25 May 2017

சித்ராங்கதா...அன்பின் வணக்கங்கள்....இங்கு நான்  பகிரபோவது  நூலின்  விமர்சனம் அல்ல .. எனது வாசிப்பின் அனுபவம்...பல நாவல்களை வாசித்தும், வாசித்துக் கொண்டும்   இருக்கிறேன் ..பல புதிய நாவல் ஆசிரியர்கள் இணையத்திலே ....அவர்களின் தளத்திலே தங்களின் நாவல்கள் பகிர்கிறார்கள்...அதில் பயன்பெரும் பலபேரில் நானும் ஒருவள்....

அவ்வாறு   படித்த   நாவல்களில்   என்னை   மிகவும் கவர்ந்தவைகளையும் , பாதித்தவைகளையும்


...இந்த புத்தக அலமாரியில் அடுக்க போகிறேன்..

அதில் இன்று பகிர போவது     சித்ராங்கதா....


இந்நாவலின் ஆசிரியர் தமிழ் மதுரா.. அவரின் தளம்...20 May 2017

முதல் சிறுகதை.....


முதல் சிறுகதை  -----லட்சியம்


     எங்கள் ப்ளாக்கின் கேட்டு வாங்கிப் போடும் கதைக்காக  எனது முதல்  முயற்சியாக அமைந்த என் முதல்  எழுத்து.... .இந்த லட்சியம் 

எங்கள் ப்ளாக் வலைதளத்தில்..... எனது..... லட்சியம் சிறுகதை     வாய்ப்பு  அளித்து எழுத தூண்டிய  ஸ்ரீராம் சாருக்கும் ....எங்கள் ப்ளாக் தளத்தில் கதை வெளிவந்த அன்று பாராட்டி... வாழ்த்திய.... அன்பு நட்புக்களுக்கும் மிகவும் நன்றி... நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கம் மிகவும் பெரியது....என்றும் மறக்க இயலாததும்..

எனது அடுத்தகட்ட முயற்சிக்கான வித்துக்கள் அவை....என்றும் உங்கள் அனைவரின் நட்பும், உறவும் வாழ்க, வளர்க.....

18 May 2017

மோமோஸ்....


மோமோஸ்  சாப்பிட வாங்க....

நம்முரு கொழுக்கட்டை மாதிரி இருந்தாலும்...சுவை வித்தியாசமானது...சாப்பிடவும்  நல்லா  இருக்கும்...புதிய சுவையில் ..புதிய உணவுகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு...


மோமோஸ்'   என்று இங்கும்,

சீனாவில் 'மோமோ',

திபெத் நேபாளில் 'டம்ப்ளிங்'   என்று அழைக்கப்படும் இந்த உணவு

மங்கோலியாவில் புௗஸ்,

ஜப்பானில் Qyoza,

ஆப்கான், கொரியாவில் Mantu,

மொரிசியஸ்யில்  Dim sum   என்றெல்லாம் கூறப்படுகிறது.  


எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதானே?

 அதுபோலவே  நேபாளம், சிக்கிம், லடாக் மக்களின் பாரம்பரிய உணவை  எப்படி அழைத்தாலும்  சுவை ஒன்றுதான்.


ஆரம்பத்தில் மாமிசம் கலந்த மோமோஸ்களே பயன்பாட்டில் இருந்தன.

அதன் பரிணாம வளர்ச்சியாக  இப்போது வெஜ், பனீர், இறால், மோமோஸ் சூப் என்று கணக்கிலடங்காத வகைகளாக பரவி உள்ளது.....

மேலும் மோமோஸ் பத்தி தெரிச்சுகனுமா....

வெங்கட்  நாகராஜ் சார் தளத்தில் போய் பாருங்க....  சாப்பிட வாங்க: மாமோய்..... இது மோமோ! 


16 May 2017

ஏரிக் கரையோரம்....


அனைவருக்கும் வணக்கம்...


எங்க வீட்டின் அருகே உள்ள ஏரியின் அழகிய  காட்சி பதிவுகள் இன்று......
03 May 2017

உடையவர் திருநட்சத்திர விழா...

ஸ்ரீமதே ராமானுஜாய நம


 ராமானுஜர் 1000ம்  திருநட்சத்திர நாளான மே 1 அன்று,
காலை ராமானுஜர் நம்பெருமாள் சந்நிதி எழுந்தருளி அவரின் மரியாதைகளை பெற்றுக்கொண்டு .. வீதி வலம் வந்து தாயார் சந்நிதி மரியாதை பெற்று ..
உள் ஆண்டாள் சந்நிதி கோஷ்டி ஆகி அவரது சந்நிதிக்கு திரும்பினார் ..


