16 March 2015

காடு ...

காடு


காடு என்பது பெரிய மலை மற்றும் அடர்ந்த மரங்களும் நிறைந்தது  என நினைத்து இருந்தேன்....

ஆனால் திருமணத்திற்கு பிறகு அங்கு ஊரில் காட்டிற்கு போவது பற்றி கூறுவதை கேட்கும் போது வித்தியாசமாக இருக்கும்....

சில நாட்களுக்கு பிறகு நானும் அவரோடு காட்டிற்கு சென்றேன்  .....
அப்பொழுதுதான் தெரிந்தது வானம் பார்த்த விளை நிலங்களையே அங்கு  காடு என  கூறுகிறார்கள் என (....எப்படி ....)

இப்ப வாங்க எங்க காட்டுக்கு பாேகலாம்...

இது எல்லாம் புரட்டாசி மாசம் பருத்தி போட்டப்ப எடுத்தது...

நாங்களும் ஒரு நாள் களை எடுக்க போனோம்...உஸ் அப்பா கஷ்டம்தான் ஆனாலும் பசங்கள அங்க அலசுட்டு போறதுல அத்தைக்கு ரொம்ப சந்தோசம் ....








பிரசன்னா 



நாங்க  எடுத்த களை 





பசங்களும் அவரும்...



கீர்த்தி 



பிரசன்னா ஒரே ஒரு பூல்லை புடுங்கி எடுத்திட்டு ...கடைசி வரைக்கும் நான் காட்டுல போயி வேலை செஞ்சேன்னு .....எல்லார் கிட்டவும் சொன்னார் ...

பாவம் அத்தை தான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தாங்க...ஆமாம் கலன்னு நெனச்சு  பருத்திய புடுங்கிடுவோம்னு ...

அன்புடன் 
அனுபிரேம் 


Image result for tamil quotes

13 March 2015

ஓட்ஸ் தோசை

  ஓட்ஸ் தோசை

வலை உலகில்  இந்த ஓட்ஸ் தோசை பற்றி  பல மாதங்களுக்கு முன்  பார்த்தேன்...(யாருடைய பதிவில் என்பது மறந்து வீட்டது ....sorry )  ....அதிலிருந்து மாதம் இரு முறை கண்டிப்பாக ஓட்ஸ் தோசை உண்டு ....இது மிகவும் மொருகளாக வருவதால் பசங்களுக்கும் ரொம்ப விருப்பம்...

ஓட்ஸ்சை உணவில் சேர்க்க  ரொம்ப நாளா ஆசை  ஆனால் ஓட்ஸ் கஞ்சி  எனக்கு பிடிப்பதில்லை அதனால் மாற்றாக  தோசை  ....இது  மிகவும் அருமையாக உள்ளது ...

செய்முறை

ரவை - 1 கப்

ஓட்ஸ் -1 கப்

தயிர் - 1 கப்

தோசை மாவு  -1 கப்

ரவையும் ,ஓட்ஸ்சையும் சேர்த்து தயிரில்  அரை மணி நேரம் ஊறவைக்கவும் ....பின் ஊற வைத்ததை மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும் ..இதனுடன் தோசைமாவை கலந்து மீண்டும் அரை மணி நேரம் விட்டு ...தோசை ஊற்றலாம் ...












அன்புடன் 
அனுபிரேம் 


Image result for tamil quotes

06 March 2015

இரயிலில் செல்லும் லாரிகள்



ஆம் தலைப்பே கூறும் கதை ...இரயிலில் செல்லும் லாரிகள்

இதுவும் கோகர்ண பயணத்தின் ஒரு பகுதி ....நாங்கள் இரயிலில் செல்லும் போது கொல்லூர் தாண்டியதும் ஒரு ரயில் நிறுத்தத்தில் ..ரயில்  வண்டியில் நெறைய லாரிகளை ஏற்றினார்கள்.....மிகவும் அதிசயமாக இருந்தது .....அழகாகவும்

அந்த படங்கள் உங்கள் பார்வைக்கு ...........

















ஆர்வமாக பார்க்கும் பிரசன்னா 























மேலும் சில அழகான  படங்கள்

வளைவில் 

குகையில் 


நீரில் 






அன்புடன் 
அனுபிரேம் 


Image result for tamil quotes

03 March 2015

சூரியனும் நாங்களும்

சூரியனும் நாங்களும்  .....

 சூரியனை படம் எடுப்பது  எப்போதும் எனக்கு ரொம்ப  பிடிக்கும் ...அதனால் கிளிக்கியவை  இவை...

கோகர்ண கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தில்  எடுத்தவை ...























அப்பாவுடன் 


அம்மாவின் கையில் 

எனது கரங்களில் 



பசங்களுடன்





அன்புடன்
அனுபிரேம்