19 September 2017

காவேரி மஹா புஷ்கரம் ...



புஷ்கரம் ....நதிகளை வணங்கும் விழா...


நவகிரகங்களில் ஒருவரான  குருபகவான் பிரம்மனை நோக்கி ஒரு வேண்டுதலோடு கடுமையான தவம் மேற்கொள்கிறார். 

குருவின் கடும் தவ வலிமையை எண்ணி வியந்த பிரம்மன், குருவின் முன்பு தோன்றி குருவே உனது கோரிக்கை தான்  என்ன என்று வினவுகிறார். ...

உடனே குருபகவான், பிரம்மா உங்களிடம் உள்ளதைத்தான் நான் கேட்பேன் என்றார், கேளுங்கள் என்றதும் தாங்கள் வைத்திருக்கும் கமண்டலத்தில் (சொம்பு) இருக்கும் புஷ்கரம் என்னும் தீர்த்தத்துடன் தான் எப்பொழுதும் வசிக்க வேண்டும் என்று குரு வரம் கேட்க பிரும்மாவும் சம்மதித்தார்......


 புஷ்கரம் ....பிரம்மா என்னை உங்களிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள் என்று கெஞ்சியது. 

அதனால் தர்ம சங்கடமடைந்த பிரம்மன், தான் கொடுத்த வாக்கை பின்வாங்காமல்,  குருவுக்கும்,புஷ்கரத்திற்கும் இடையே  ஒரு சமாதான உடன்படிக்கை மேற்கொண்டார் . 

அதனையேற்று செயல்பட  இருவரும் ஒப்புக்கொண்டனர். ..

அது முதல் பிரும்மாவின் கமண்டல தீர்த்தமான புஷ்கரம் என்னும் தீர்த்தம் தேவ லோகத்திலிருந்து பூமிக்கு வந்து ஒவ்வொரு வருஷமும் சுமார் பன்னிரெண்டு நாட்கள் ஒவ்வொரு நதியிலும் வாசம் செய்கிறது.

அதாவது   புஷ்கரம், குருபகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசிவரை உள்ள 12 ராசிகளிலும்  அந்தந்த ராசிக்குரிய புண்ணிய  நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை  பாலிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 


அதன்படி 
புஷ்கரம் 

மேஷம்-கங்கை, 

ரிஷபம்-நர்மதை, 

மிதுனம்-சரஸ்வதி,

கடகம்-யமுனை,

 சிம்மம்-கோதாவரி, 

கன்னி-கிருஷ்ணா,

துலாம்-காவேரி, 

விருச்சிகம்-தாமிரபரணி, 

தனுசு- சிந்து,

மகரம்-துங்கபத்திரா, 

கும்பம்-பிரம்மபுத்திரா, 

மீனம்-பரணீதா


 ஆகிய நதிகளில் குருபகவான் எந்தெந்த ராசிகளில் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன் அதே காலக்கட்டத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன்,இந்திரன் ஆகியோரும் ஒருசேர இருந்து மக்களுக்கு அருள்பாலிக்கவும் செய்வார்கள். 

மேற்படி நாட்களில் மக்கள் இப்புனித நதிகளில் நீராடினால் அனைத்துவகை  துன்பங்கள் நீங்கி வளமையும் செழிப்பும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது தான் புஷ்கரத்தின் மகிமையாகும்.


புஷ்கரம் என்பது நதிகளை வணங்கும் ஒரு இந்திய திருவிழா ஆகும். 



இந்த விழா குரு ஒவ்வொரு ராசியையும் கோட்சாரத்தில் கடக்கும் பொழுது அந்த ராசியின் நதிக்கரையில் கொண்டாடப்படுகின்றது. 

இந்த விழா குருப்பெயற்சியில் இருந்து 12 நாட்கள் நடக்கும்.

குருவானவர் ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு வருடம் ஆகின்றது. 

இவ்வாறு 12 முறை அதே ராசியை அவர் கடக்கும் பொழுது 144 ஆண்டுகள் (12 x 12 = 144) ஆகின்றன..

