24 June 2016

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்- மாமல்லபுரம் 3நாங்க  பஞ்ச பாண்டவ ரதங்களை கண்டு வெளியே வரும் போது ....மழை ....அப்பொழுது ரதங்களை கரு மேகம்  சூழ  ஆகா ...அருமையான  காட்சி ....அடுத்ததாக ... அங்கிருந்து 1.5 கிமீ  தொலைவில் உள்ள கடல் கிளிஞ்சல்  அருங்காட்சியகத்திற்கு ( sea  shell museum ) நாங்கள் சென்றோம்...அங்கு கிளிஞ்சல்கள் அவற்றின்  அளவுகள் , தோற்றம், வண்ணங்களின் படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது... ,


 நத்தைகள் மற்றும் சிப்பிகள் என  40000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்களின்   தொகுப்பாக மிகவும்  சிறப்பாக  வடிவமைக்கப்பட்டுள்ளது .

 இங்கு இரண்டு இடங்கள் உண்டு ....அவை

கடல் ஷெல் அருங்காட்சியகம் மற்றும் மீன் கண்காட்சி( aquarium)..
சிப்பிகளால் ஆன  கப்பல் , ரெயில் ,விமானம்  என ....ஆகா ...என்ன  ஒரு அழகு ....

இந்த  அருங்காட்சியகத்தின்   ஒரு பகுதியில்  கடல் உணவு உணவகமும்,  கைவினை பொருட்கள் விற்பனை நிலையமும்  உள்ளது .....   ஆனால்  ஒவ்வொரு இடத்திர்க்கும்  தனி தனி நுழைவு கட்டணம் ... .........

கலை நயத்துடன் கூடிய ....தனியார்   அருங்காட்சியகம்..கண்டு மகிழ வேண்டிய ஒரு அருமையான இடம் ....


தொடரும் ....அன்புடன்

அனுபிரேம்
20 June 2016

பஞ்ச பாண்டவ ரதங்கள் -மாமல்லபுரம் 2


அனைவருக்கும் வணக்கம் .....


முந்தைய பதிவில் மாமல்லபுரத்தை பற்றி ரசித்தோம் ....இன்று அங்கு உள்ள பஞ்ச பாண்டவ ரதங்களை  காணலாம் ....ஐந்து ரதம் அல்லது பஞ்சபாண்ட ரதம் என்று அழைக்கப்படும் இவை ஒற்றைப்    பாறையை  தேர் போன்ற நுணுக்கத்துடன் செதுக்கி எழுப்பப்பட்ட கோயில் வடிவங்களாகும். கடற்கரைக்   கோயிலைப்  போன்றே  இவையும்  உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்  பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த  ஐந்து  ரதக்கோயில்களும்   தனித்தனி   பாறைக்குடைவு அமைப்புகளாக   பிரத்யேக   வடிவமைப்புகளுடன் காட்சியளிக்கின்றன.  இவற்றில்   தர்மராஜா   ரதக்கோயில் அளவில் பெரியதாகவும்   சிற்ப   நுணுக்கங்களுடனும்   காட்சியளிக்கிறது.

முதலாம்   மஹேந்திரவர்மர் மற்றும் அவரது புதல்வராகிய முதலாம் நரசிம்மவர்மர் ஆகியோரால் இந்த ரதக்கோயில்கள்     நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன .


ஐந்து ரதம்

மேலும்  ஒரே கல்லில் செதுக்கிய யானை மற்றும் சிங்கத்தின் சிற்பங்கலும் அழகிய உருவில் இருக்கின்றன  ....

 
தொடரும் ....

அன்புடன் 

அனுபிரேம்


15 June 2016

மாமல்லபுரம்

அனைவருக்கும் வணக்கம் ..


         எங்களது மாமல்லபுர பயணத்தின் பதிவுகள் இனி ....இது இரு வருடங்களுக்கு முன் சென்ற ஒரு பயணம் .....ஆனாலும் மனதில் பசுமையாக உள்ளது ...
    
மாமல்லபுரம்...

        7 ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். 

மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 

1.குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; 

2.ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் 

3.கட்டுமானக் கோயில்கள். 


இவைதவிர, படைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன.

         மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், படைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது.      நாங்க காலை  8 மணிக்கே அங்கே இருந்ததால் ...மிகவும் அமைதி யாருமே இல்லை ....


பக்கத்தில் இந்த காண்டாமிருகம் ....don 't  sit for sale  என்ற வாசகத்தோடு ...ஆன ரொம்ப தத்த்ருபமான கலை ....
நாங்க முதலில் சென்று பார்த்தது பஞ்ச ரதங்கள்..... 


தொடரும் ....

அன்புடன் 
அனுபிரேம் 


கடற்கரைக் கோவில்

சிற்பிகளின்  கைவண்ணம்


அர்ச்சுனன் தபசு சிற்பங்கள்

மலைக்கோவிலும், கலங்கரை விளக்கமும்

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்