ராமானுஜர் திருஉருவ சிலை25 April 2017

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம்...

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர்  திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்  இன்று (25.4.2017)..
24 April 2017

சுவாமி இராமானுஜர் 1௦௦௦ ஆம் ஆண்டு....ஸ்ரீமதே ராமானுஜாய நம:

சுவாமி  இராமானுஜர் 1௦௦௦ ஆம் ஆண்டு....1௦17ம் ஆண்டு அவதரித்து, 1137 ம் ஆண்டு வரை, 12௦ ஆண்டுகள் வாழ்ந்திருந்த இவர் ஸ்ரீ வைஷ்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்திற்குத் தூண் போன்றவர்....வரும்  ஹேவிளம்பி  ஆண்டு சித்திரை மாதம்  திருவாதிரை(1.5.2017)  அன்று இவர் அவதரித்து 1௦௦௦ ஆண்டுகள் நிறைவேறுகின்றன......


20 April 2017

உதய சூரியன்...


உதய சூரியன்...


மின்  கம்பங்களுக்கு 

போட்டியாக

தானும் ஏன் வரிசையில் 

நிற்கிறான்...-இந்த


உதய சூரியன்...!

13 April 2017

அழகு கலை சிற்பங்கள்..... தஞ்சைப் பெரியகோயில்( 5)வாழ்க வளமுடன்....


அனைவருக்கும் வணக்கம்...

முந்தைய பதிவில்

தஞ்சைப் பெரிய கோயிலை. . பற்றியும்,

அழகு நந்தி யையும்,...

வானளாவிய கோபுரத்தையும்,...

உலகின் பெரிய லிங்கத்தையும்   ரசித்தோம்...

இன்று அங்கு உள்ள அழகு கலை சிற்பங்களின் அழகை    காணலாம்....


11 April 2017

உலகின் பெரிய லிங்கம்... தஞ்சைப் பெரிய கோயில் (4)


வாழ்க வளமுடன்


அனைவருக்கும் வணக்கம்...

முந்தைய பதிவில்

தஞ்சைப் பெரிய கோயிலை. . பற்றியும்,

அழகு நந்தி யையும்,...

வானளாவிய கோபுரத்தையும்,... ரசித்தோம்...

இன்று  உலகின் பெரிய லிங்கத்தை காணலாம்....
உலகின் பெரிய லிங்கம்


பெரிய சிவலிங்கம்  - சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும்..... 13 அடி உயரம்!02 April 2017

வானளாவிய கோபுரம்... தஞ்சைப் பெரிய கோயில்( 3)..


வாழ்க வளமுடன்


அனைவருக்கும் வணக்கம்...


முந்தைய பதிவில்   தஞ்சைப் பெரிய கோயிலை.. பற்றியும்,

அழகு நந்தி  பற்றியும் பார்த்தோம்...

இன்று காணப் போவது வானளாவிய உயர்ந்த கோபுரத்தைப் பற்றி.....தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் 'பெரியகோயில்' என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானத்திற்கு  தக்ஷிணமேரு என்று  பெயர் ....

28 March 2017

தஞ்சைப் பெரிய கோயில்.. 2... அழகு நந்தி...


வாழ்க வளமுடன்


அனைவருக்கும் வணக்கம்...


முந்தைய பதிவில்   தஞ்சைப் பெரிய கோயிலை..பற்றி  பிரமிக்க ஆரம்பித்தோம்...பொதுவாக நந்தி போல் குறுக்கே நிற்காதே...என்பார்கள்...

ஆனால் இங்கு நந்தியே    விட்டே நகர முடியாத அளவு...அவரின் அழகு நம்மை கட்டிப் போடுகிறது...

அத்தகைய  பெரிய நந்தியை பற்றி பார்க்கலாம்...வாங்க...
26 March 2017

தஞ்சைப் பெரிய கோயில்..


அனைவருக்கும்  வணக்கம்....போன வருடம் தீபாவளி அன்று  சொந்தங்கள் அனைவரையும் கண்டு மகிழ்ந்து...மதியத்திற்கு மேல் தொலைக்காட்சி  பார்க்கும் சூழல்...

சரி..இந்த தொல்லைக்காட்சியை பார்ப்பதை விட சிறப்பான
  தஞ்சைப் பெரிய கோயிலை  சென்று  பார்க்காலம்  என திடீர் முடிவாக  கிளம்பி தஞ்சை பெரிய கோவிலை  சென்று தரிசித்தோம்......ரசித்தோம்......ஆஹா......என்ன ஒரு இடம்....பராமரிப்பும் அருமை.......கண்ணால் கண்டு அனுபவிக்க வேண்டிய ஒரு அருமையான இடம்....

