Showing posts with label தோட்டம். Show all posts
Showing posts with label தோட்டம். Show all posts
23 April 2019
14 April 2019
08 April 2019
02 April 2019
18 August 2017
பொன்னாங்கண்ணி கீரை..
பொன்னாங்கண்ணி கீரை......
சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.
இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.
பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.
மேனியை பளபளக்கச் செய்யும்.
நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணி கீரை....
![]() |
16 September 2016
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரை........
சில வாரங்களுக்கு முன் எங்கள் ப்ளாக் கில் வெந்தயக் கீரை பயிர் செய்வது பற்றி ஹாபி பதிவு வந்தது...
அதை பார்த்தவுடன் நாங்களும் முயற்சித்தோம்...மிகவும் செழிப்பாக வளர்ந்தது...,, நன்றி எங்கள் ப்ளாக் ..
அந்த கீரையை வைத்து செய்த சமையல் இன்று...
வெந்தயக் கீரை சாம்பார் / தால்
வெந்தயக் கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
வேகவைத்த துவரம் பருப்பு, பாசி பருப்பு - 1 கப்
மி.தூள் - 2 ஸ்பூன்
உப்பு
தாளிக்க
வடகம் - சிறிது
செய்முறை..
- வெந்தயக் கீரையில் கலோரி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன.
- வெந்தயக் கீரையை தினமும் சமைத்து சாப்பிட்டால் கபம், சளி போன்ற நோய்கள் விரைவாக குணமடையும்.
- சுறுசுறுப்பு தன்மையற்று மந்த நிலைமையை உணர்பவர்கள் அல்லது உடல் சோர்வுத் தன்மையை உணர்பவர்கள் வெந்தயக் கீரை தினமும் சமைத்து சாப்பிட்டால், உடலின் செயலாற்றல் அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
- வெந்தயக் கீரையை நம் அன்றாட உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
- நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபட வைக்கிறது.
- வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவுகிறது.
- வெந்தயக் கீரை குளிர்ச்சி தன்மையை தருவதால் உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள், வெந்தயக் கீரை சாப்பிடுவதால் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியைத் தருகிறது.
சில வாரங்களுக்கு முன் எங்கள் ப்ளாக் கில் வெந்தயக் கீரை பயிர் செய்வது பற்றி ஹாபி பதிவு வந்தது...
அதை பார்த்தவுடன் நாங்களும் முயற்சித்தோம்...மிகவும் செழிப்பாக வளர்ந்தது...,, நன்றி எங்கள் ப்ளாக் ..
![]() |
![]() |
![]() |
அந்த கீரையை வைத்து செய்த சமையல் இன்று...
வெந்தயக் கீரை சாம்பார் / தால்
வெந்தயக் கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
வேகவைத்த துவரம் பருப்பு, பாசி பருப்பு - 1 கப்
மி.தூள் - 2 ஸ்பூன்
உப்பு
தாளிக்க
வடகம் - சிறிது
செய்முறை..
வடகத்தை தாளித்து ..
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும் ... பிறகு நறுக்கிய வெந்தய கீரையும் சேர்த்து வதக்கி...
மி.தூள் , உப்பு சேர்க்க வேண்டும்....
கடைசியாக வேகவைத்த துவரம் பருப்பு, பாசி பருப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்க ...
சுவையான வெந்தய கீரை சாம்பார் / தால் ரெடி...
இது சூடான சாதத்திற்கும் , சப்பாத்திக்கும் நல்ல இணை உணவு...
அன்புடன்
31 July 2015
பாகற்காய் கொடி
அன்பான காலை வணக்கங்கள்...
இன்று பாகற்காய் பதிவு ...
பாகற்காய் பற்றிய சில தகவல்கள் (இணையத்தில் இருந்து )...
அன்புடன்
அனுபிரேம்

