29 November 2015

கார்த்திகை தீபத்தின் மகத்துவம்


கார்த்திகை தீபத்தின்  மகத்துவம் ....

            ஒரு வருடத்தின் இந்த பாகத்தை, தக்ஷிணாயனம் (அ) சாதனா பாதை என்று அழைப்பர். இதில் இந்த கார்த்திகை மாதத்தில் தான் நாம் 'கைவல்ய பாதைக்குள்'  மெதுமெதுவாக அடி எடுத்து வைக்கும் நேரம்.  யோக சாதனா செய்யும் வகையில், தக்ஷிணாயனம் என்பது தீவிரமாக யோக சாதனாவில் ஈடுபட்டு, நம்மை சுத்திகரித்துக் கொள்வதற்கான நேரம்.    

            உத்தராயணமோ ஞானோதயம் பெறுவதற்கான நேரம். சாதனா பாதையில் உழுவை செய்து, விதை விதைத்து, பயிர் செய்தாயிற்று. இப்போது நாம்  செய்த 'சாதனா'விற்கான பலன்களை அறுவடை செய்யும் நேரம். இந்த நேரத்தில் தான் நமது  சாதனாவின் பலன்களை நமக்கு பயன்படும் விதத்தில் நாம்  பெற்றுக் கொள்ள முடியும். 

            பிதாமகர் பீஷ்மர், சாதனா பாதையில் இறக்க விரும்பாமல், அம்புப் படுக்கையில் காத்திருந்து, 'உத்தராயண'த்தில் உயிர் நீத்தது நாம் அனைவரும் அறிந்த கதைதான். அவர் உத்தராயணத்தில் (அ) கைவல்ய பாதையில் இறக்க விரும்பியதற்கான காரணம், அந்த நேரத்தில் தான் வாழ்க்கையின் பலன்களை அறுவடை செய்யமுடியும். 

               நம் உள்நிலையில் அறுவடை செய்ய வேண்டியவற்றை கைவல்ய பாதையில் மிக எளிதாக அறுவடை செய்துவிடலாம். இந்த கார்த்திகை மாதம், சாதனா பாதையில் இருந்து கைவல்ய பாதைக்கு மெதுவாக மாறும் நேரம். இந்நேரத்தில் விளக்குகள், அதில் இருந்து வெளிவரும் ஒளி, ஞானோதயம், விழிப்புணர்வு, முக்திக்கான அடையாளக் குறியீடுகள். இதைக் குறிப்பதற்குத் தான் வீட்டிலே பல விளக்குகள் ஏற்றி வைக்கிறோம்.

                     இது ஏதோ ஒரே ஒரு விளக்கை ஏற்றுவதைப் பற்றி அல்ல. நம் கலாச்சாரத்தில் பொதுவாக கார்த்திகை மாதத்தில், எப்போதும் ஏற்றுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள். ஒன்று, வருடத்தின் இந்த நேரத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நம் தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். மற்றொன்று நம் வாழ்வில் ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது என்பதால்.

 கார்த்திகை தீபத்தின் மகத்துவம் என்ன என்று இஷாவின் பதிவில் இருந்து  பகிர்ந்த  கருத்துக்கள் இன்று உங்கள் பார்வையில்  .....


எங்கள் வீட்டு கார்த்திகை தீபங்கள் .... அன்புடன் 
அனுபிரேம் 


Image result for tamil quotes with images20 November 2015

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் ''மஹாசம்ப்ரோசணம்"ஆசியாவிலேயே பெரிய கோபுரமும் இந்தியாவிலேயே மிக பெரிய ஆலயமுமான ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோவில் '' மஹாசம்ப்ரோசணம் '' - 18.11.15 அன்று நடைப்பெற்றது ... அந்த படங்கள் இன்று உங்களுக்காக ....

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்து கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி என்பதால் தமிழக அரசு இக்கோவில் திருப்பணிகளை தொடங்க திட்டமிட்டு அதற்கான கால்கோள்விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நடந்தது.