இனி உங்கள் கண்களுக்கும் விருந்தாக...தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்  என்றும்  தஞ்சைப் பெரிய கோயில் அல்லது  தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும்   இக்கோவில்    சிவபெருமானுக்குரிய  ஸ்தலம்....21 March 2017

கோடை விடுமுறை....


கோடை  விடுமுறை....


பசங்களுக்கு இது  தேர்வு காலம்  பின்  கோடை விடுமுறை.... இரு மாதங்களுக்கு ....

விடுமுறையில் நாங்க பசங்களை எந்த வகுப்பிற்கும்  அனுப்புவது இல்லை.... வீட்டிலே  கற்பது...படங்கள் வரைவது ...கைவினை பொருட்கள் செய்வது.... சொந்தங்களுடன்  மகிழ்வது .....,  நிறைய விளையாடுவது என  பரபரப்பாக வைத்துக் கொள்வோம்....

17 March 2017

எள்ளு மிட்டாய்..


அனைவருக்கும் வணக்கம்...

இன்றைய பதிவில் எள்ளு மிட்டாய்...  .ஏற்கனவே ஒருமுறை  எள்ளு உருண்டை   பதிவிட்டேன்... அப்பொழுது  எள்ளை வறுத்து ,  பொடித்து செய்து இருந்தேன்...


ஆனால்   கடையில்   கிடைப்பது போல் முழு எள்ளாக உள்ள மிட்டாய்
செய்யும்  ஆசையால் விளைந்தது.. இந்தமுறை   செய்த  எள்ளு மிட்டாய்..
06 March 2017

பெண்மை

பெண்மை ....


பாரதியின் வரிகள் ....

பெண்மை    வாழ்கென்று   கூத்திடு   வோமடா!
பெண்மை   வெல்கென்று   கூத்திடு   வோமடா!
தண்மை      இன்பம்நற்   புண்ணியஞ்  சேர்ந்தன
தாயின்   பெயரும்   சதியென்ற  நாமமும்


25 February 2017

திருச்சேறை சாரநாதப் பெருமாள் கருட சேவையில்...


 சாரநாதப்பெருமாள் திருக்கோயில்- திருச்சேறை (தஞ்சாவூர்)


        இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.

   முன்பு   இத்திருத்தலம்   திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது.

   

     மூலவர்    : சாரநாதப்   பெருமாள்

     தாயார்     : சாரநாயகி - பஞ்சலெட்சுமி

     தீர்த்தம்   : சார புஷ்கரிணி

 23 February 2017

மதுரமங்கலம்..

எம்பார் ஸ்வாமிகளின் (எம்பெருமானார் என்கிற கோவிந்த பட்டர்) அவதார ஸ்தலம்...மதுரமங்கலம்..சென்னையில் இருந்து 60 km தொலைவில் உள்ளது மூலவர்       : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்

 தாயார்       : கமலவல்லி

புஷ்கரணி: கருட புஷ்கரணி


       இந்த க்ஷேத்ரம் எம்பார் ஸ்வாமிகளின் அவதார ஸ்தலம். எம்பார் சுவாமிகள் ஸ்ரீ ராமானுஜர் பிறந்து 9 ஆண்டுகள் கழித்து அவதரித்தவர்.

17 February 2017

ரதசப்தமி உற்சவம்...திருநீர்மலை


திருநீர்மலை ...

    திருநீர்மலை திவ்ய தேசம், சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. தூரத்தில் உள்ளது...இங்கு    ரதசப்தமி உற்சவம்  கடந்த 3.2.2௦17    அன்று நடைப்பெற்றது....


        நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர் என  நான்கு தோற்றங்களில் பெருமாள் அருளும் தலம் திருநீர்மலை.


07 February 2017

சமயபுரம் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ( 6.2.2௦17)..   திருச்சியில் பிரசித்த பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேம் நேற்று ( 6.2.2௦17) நடைபெற்றது.

  திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன்   கோவில்   600   ஆண்டுகள்   பழமையானது.   2016 ம் ஆண்டு  ஜுலை   மாதம்   மாரியம்மன்   மூலஸ்தானம்   பாலாலயம் செய்யப்பட்டு   திருப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  அருமையான அத்தகைய நிகழ்வின் சில படங்கள்...


01 February 2017

திருநாங்கூர் கருட சேவை -ஜனவரி 2017

அப்பாவின் பார்வையில்...