இன்று பாகற்காய் பதிவு ...
பாகற்காய் பற்றிய சில தகவல்கள் (இணையத்தில் இருந்து )...
- பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா.
- குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.
- பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. * 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத்தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.
- உடற்செயலின் போது 'சாரான்டின்' எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளுகோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் 'டைப்-2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய்.
- பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும்.
- சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.
- பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும்.
- ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.
- வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.
- பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இப்ப வாங்க பாகற்காய் கொடி பார்க்க போலாம் ....ஏற்கனவே எங்க காட்டில் உள்ள பாகற்காய்களை பார்த்தீர்கள்... இன்று எங்க வீட்டு தொட்டியில் உள்ளவை... ..ஊர்லேந்து வந்த பாகற்காயில் சில பழுத்து விட்டதால் தொட்டியில் போட்டேன் ...எல்லாம் வளர்ந்து சின்ன சின்ன பாகற்காயை தந்தது...
![]() |
| பூ |
அன்புடன்
அனுபிரேம்
17 April 2015
காடு 2...
அனைவருக்கும் வணக்கங்கள் ...
ஏற்கனவே எங்க காட்டை பற்றி பார்த்திங்க .... இப்போ இன்னும் சில படங்கள்
இவை எல்லாம் தை மாசம் பொங்கலுக்கு போன போது எடுத்தவை .....
பருத்தி காடும் ...இடையில் காய்கறி செடிகளும்....
இங்கு உள்ள படங்கள் எல்லாம் கீர்த்தி எடுத்தவை ......
ஏற்கனவே எங்க காட்டை பற்றி பார்த்திங்க .... இப்போ இன்னும் சில படங்கள்
இவை எல்லாம் தை மாசம் பொங்கலுக்கு போன போது எடுத்தவை .....
பருத்தி காடும் ...இடையில் காய்கறி செடிகளும்....
| பிரசன்னா சொரக்காவுடன் |
| பருத்தி பூ |
| வானம் பார்த்த வெண்டை ... |
| பாகற்காய் |
| எங்களுக்கு பேக் ஆன காய்கறிகள் |
| வளர்ந்த சொரக்காய் |
| கீர்த்தி ... |
இங்கு உள்ள படங்கள் எல்லாம் கீர்த்தி எடுத்தவை ......
அன்புடன்
அனுபிரேம்

16 March 2015
காடு ...
காடு
காடு என்பது பெரிய மலை மற்றும் அடர்ந்த மரங்களும் நிறைந்தது என நினைத்து இருந்தேன்....
ஆனால் திருமணத்திற்கு பிறகு அங்கு ஊரில் காட்டிற்கு போவது பற்றி கூறுவதை கேட்கும் போது வித்தியாசமாக இருக்கும்....
சில நாட்களுக்கு பிறகு நானும் அவரோடு காட்டிற்கு சென்றேன் .....
அப்பொழுதுதான் தெரிந்தது வானம் பார்த்த விளை நிலங்களையே அங்கு காடு என கூறுகிறார்கள் என (....எப்படி ....)
இப்ப வாங்க எங்க காட்டுக்கு பாேகலாம்...
இது எல்லாம் புரட்டாசி மாசம் பருத்தி போட்டப்ப எடுத்தது...
நாங்களும் ஒரு நாள் களை எடுக்க போனோம்...உஸ் அப்பா கஷ்டம்தான் ஆனாலும் பசங்கள அங்க அலசுட்டு போறதுல அத்தைக்கு ரொம்ப சந்தோசம் ....
பிரசன்னா ஒரே ஒரு பூல்லை புடுங்கி எடுத்திட்டு ...கடைசி வரைக்கும் நான் காட்டுல போயி வேலை செஞ்சேன்னு .....எல்லார் கிட்டவும் சொன்னார் ...
பாவம் அத்தை தான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தாங்க...ஆமாம் கலன்னு நெனச்சு பருத்திய புடுங்கிடுவோம்னு ...

| பிரசன்னா |
| நாங்க எடுத்த களை |
| பசங்களும் அவரும்... |
| கீர்த்தி |
பிரசன்னா ஒரே ஒரு பூல்லை புடுங்கி எடுத்திட்டு ...கடைசி வரைக்கும் நான் காட்டுல போயி வேலை செஞ்சேன்னு .....எல்லார் கிட்டவும் சொன்னார் ...
பாவம் அத்தை தான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தாங்க...ஆமாம் கலன்னு நெனச்சு பருத்திய புடுங்கிடுவோம்னு ...
அன்புடன்
அனுபிரேம்
16 December 2014
தக்காளி ......
காலை வணக்கம் ....
எங்க தக்காளி செடியில் காய்த்தவை ....இதை பார்த்து பிரசன்னா முதலில் நெல்லிக்காய் என்றார் பின் ஆப்பிள் என்றார்...கடைசி யாக பழம் பழுத்த உடன் தான் தக்காளி என ஒத்துக் கொண்டார் ... 7,8 பழம் காய்த்தது ....
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
அன்புடன்
அனுபிரேம்

Subscribe to:
Posts (Atom)
-
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...