கேரளாவில் உள்ள திருச்சூர் சென்றார்...அப்பொழுது அங்கு பார்த்து ரசித்தவைகளை எங்களுக்கு படங்களாக எடுத்து வந்தார்...அப்படங்களுடன் கூடிய ஒரு சிறிய பயண பதிவு...



திருச்சூரில் உள்ள மிகப்பெரிய  கோவில் வடக்கு நாதர் கோவில். நகரத்தின் மைய பகுதியில் உள்ள இக்கோவில்36 ஏக்கர் பரப்பளவில்  பரந்து  விரிந்து கிடக்கிறது. ...நான்கு புறமும்  கோபுரங்களுடன் மிக பெரிய கோவில்..











பரசுராமர் பிரதிஷ்டை செய்த இந்த இஸ்தலம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது...கேரளாவில் உள்ள மேற்கு பார்த்த சிவாலயம்..


சிவன் கோவிலான இங்கு ராமர், கிருஷ்ணர், ஐயப்பன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு.



.













ஸ்தல வரலாறு

ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவிக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். இவர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். ஜமதக்னி முனிவரிடம் இருந்த காமதேனுப் பசுவின் சிறப்புகளை அறிந்த கர்த்தவிரியன் என்ற மன்னன், அந்தப் பசுவைத் திருடிச் சென்றான். 

வீரியனை அழித்துப் பசுவை மீட்டு வந்தார் பரசுராமர். இதனால் கர்த்தவீரியனின் மகன்களுக்கும், பரசுராமருக்கும் பகை ஏற்பட்டது. இதனால் அவர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னியை கொன்றனர். இதையடுத்து அரச குலத்தவர் மீது கோபம் கொண்ட பரசுராமர், கர்த்தவிரியன் மகன்களை அழித்தோடு நிற்காமல் பல அரச குலத்தவர்களையும் அழித்தார்...


அதனால்  ஏற்பட்ட பாவத்தை போக்க நினைத்த   பாசுராமர், சிவபெருமானுக்கு பல கோவில்களை நிறுவினார். அதுக்காகக் கடல் அரசனிடம்  சென்ற அவர், சிவபெருமான் கோவில்களுக்காகப் புதிய இடத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார்...


 கடல் அரசனும் அவர் வேண்டுகோளை ஏற்று, பரசுராமரின் கையிலிருந்து  வீசியெறிந்த வேள்விக்கான அகப்பை விழுந்த   இடம் வரைப் பின் வாங்கிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தான்.

புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைத்தார்....

சிவபெருமான், தன்னுடைய சிவ கணங்களில் ஒன்றான சிம்மோதரன் என்பவனை, கோவிலுக்குள் நடைபெற்று வரும் பணிகளை கவனித்து வரும்படி அனுப்பினார். ஆனால் போனவன் வரவில்லை. அங்கிருந்த அமைதி அவனை கட்டிஇழுத்தது. அங்கேயே அமர்ந்து தியானத்தில் மூழ்கினான்.

நீண்ட நேரமாகியும் சிம்மோதரன் வராததால், உள்ளே சென்றார் சிவபெருமான். தன்னிலை மறைந்திருந்த சிம்மோதரனை தன் காலால் உதைத்தார். அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளிமயமாகி நின்றார். கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை நெய் கொண்டு குளிர்வித்தார். இதனால், இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் கோவில் லிங்கத்தைப் ‘பனிலிங்கம்’ என்று அழைப்பது போல், இந்தக் கோவில் இறைவனை ‘நெய்லிங்கம்’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.

மூலவருக்கு நெய்  கொண்டுதான் அபிஷேகம் செய்கின்றனர். சில வேளைகளில் பன்னீர், சந்தனம் அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. கோடைக்காலத்தின் வெப்பமோ, மூலவருக்குக் காட்டப்படும் தீப ஆராதனையில் இருந்து வரும் வெப்பமோ இந்த நெய்யை உருகச் செய்வதில்லை. இருப்பினும், இந்த நெய் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகப் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது. பரசுராமரால் உருவாக்கப்பட்ட புதிய நிலப்பரப்பில் வடக்கிலிருந்த குன்றில் இறைவன் இருந்ததால், இத்தல இறைவன் வடக்குநாதர் என்று அழைக்கப்படுகிறார்.






.





வழியில் கோவில் யானை...





திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் 'திருச்சூர் பூரம் திருவிழா' நடத்தப்படுகிறது... ஆனால், அந்தவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதுதில்லை.... இந்த கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும், வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா .....

..

இந்தத் திருவிழாவின் போது, இந்த ஊரிலுள்ள நான்கு அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் யானைகள், அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்....



 பூரம் திருவிழா காட்சிகள் இணையத்திலிருந்து...










தொடரும்...


பீச்சி அணை

பீச்சி அணை பூங்கா..


அன்புடன்

அனுபிரேம்...








9 comments:

  1. தல வரலாறு அறிய தொடர்கிறேன்...
    அழகிய படங்கள்

    ReplyDelete
  2. படங்கள் , கோயில் வரலாறு அருமை.

    ReplyDelete
  3. அழகான படங்கள். சுவையான தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. ​சுவாரஸ்யமான தகவல்களுடன் அழகிய படங்கள். இந்த பூரத் திருவிழாவில்தானே அடிக்கடி யானைகளுக்கு மதம் பிடிக்கும்?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்...

      "இந்த பூரத் திருவிழாவில்தானே அடிக்கடி யானைகளுக்கு மதம் பிடிக்கும்?".....
      ஐயோ.. அது தெரியலையே...

      Delete
    2. ஆமாம் அனு! இதில் பாவம் யானைகளுக்கு மதம் பிடிக்கும் பல சமயங்களில்....அதனால் எனக்கு இது போன்ற திருவிழாக்கள் ஏனோ பிடிப்பதில்லை. விலங்குகளைத் துன்புறுத்தி ஒரு திருவிழாவா? இறைவன் அதை விரும்புவாரா? என்று எனக்குப் பல கேள்விகள் எழும்...என்னதான் யானைகள் பழக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு இந்த ஜண்டைக் கொட்டுச் சத்தம் காதைப் பிளக்கும். மனிதர்களுக்கே அது நல்லதல்ல அதாவது அந்த டெசிபல் சத்தம் நல்லதல்ல எனும் போது விலங்குகளுக்கு?...இது எனது தனிப்பட்டக் கருத்து.

      கீதா

      Delete
  5. வடக்குநாதர் கோவில் நான் திருச்சூர் (அடிக்கடி) செல்லும் போதெல்லாம் வணங்காமல் வருவது இல்லை. அழகான படங்கள்.

    கீதா: நானும் சென்றிருக்கிறேன். மையப்பகுதியில் என்றால் இதனைச் சுற்றித்தான் செல்ல வேண்டும். ஆம் பெரிய கோயில் வளாகம் பெரிது. திருச்சூர் பூரம் நடக்கும் கோயில் தான்.
    பூரம் விழாவை நான் நேரில் கண்டது இல்லை..அதைக் காணும் ஆவலும் ஏனோ வரவில்லை. பாவம் யானைகள் என்பதாலோ என்னவோ...

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான தகவல்கள்.. அழகான படங்கள். யப்பா... எவ்வளவு சனங்க...பூரத்திருவிழாவுக்கு.!!

    ReplyDelete