( அப்பா சென்று சேவித்து ..அனுப்பிய படங்கள் )


சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் 11 பெருமாள்கள் எழுந்தருளும் தங்க கருட சேவை உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) நடைப்பெற்றது....27 January 2017

அய்யனார் கோவில், மேலூர், திருவரங்கம்அருள்மிகு  கரைமேல் அழகர் காடைப்பிள்ளை அய்யனார் திருக்கோவில், மேலூர், திருவரங்கம் , திருச்சி -6...


 திருவரங்கத்தின்  மேற்கே 3 km தொலைவில்..   மேலூர் கிராமத்தில்  காவேரி ஆற்றுக்கும்  மலட்டாற்றுக்கும்  இடையில் உள்ள நடுக் கரையில்  உள்ள அழகான , சக்தி வாய்ந்த திருக்கோவில்....மூலவர் காடைப் பிள்ளை அய்யனார் யோக நிலையில் அமர்ந்து அருள் புரிகிறார்...

பூர்ண, புஸ்களாம்பிகை களுடன் உற்சவர் அருள் புரிகிறார்...மலட்டாற்றிலிருந்து  கோவில்

மலட்டாறு

கோவிலின் முகப்பு

காவேரி கரையில்

காவேரி

காவேரி கரையிலிருந்துபோன வருடம்  தை மாதம்  காவிரியில் நீர் இருந்த போது  எடுத்த படங்கள்....


ஸ்தல வரலாறு அடுத்த பதிவில்...

தொடரும்..


ஸ்தல பெருமைகள்...

அன்புடன்
அனுபிரேம்25 January 2017

பூக்கோலத்துடன் ...


அனைவருக்கும் வணக்கங்கள்...


இங்கு எங்கள் பகுதியில் உள்ள  ஏரிக்கரையில் போன மாதம் நடைப் பெற்ற " kare hebba "  என்னும்  நிகழ்வில் எடுத்த படங்கள் இன்று உங்கள் ரசிப்புக்கு.......

பசங்க...
20 January 2017

ஏறுதழுவல்...

அனைவருக்கும் வணக்கம்...


என்னுடைய  பதிவுகளில்   அரசியலோ, சினிமாவோ அல்லது சமுகம் சார்ந்த பிரச்சினைகள் சார்ந்தோ எதுவும் இருக்காது....ஏன்னெனில்  இதுவரை அவ்வாறு எதுவுமே எழுதியது இல்லை.....இனியும் எழுதுவேனா  என  தெரியவில்லை  😕😕.... எழுத  கூடாது என்று இல்லை ..எழுத தெரிவதில்லை...(....😢  )
ஆனால் இப்பொழுது நாடு முழுவதும் உள்ள எழுச்சியை காணும்போது பெரும் வெள்ளத்தில்...ஒரு துளியாவது நாமும் சேர்க்க வேண்டும் என்ற அவாவில் தான் இப்பதிவு...

இங்கும் நான் எனது கருத்துகளையோ....மற்றவரின் எண்ணங்களையோ  பகிரவில்லை...


விக்கிபிடியாவில்   கிடைத்த ஏறுதழுவல் நிகழ்வின் வரலாற்றையே பகிர்கிறேன்..இவை அனைவரும் அறிந்தது என்றாலும் நம் மரபை வாசிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது....


ஏறுதழுவல்  அல்லது  சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு)  


     என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை   ஓடவிட்டு   அதை   மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து    வீழ்த்துவதான விளையாட்டு.


பெயர்க்காரணம்


    சல்லி   என்பது   விழாவின்   போது   மாட்டின்  கழுத்தில் கட்டப்படுகிற   வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.


வகைகள்


சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.

வேலி ஜல்லிக்கட்டு -

வேலி   மஞ்சுவிரட்டு   எனப்படும்   விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.வாடிவாசல் ஜல்லிக்கட்டு -


மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.வடம் ஜல்லிக்கட்டு -


வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

வரலாறு 

ஏறுதழுவலை   சித்தரிக்கும்   ஒரு   கல்வெட்டு
பழந்தமிழ்   இலக்கியங்களிலும்,   சிந்துவெளி   நாகரித்திலும் ஏறுதழுவல்   நிகழ்ந்ததற்கான  சான்றுகள் உள்ளன.


ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் 'கொல்லேறு தழுவுதல்' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.


   புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்


சங்க இலக்கியமான கலித்தொகை

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்.என்றுரைக்கிறது.


 அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை:

 ". கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்" என்பதாகும்.

பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.


பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.இத்தகைய  மரபை  காக்க   (  ஒற்றுமையாக, அமைதியாக  )  போராடும்  நம் இனத்திற்கு வாழ்த்துக்கள்...LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...