27 October 2016

தீபாவளி வாழ்த்துக்களுடன்.... சிரிக்கும் பூக்கள்.. 2




அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...


Image result for deepavali





அழகாக சிரிக்கும் பூக்களின்  அடுத்த   அணிவகுப்பு   இன்று...


























அன்புடன்

அனுபிரேம்




25 October 2016

கம்பு ஓமம் பிஸ்கட்

கம்பு  ஓமம்  பிஸ்கட் ....







தேவையானவை

1.கம்பு  மாவு                  -3/4 ட

2. கோதுமை மாவு     -1/4 ட

3.  வெண்ணெய்         -1\2 ட

4.பொடித்த  சர்க்கரை     - 3 ஸ்பூன்

5. வென்னில்லா ess.   -1\2   டீ ஸ்பூன்

6.  ஓமம்                               - 2 ஸ்பூன்

உப்பு           - சிறிது





செய்முறை

முதலில் oven யை 180 டிகிரி யில் 10 நிமிடம்  preheat செய்ய வேண்டும்..



1. கம்பு  மாவு  ,கோதுமை  மாவை   சலிக்கவும்  ..



2.வெண்ணெய் மற்றும் பொடித்த  சர்க்கரையை  நன்றாக  கிரீம் ஆகும் வரை கலக்கவும் ...



3.பிறகு  அதில் வென்னில்லா ess.யை சேர்க்கவும்..




4.பின் ஓமம் , சலித்த  மாவையும்  சேர்த்து  நன்றாக  பிசைய வேண்டும்...



5.அந்த மாவை  சிறிதாக பிஸ்கட் அளவில்  செய்து preheat  செய்த oven

இல் 25  நிமிடம்  bake  செய்தால் கம்பு  ஓமம் பிஸ்கட்   ரெடி ....







இந்த  பிஸ்கட் இனிப்பு குறைவாக...ஓமம் வாசனை தூக்கலாக என...அருமையாக இருந்தது...



அன்புடன்

அனுபிரேம்





21 October 2016

திருவரங்கம் கொலு (2)...2016


அனைவருக்கும்  அழகான காலை வணக்கங்கள்..


முந்தைய பதிவான  திருவரங்கம் கொலு படங்களின் தொடர்ச்சி....





தெப்ப தேர்





தேர் உலா






























































அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை...இருந்தும் இங்கு பகிர வேண்டும் என்ற ஆசையில்  இந்த படங்களை எல்லாம்

ஸ்ரீரெங்கம்   வலைத்தளத்தில் இருந்து இங்கு பகிர்கிறேன்..



வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு

பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.



தொண்டரடிப் பொடியாழ்வார்


முதல் திருமொழி (874)


அன்புடன்

அனுபிரேம்





19 October 2016

திருவரங்கம் கொலு...2016

அனைவருக்கும்  அழகான காலை வணக்கங்கள்...


இந்த வருடம் திருவரங்கம் பெரிய  பெருமாள்  ஆலயத்தில் கொலு பார்க்கும்  சந்தர்ப்பம் அமைந்தது...


மிக அழகான நேர்த்தியான அமைப்புடன் கொலு  அமைக்கப்பட்டு இருந்தது...




 சுவாமி  ஸ்ரீ ராமானுஜரின்  ஆயிரமாம்  பிறந்த  ஆண்டை சிறப்பாக்கும்   வகையில் , ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில்  நவராத்திரி கொலுவில் ஆச்சார்யா  வாழ்க்கையின் முக்கியமான  நிகழ்வுகளை சித்தரிக்கும் விதமாக கொலு அலங்காரம் அமைக்கப் பட்டு  இருந்தது....

கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி  ஸ்ரீ ராமானுஜரின் துறவி தத்துவம் மற்றும் போதனைகள் வைத்து சித்தரிக்கப் பட்டு  இருந்தது....

காஞ்சிபுரம் கோவில் .. - மேல்கோட்டை கோவில் ..., மற்றும் வழிபாடு அவரது பயணம்..என பல்வேறு நிகழ்வுகளை காட்டுகிறது....

மிக அழகாக...கண்ணுக்கு நிறைவாக இருந்தன....


ஆனால் அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை...இருந்தும் இங்கு பகிர வேண்டும் என்ற ஆசையில்  இந்த படங்களை எல்லாம்

ஸ்ரீரெங்கம்   வலைத்தளத்தில் இருந்து இங்கு பகிர்கிறேன்....






































தொடரும்....





பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.



தொண்டரடிப் பொடியாழ்வார்


முதல் திருமொழி (873)




அன்புடன்

அனுபிரேம்...