17 November 2017

கைவண்ணத்தில்... விளக்கு வைக்கும் தட்டு




தமிழ் மாதங்களில் கார்த்திகை மன உறுதியை தரும் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலை மகாதீபம், கார்த்திகை பெளர்ணமி என விஷேசங்கள் நிறைந்தது கார்த்திகை மாதம்.




தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும்.

நம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம்.

கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் நாம் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் .

திருக்கார்த்திகையை அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன் என்றும் அழைப்பதுண்டு.

மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் கார்த்திகை பௌர்ணமி!



விளக்கு வைக்கும் தட்டு...

இத்தகைய சிறப்பான மாதத்தில்  தினமும் மாலை வாசலில் விளக்கு ஏற்றிவோம் ..



அப்பொழுது விளக்கிலிருந்து எண்ணெய் கசிந்து அந்த இடத்தை அழுக்காக்கும் ...அதனால்  சிறு  தட்டீன் மீது விளக்கு ஏற்றுவோம் ...


அவ்வாறு வைக்கும் தட்டை கொஞ்சம் அழகுபடுத்தி வைப்பதே ...



இன்றைய எனது கைவண்ணத்தில்...












தேவையானவை...







செய்முறை.....



பார்த்தாலே செய்ய கூடிய எளிய முறை.....😊😊

















அலங்கரித்த  cd யின் நடுவில் பழைய மூடியை வைத்தால் கசியும் எண்ணெய் அங்கு  நின்றுவிடும்... பின் அதை சுத்தம் செய்வதும் எளிது...













ஒவ்வொரு வருடமும் இது போல் விளக்கு வைக்க  வித்தியாசமாக செய்வது எனது வழக்கம் ..அவ்வாறு இரு வருடங்களுக்கு முன் செய்தது இந்த  வண்ண cd தட்டு.....



அன்புடன்,

அனுபிரேம்.....




9 comments:

  1. அன்பின் இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்..

    ஒளிமயமான எதிர்காலம் எல்லாருக்கும் அமையட்டும்..

    கார்த்திகை தீபத்திருநாளுக்கு கட்டியம் கூறுவது போல -
    அழகான தீபத் தட்டுகளை உருவாக்கும் முறையைச் சொல்லிக் கொடுத்து
    ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்..

    ஒளி மின்னும் தீபங்களுடன் தீபத்திருநாள் பொலியட்டும்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. கலைவண்ணம் கைவண்ணம்.

    ReplyDelete
  3. சகோதரி/அனு வின் கையிலே கலைவண்ணம் கண்டோம்!!!!

    மிக அழகு! ஓ அதுதான் உங்கள் முகப்புப் படமாக உள்ளதோ!!

    ReplyDelete
  4. சூப்பர்ப்பா. இனிதான் நானும் செய்யனும்

    ReplyDelete
  5. சூப்பர் அனு சிம்புளா பள பளப்பா தெரியும் என்கிட்டயும் சீடி நிறைய இருக்கு பழையது செய்து பார்கிறேன் நன்றி

    ReplyDelete
  6. அருமையான் விளக்கு தட்டு. என் தங்கை நிறைய செய்து கொடுத்து இருக்கிறாள்.
    உங்கள் செய்முறை எளிமையாக அழகாய் இருக்கிறது அனு.

    ReplyDelete
  7. ஆஹா சிம்பிள் அண்ட் சுப்பேர்ப் அனு... மிக அருமை.

    ReplyDelete
  8. ரெம்ப அழகா செய்திருக்கீங்க அனு. செய்முறையும் ஈசியா இருக்கு.

    ReplyDelete
  9. கை வண்ணம்
    கலை வண்ணம்
    அருமை சகோதரியாரே

    ReplyDelete