14 November 2017

திரு இந்தளூர்...


திரு இந்தளூர் ... ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள் கோயில், மாயவரம்



இந்த எம்பெருமானுக்கு சுகந்தன்-  என்று பெயர்!

 பரிமளம் வீசுபவன்! அழகிய தமிழில் மரு இனிய மைந்தன்!

அவர் மேனியில் எப்போதும் ஒரு சுகந்தம், வாசனை வீசும்!

அதானால் பரிமள ரங்க நாதன்!

மது-கைடப அசுரர்கள் அபகரிப்பால் பொலிவிழந்த வேதங்களுக்கு மீண்டும் நறுமணம் வீசச் செய்தவனும் கூட!

கருவறையில், அரங்கன் தலை மாட்டில் காவிரி அன்னையும்,
 கால் மாட்டில் கங்கை அன்னையும் உள்ளார்கள்!


தாயார்: ஸ்ரீ பரிமள ரங்க நாயகி

மூலவர்: பரிமள ரங்கநாதன்


 கடந்த வாரம்  அங்கு  நடைபெற்ற கருட சேவையின் சில படங்கள் இன்று ...








சேஷ வாகனத்தில்..




கருட சேவையின் போது மக்கள் வெள்ளத்தில்  பெருமானே படம் எடுப்பது எளிதா என்ன...அதனால் தான் சில தெளிவில்லா படங்கள்...









நும்மைத் தொழுதோம்*  நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்*
இம்மைக்கு இன்பம் பெற்றோம்*  எந்தாய் இந்தளூரீரே*
எம்மைக் கடிதாக் கருமம் அருளி*  ஆவா! என்று இரங்கி*
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்*  நாங்கள் உய்யோமே?

1328. 


அன்புடன்

அனுபிரேம்...

9 comments:

  1. அழகிய தரிசனம் நன்று நன்றி

    ReplyDelete
  2. திவ்விய தரிசனம் கிடைத்தது படங்கள் அருமை அனு

    ReplyDelete
  3. நேற்றே ஸ்ரீபரிமளரங்கனின் தரிசனம் ஆயிற்று..
    இணையம் சரியில்லாததால் கருத்துரையிட இயலவில்லை..

    பெருமாள் தரிசனம் பெரும் புண்ணியம்.. வாழ்க நலம்..

    ReplyDelete
  4. அழகிய படங்கள் வாயிலாக சுக தரிசனம்.

    ReplyDelete
  5. நாகதம்பிரான் வாகனம் மிக அழகு..🐍

    ReplyDelete
  6. மாயவரத்தில் இருந்த போது அடிக்கடி பெருமாள் தரிசனம் செய்வோம்.
    இன்று உங்கள் தளத்தில் தரிசனம் செய்தேன்.
    நன்றி அனு.

    ReplyDelete
  7. மாயவனின் அழகிய தரிசனம். பகிர்வுக்கு நன்றி அனு.

    ReplyDelete
  8. இந்தக் கோயில் சென்றதில்லை. படங்கள் அழகு அதன் மூலம் தரிசனமும். மிக்க நன்றி சகோதரி/அனு

    ReplyDelete