கடந்த ஜுலை 7ம்தேதி (2017) நம்பெருமாளின் ஜ்யேஷ்டாபிஷேகம்
(பெரிய திருமஞ்சனம்) ...
"ஜேஷ்டா" என்றசமஸ்கிரத சொல்லுக்கு "பெரிய '" என்று பொருள்.... ஜ்யேஷ்டா" நக்ஷத்திரம் (கேட்டை ) என்றால் பெரிய நக்ஷத்திரம் என்றும் பொருள் கொள்ளலாம் ...
அரங்கனுக்கு வருடாவருடம் ,....
ஆனி மாதம், ஜ்யேஷ்டா (கேட்டை ) நக்ஷத்திரத்தன்று ,விசேஷமாக திருமஞ்சனம் நடைபெறும் ....
இந்த ஆனி மாதத்தில், ஜ்யேஷ்டா நக்ஷத்திரத்தில் ,
"பெரிய நதியான" தென் திருக்காவிரிலிருந்து ,
"பெரிய கோபுரமான " ராஜ கோபுரத்தின் வழியே ,
தீர்த்தம் கொண்டு வரப்பட்டு,
விசேஷமாக ,"பெரிய கோயிலான" அரங்கன் ஆலயத்தினில் உள்ளே எழுந்தருளிக் கொண்டிருக்கும் அரங்கனுக்கு ,
பெரிய திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படும் ....
பெரிய நட்சத்திரத்தில் ,
பெரிய நதியில் இருந்து ,
பெரிய கோபுரத்தின் வழியே ,
பெரிய அளவில் (28 குடங்களில் ),
பெரிய கோயிலில் உள்ள ,
பெரிய பெருமாளுக்கு ,
பெரிய அளவில் ,
வெகு விமரிசையாக நடைபெறும் ,திருமஞ்சனம் என்பதாலேயே இதற்கு "பெரிய திருமஞ்சனம்" என்று பெயர்.....
வருடத்தில் பதினோரு மாதங்கள் ,(ஐப்பசி தவிர ) ஸ்ரீரங்கத்தின் வடக்கு பகுதியில் ஓடும் ,வட திருக்காவிரியில் இருந்து ,யானை மீது தீர்த்தம் கொண்டு வரப்படும் .....
ஆனால் இந்த "பெரிய திருமஞ்சனத்திற்கு " மட்டும் வழக்கம்போல், கொள்ளிடக்கரையிலிருந்து தீர்த்தம் எடுக்காமல், ஸ்ரீரங்கத்தின் தெற்குப் பகுதியில்- அம்மா மண்டபத்தின் காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள்...
( ஆனால் இந்த வருடம் அம்மா மண்டபத்தில் நீர் இல்லாதலால் ..கொள்ளிடக்கரையிலிருந்து தீர்த்தம் எடுத்தார்கள்..)