144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் பொழுது இதை  இதை மஹா புஷ்கரம் என்பர். 

இந்த வருடம் 2017 மஹா புஷ்கரமாக காவேரிக்கரையில் கொண்டாடப்படுக்கிறது...

இந்த புஷ்கரத்தின் முதல் 12 நாட்கள் ஆதி புஷ்கரம் என்றும் கடைசி 12 நாட்கள் அந்த்ய புஷ்கரம் என்றும் கூறப்படும்.



இவ்வாறு சிறப்பாக நடைபெறும் காவேரி புஷ்கரத்தின் அருமையான படங்கள் இன்று....

காவேரி புஷ்கரத்தை முன்னிட்டு  ஸ்ரீரெங்கத்தில் நடைப்பெற்ற வீதி உலா 11.09.2017.














கண் கொள்ளா காட்சியாக காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடும் காட்சி....










மாயவரத்திலிருந்து...












காவேரி அன்னைக்கு மங்கள ஆரத்தி....









 படங்கள் அனைத்தும் முக நூலிலும்....இணையத்திலும் கிடைத்தவை....



பகிர்ந்த அன்பர்களுக்கு மிகவும் நன்றி...





அன்புடன்

அனுபிரேம்..




17 comments:

  1. படங்கள் செம அழகு. நான் மயிலாடுதுறையிலும், காவேரியிலும் நீராடினோம்.

    ReplyDelete
    Replies
    1. ஒ...சூப்பர்க்கா..

      எங்களால போக முடியல...இங்க இருந்தே காவிரியை தினமும் நினைக்கிறேன்..இது போதாதா..

      Delete
  2. திருவிழாவினை நேரில் தரிசித்த மகிழ்ச்சி..

    எல்லாரும் நன்மைகள் சேரட்டும்.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி...ஐயா ..வாழ்க நலம்..

      Delete
  3. //படங்கள் அனைத்தும் முக நூலிலும்....இணையத்திலும் கிடைத்தவை....//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படங்கள் பார்த்து சொக்கிப்போய்.. அனு நேரில் பார்த்து எடுத்த படங்கள் என மயங்கியிருந்த வேளை.. கரண்ட் சொக்ட் கொடுத்திட்டீங்க:)..

    ReplyDelete
    Replies
    1. ஹி...ஹி ..எனக்கும் நேரில் போய் படம் எடுக்கத்தான் ஆசை...ஆன முடியலயே...

      பரவாயில்லை ரசித்த படங்களை யாவது பகிர்வோம் எனத்தான் கொடுத்தேன் அதிரா..

      Delete
  4. நல்ல தகவல் சொல்லியிருக்கிறீங்க.. இன்றுதான் அறிகிறேன் 12 ராசிக்க்குமான நதிகள் இருப்பது பற்றி.. என் நதி எதுவெனச் சொல்ல மாட்டேனே...... ஹா ஹா ஹா:).

    ReplyDelete
    Replies
    1. நான் எனக்கு தான் புதுசு ன்னு நினைத்தேன்....உங்களுக்குமா...

      ஏதோ என்னால ஆனது...

      Delete
  5. படங்கள் தெளிவு, அழகு. நான் யமுனையில் நீராட வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீங்க கடகம்....

      Delete
  6. படங்களும் தகவல்களும் அருமை

    கீதா: படங்கள் செம அனு. அதுவும் அந்த ரயில் பாலத்துல ஓடுற படமும் உச்சிப்பிள்ளையார் படத்துக்குக் கீழ இருக்கற படம் அதுல மேகம் கலர் ஷேப் எல்லாம் ரொம்ப அழகு!!! அப்படியே....மொபைல்ல HDR இருக்கறதுனால இவ்வளவு அழகா கலரா வருதோ?

    ReplyDelete
    Replies
    1. அட கீதாக்கா...இது எல்லாம் முக நூலில் வந்தவை...

      நான் ஏதும் பண்ணல...

      Delete
  7. படங்கள் அனைத்தும் ஸூப்பர்.

    ReplyDelete
  8. Excellent pictures! Thanks for sharing.

    ReplyDelete