Showing posts with label கடற்கரை. Show all posts
Showing posts with label கடற்கரை. Show all posts

28 June 2018

திற்பரப்பு நீர்வீழ்ச்சி


வாழ்க வளமுடன்...


அடுத்து நாங்கள் சென்ற இடம் திற்பரப்பு நீர்வீழ்ச்சி.


 ‘குமரி குற்றாலம்’ என அழைக்கப்படும் இது நாகர்கோவிலில் இருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோடை காலத்திலும் வற்றாத அருவி.






25 June 2018

விவேகானந்த கேந்திரம்,விவேகானந்தபுரம்

வாழ்க வளமுடன்


அடுத்த நாள் காலையில் நாங்கள் சென்ற இடம்   விவேகானந்த கேந்திரம்..

இங்கு உள்ள கடற்கரையில் சூரிய உதயம் காண்பதற்கு மிக  அழகாக  இருக்கும் என்று கேள்விப்பட்டதால்  காலை 6 மணிக்கு நாங்கள் அங்கு இருந்தோம்..



இந்த கடற்கரை காலை 6 மணி முதல் 7. 30 வரை மட்டுமே திறந்து இருக்கும்...



21 June 2018

சின்ன சின்ன...



வாழ்க வளமுடன்..


என்ன சின்ன சின்ன..

இன்று சின்ன சின்ன கவிதைகளின் தொகுப்பு...


சமீபத்திய ஊர் சுற்றலின் போது எடுத்த படத்தை எங்கள் நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப அங்கிருந்து வந்த சுட சுட கவிதைகளின் தொகுப்பு இது...





பகிர்ந்த படம் இது தான்...



19 June 2018

சன் செட் பாயிண்ட் (sunset point )

வாழ்க வளமுடன்..



sunset point ...காந்தி மண்டபத்திலிருந்து  கடற்கரை சாலையிலே செல்லும் போது இந்த இடத்திற்கு செல்லாம்..

ஆட்டோ...வேன் வசதிகளும் உண்டு..


பலர் சூரிய மறைவை காண இங்கு ஆவலுடன் காத்திருந்தனர்...






02 December 2016

ஆரோவில் கடற்கரை ( aurovile beach )..

அனைவருக்கும் வணக்கம்...


இதுவரை  புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  )..,,,


 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை    என   ரசித்தோம்....


இன்று


ஆரோவில் கடற்கரை -

 ஆரோவில் அருகில் உள்ளதால் ஆரோ கடற்கரை என குறிப்பிடப்படுகிறது.  அது ஆரோவிலின்  எதிர் புறம், ECR சாலையின்  வலது பக்கத்தில் அமைந்துள்ளது.  புதுவையில் இருந்து  12 கி.மீ. தொலைவில் உள்ளது...








 இது ஆழமற்ற மற்றும் சிறிய அலைகள் கொண்ட கடற்கரை.... மிகவும் பிரபலமான இடமாகவும்  உள்ளது...  வார இறுதிகளில் மக்கள் வருகையும் அதிகமாக இருக்குமாம்...



நாங்கள் சென்றது  பவுர்ணமி நிலவில்....எனவே அலைகளும் பெரிதாக   ஆர்ப்பரிப்புடன் இருந்தன....


பசங்களுடன் சென்று ரசிக்க தக்க இடம்....



இதுவரை  எங்கள்  புதுவை  பயணத்தின் பதிவுகளை ரசித்தமைக்கு மிகவும் நன்றி...

மீண்டும் ஒரு அழகான பதிவுடன் மீண்டும் சந்திக்கலாம்.....

நன்றி.....வணக்கம்....




அன்புடன்
அனுபிரேம்






25 November 2016

ஆரோவில் (Auroville ) --- புதுச்சேரி

அனைவருக்கும் வணக்கம்....



புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  ).. யை  இதுவரை ரசித்தோம்,,,,


இன்று காண இருப்பது  உதய நகரத்தை....


பாண்டிச்சேரி  நகரத்திலிருந்து   8 கிமீ   தொலைவில்   அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும்     ஆரோவில்  நகரம்   சர்வதேச  புகழ் பெற்ற நகரம்.  உலகம்   ஒன்றுதான்   என்பதை உணர்த்தும் வகையில்    124 நாடுகளில் இருந்து மண்   எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர்.





''மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே " ஆரோவில்லின் நோக்கமாகும் 'என்ற பிரகடனத்தோடு  ஸ்ரீஅரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது ஆரோவில் என்னும் சர்வதேச நகரமாகும். இது அவர்தம்   திருக்கனவில் உதித்ததாகும்.

'பழமையானவை, தற்காலத்தவை, புதியவை, இனிவரவிருப்பவை ஆகிய எல்லா மதங்களையும் விட்டு விட்டுக் குறிப்பாகத் தெய்வத் தன்மையுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்களுக்காக ஏற்பட்டதே ஆரோவில். தன்னுடைய உணர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்கான ஓர் இடம் இது 'என்று அன்னை பூமிப்பரப்பின் வரைபடத்தை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்தில் தொட்டுக் காட்டினார்.

பெரிய ஆலமரத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லாலான ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் கொணரப்பெற்று அங்கு இடப்பெற்றது.


நகரத்தின் மையத்தில் ஆரோவில்லின் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மையப்பகுதிக்கு பேரமைதி (அமைதி) என்று பெயர்.






மையப்பகுதிக்கு  செல்லும் வழி..






அழகிய குடில்..





மைய பகுதி....golden globe ..மாத்ரி மந்திர் ...