ரூ10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பணிகள், நன்கொடையாளர்கள் ஒத்துழைப்போடு ரூ30 கோடிக்கும் மேலான மதிப்பில் இரவு பகலாக நடந்தது. இதில் பிரதான சன்னதிகள் தவிர மற்ற சன்னதி திருப்பணிகள் முதலில் நிறைவுபெற்றது. இதை தொடர்ந்து திருப்பணிகள் நிறைவடைந்த 11 கோபுரங்கள் மற்றும் 43 உப சன்னதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி மகா சம்ப்ரோஷ்ணம் நடந்தது.

பிரதான சன்னதிகளான ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார், சக்கரத்தாழ்வார், பெரியகருடன் மற்றும் ராமானுஜர் சன்னதிகளுக்கான திருப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இந்த சன்னதிகளுக்கும் மீதமுள்ள 10 கோபுரங்களுக்கும் மகா சம்ப்ரோஷ்ணம் 18 ம் தேதி நடைபெற்றது.


இங்கு உள்ள அனைத்து படங்களும் இணையத்தில் இருந்து கிடைத்தவை பதிவு செய்த பக்தருக்கு மிகவும் நன்றி ....

ஓம் நமோ நாராயணாய நமக :
ஓம்  நமோ நாராயணாய நமக :
ஓம் நமோ  நாராயணாய நமக :கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.-தொண்டரடிப் பொடியாழ்வார்
அன்புடன்
அனுபிரேம்19 November 2015

சிக்க திருப்பதி, Sarjapur,பெங்களூர்

அனைவருக்கும் வணக்கம் ...


சிக்க திருப்பதி ...இந்த  கோவில் பெங்களூரில்  Sarjapur என்ற இடத்தில் உள்ள அழகான கோவில் ....இந்த இடம் silk  board இல் இருந்து 33 km தொலைவில் உள்ளது ....


இணையத்தி லிருந்து 
'சிக்க' என்றால் கன்னடத்தில்  சிறிய என்று பொருள்...எனவே இக்கோவிலை  சின்ன திருப்பதி எனவும் கூறலாம் ..  மிக அழகான கோபுரம் கொண்ட இக்கோவில் பெரிய கூட்டத்தை அற்ற அமைதியான இடத்தில் உள்ளது....


இணையத்தி லிருந்து 


கோயில்  காலை 06 மணி  முதல்   முற்பகல் வரையும் பின்  மாலையும் திறந்திருக்கும்.
இந்த கோவில் கட்டப்பட்டது  பற்றிய கதை -- 

இது அக்னி தேவனால் விஷ்ணுவின் தயவிர்காக  கட்டப்பட்டது. அக்னி தேவர்  கடுமையான வயிற்று வலி  நோயால் பாதிக்கப்பட்டார் . அப்போது பிரம்மா அவர் உடல்நலத்தை  குணப்படுத்த மூலிகை நிறைந்த 'Khandava' வனத்தை  நுகருமாறு  அவருக்கு அறிவுறுத்தினார் .

சர்ப்ப-ராஜா வாகியா இந்திரனின்  நெருங்கிய நண்பர் தக்ஷகன், அங்கு வசித்தார் . அக்னி காட்டை  சாப்பிட முயன்ற போதெல்லாம், இந்திரன் இடியுடன் கூடிய மழையை பெய்வித்தார் ..... ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் உதவியுடன், அக்னி 'Khandava' வனத்தை  எடுத்துக்கொண்டார் . இந்த காலத்தில், அவர் தனது 'தேஜஸ் 'யை  இழக்க நேரிடும் என்று தக்ஷகன்  அக்னிக்கு சாபமிட்டார்  .


இந்த சாபத்தில் இருந்து விமோசனம்  பெற,  அக்னி தேவர் ,விஷ்ணு பகவானின்  தயவை பெருமாறு  கிருஷ்ணர் கூறினார். எனவே  'சாப  விமோசனம் ' அடைய அக்னி தேவர்  இந்த வெங்கடேஸ்வரா கோயிலை எழுப்பினார் . எனவே தான் இங்கே இறைவன்  பிரசன்ன வெங்கடேஸ்வர்  என்று அழைக்கப்படுகிறார் ..


சனி கிழமை தோறும் இங்கு சந்தை நடை பெறும் ....அப்பொழுது  மிகவும்  fresh ஆன காய்கறிகள்  கிடைக்கும் ...
அன்புடன் 
அனுபிரேம் 

tamil-whatsapp-kavithai-funny-good-morning-imagesLinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...