 நாங்கள் சென்றது மாலை மயங்கும் நேரத்தில்  ..அப்பொழுது இந்த மைய பகுதி பார்ப்பதற்கு....தக தக வென...மிகவும்   ஜொலித்தது
...





அங்கே வைக்கப் பட்டிருந்த  கல்வெட்டில் ஆரோவிலின் வரலாறு....









ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.



தொடரும்...


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..




அன்புடன்

அனுபிரேம்..


புதுச்சேரி ... ஊசிட்டேரி ஏரி (ousteri lake )..

அனைவருக்கும் வணக்கம்....


புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach ) யை ரசித்தோம்,,,,


இன்று செல்லபோவது படகு நிலையம்....ஊசிட்டேரி  படகு குழுமம்....

ஊசிட்டேரி  ஏரி   பாண்டிச்சேரிலிருந்து   10 கிமீ தொலைவில் உள்ள  மிகப்பெரிய ஏரி ஆகும். இது  புதுச்சேரி-விழுப்புரம் சாலையில்  390  ஏக்கர்  பரப்பளவில்,  ஒரு சரணாலயம் போன்று  பாதுகாக்கப்படுகிறது,



 இந்த  ஏரி விஜயநகர ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது...












இங்கு பல வகையான பறவைகள் காணப்படுகின்றன....
40 க்கும் மேற்பட்ட இடம் பெயரும் பறவைகள் வசிக்கின்றன... கோல்டன் Oriole, நாரை, வெள்ளை Ibis, மசோதா திறந்த நாரை, தையல்காரர் பறவை மற்றும்  Owlets வர்ணம் பூசிய தனிப்பட்ட பறவை இனங்கள் என பல பறவைகள் இங்கு உள்ளன...


நாங்கள் சென்ற மாலை வேளையில்  அங்கங்கே சில பறவைகள் தான் தெரிந்தன....






இங்கு படகு சவாரியும் அருமையாக இருந்தது...நாங்க பெடலிங் படகு எடுத்து..ஒரு மணிநேரம் சென்றோம்...


அமைதியான இடம்...



தொடரும்....




 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..





அன்புடன்

அனுபிரேம்





20 November 2016

புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )




புதுச்சேரி (பாண்டிச்சேரி )  பயணம்.....



 அடுத்து நாங்கள் பார்த்தது    புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...




புதுவை   கடலூர்  சாலைலிருந்து  8kms தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.

சுண்ணாம்பாறு கடலில் சேரும் இடத்தில் தீவு போன்ற அமைப்பு இருப்பதால் இது பாரடைஸ் பீச் என அழைக்கப்படுகிறது.


 இந்த சுண்ணாம்பாற்றில் படகு சவாரியும் விடப்படுகிறது. இதற்கென ஸ்பீடு படகு, சீ குரூஸ், பாண்டூன் படகு, வாட்டர் ஸ்கூட்டர் உள்ளிட்ட வித விதமான படகுகள் இயக்கப்படுகின்றன.

படகில் சென்றால்   நடுவில் உள்ள தீவு போன்ற இடத்தில் சில மணிகளை அனுபவிக்க விட்டு மீண்டும் அழைத்து வருவார்கள் என தகவல் சேகரிப்பு இடத்தில் கூறினர்...























கருக்கும் மழை மேகங்கள்...







நாங்கள் சென்ற போது படகு சேவையும் முடிந்து  இருந்தது... ஆனால்  அந்த இடமே அழகாக இருந்தது...அதனால் அதை மட்டும் ரசித்து விட்டு திரும்பினோம்....


தொடரும்.....





புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  )..,,,


 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..




அன்புடன்
அனுபிரேம்


18 November 2016

புதுச்சேரி (பாண்டிச்சேரி ) பயணம்.....



புதுச்சேரி எனவும் பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த நடுவண் அரசின் பிரதேசமாகும்.


இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது.


ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.





 எங்கள்  சுற்றுலா  இந்த முறை புதுவையில்.......





இனிவரும் பகுதிகளில்  புதுவையின் சில சுற்றுலா தளங்களை காணலாம்...


  "புரொமெனேட் பீச்" 



 "புரொமெனேட் பீச்"   என அழைக்கப்படும் இந்த  அழகிய கடற்கரையில் காந்திசிலை கம்பீரமாக காட்சித்  தருகிறது. இங்கிருக்கும் தூண்களில் அழகிய சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கிறது...


 மேலும் இந்த கடற்கரையில் தான்  பாண்டிச்சேரியின் தலைமை செயலகம் , கார்கில் நினைவுச்சின்னம், பழைய கலங்கரை விளக்கம்,போர் நினைவுச்சின்னம், பழைய சுங்கச்சாவடி, டூப்ளே சிலை  என அனைத்தும் அமைந்து உள்ளன....



இணையத்திலிருந்து















( இந்த முறை கடற்கரையில் எடுத்த  படங்கள் தெளிவாகவே  இல்லை...)



 ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் 


இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, 1666 அதாவது ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது . புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் .மணக்குள விநாயகரும் ஒருவர்...



    இக்கோவிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ணப்   படங்கள் வரையப்பட்டு நம்மை பிரமிக்க வைக்கிறது....

   அனைத்து படங்களும் ரொம்ப அழகு...


  இங்குள்ள   சுற்றுச் சுவரில்   40   விதமான   விநாயகரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது...








இணையத்திலிருந்து



இங்கு அருகிலே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் இருக்கிறது...இந்த முறை காண முடியவில்லை....அடுத்த முறை ஆசிரமம் கண்டிப்பாக செல்ல வேண்டும்....

தொடரும்...



புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  )..,,,


 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..



அன்புடன்
அனுபிரேம்