27 September 2016

சிரிக்கும் பூக்கள்..

சிரிக்கும் பூக்கள்....


அழகாக சிரிக்கும் பூக்களின் அணிவகுப்பு இன்று...அன்புடன்

அனுபிரேம்

21 September 2016

இரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை

ரமண மகரிஷியின் ஆசிரமம்,திருவண்ணாமலை


போன மாதம் இரமண மகரிஷியின் ஆசிரமம்,  காணும் வாய்ப்பு கிடைத்தது.....அதை பற்றிய ஒரு சிறிய பதிவு...

இரமணரை பற்றி..        அத்வைத வேதாந்த   நெறியை  போதித்த   இவர்  விருதுநகர் மாவட்டம்  திருச்சுழியில்  1879 ம்  ஆண்டு டிசம்பர் 30  ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள்  ஆகியோருக்கு  மகனாகப் பிறந்தார். இவருக்கு  நாகசுவாமி  என்கிற மூத்த சகோதர் உண்டு.   இவரது இயற்பெயர்  வேங்கடராமன்.   இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.


      ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டு ... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கம்  இரமணருக்கு  ஏற்பட்டது.

      அவரது 17 ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.

         இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு "ரமண மஹரிஷி" எனப் பெயர் சூட்டப்பட்டது. அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.

முதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950   ஏப்ரல் 14 இல்...
.


     இரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்'    என்னும் ஆன்ம விசாரம்.  ஞான   மார்க்கத்தில்   தன்னை அறிதல்  அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம்.   உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.

         ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.

      ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம். ...


ஆசிரமம் 

             இரமண மகரிஷியின் ஆசிரம நுழைவாயில் மிகவும் அழகாக அமைந்து இருக்கிறது.  ஆசிரமத்தை சுற்றி இருக்கும் இடங்களில் நிறைய மரங்கள் வளர்ந்து பசுமையாக காணப்படுக்கிறது. இதில் 450 வருட பழமையான மரம் ஒன்று மிக நேர்த்தியாக உள்ளது.ஆசிரம நுழைவாயில்       
  ஆசிரமத்தின் உள்ளே...   ரமண மகரிஷியின் சமாதி மீது அழகிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் நான்கு தூண்கள் நிறுத்தப்பட்டு அதன் மேல் ஓர் விமானம் நிறுவப்பட்டுள்ளது.

அங்கு மக்கள் அமர்ந்து தியானம் செய்கின்றனர்..

மயில்களும்  நம் முன்னே  நடமாடி ....இவ்விடத்தையே அழகாக்குகின்றன.....


நாங்கள் சென்ற போது மதிய நேரம் ...அன்னதானமாக அனைவருக்கும்  உணவு வழங்கினார்கள் ...பல  ஆதரவற்றோர்கள் வந்து  உணவை உண்டனர்....மிகவும் சிறப்பான....பாராட்டுதளுக்கு  உரிய ...அரிய சேவை...

நாங்கள் சிறிது நேரம் மட்டும் இருந்து ஆசிரமத்தை  ரசித்து  விட்டு ...புறப்பட்டோம்...


ஆனால் மீண்டும் வரவேண்டும் என்ற எண்ணத்துடன்...


அன்புடன்

அனுபிரேம்

16 September 2016

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை........  • வெந்தயக்  கீரையில் கலோரி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன.  • வெந்தயக் கீரையை தினமும் சமைத்து சாப்பிட்டால் கபம், சளி போன்ற நோய்கள் விரைவாக குணமடையும்.  • சுறுசுறுப்பு தன்மையற்று மந்த நிலைமையை உணர்பவர்கள் அல்லது உடல் சோர்வுத் தன்மையை உணர்பவர்கள் வெந்தயக் கீரை தினமும் சமைத்து சாப்பிட்டால், உடலின் செயலாற்றல் அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

  • வெந்தயக் கீரையை நம் அன்றாட உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.  • நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபட வைக்கிறது.

  • வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவுகிறது.

  • வெந்தயக் கீரை குளிர்ச்சி தன்மையை தருவதால் உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள், வெந்தயக் கீரை சாப்பிடுவதால் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியைத் தருகிறது.


சில வாரங்களுக்கு முன் எங்கள் ப்ளாக் கில் வெந்தயக்  கீரை பயிர் செய்வது பற்றி  ஹாபி பதிவு வந்தது...


அதை பார்த்தவுடன்  நாங்களும் முயற்சித்தோம்...மிகவும் செழிப்பாக வளர்ந்தது...,, நன்றி எங்கள் ப்ளாக் ..


அந்த கீரையை  வைத்து செய்த சமையல் இன்று...

வெந்தயக் கீரை  சாம்பார் / தால்


வெந்தயக் கீரை - 1 கட்டு

பெரிய வெங்காயம்     - 2

தக்காளி                  - 2   

வேகவைத்த துவரம் பருப்பு, பாசி பருப்பு  - 1 கப்

மி.தூள்   - 2     ஸ்பூன்

உப்பு

தாளிக்க

வடகம்  - சிறிது


செய்முறை..


வடகத்தை தாளித்து ..
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும் ... பிறகு   நறுக்கிய வெந்தய கீரையும் சேர்த்து வதக்கி...
மி.தூள் ,  உப்பு சேர்க்க வேண்டும்....
கடைசியாக  வேகவைத்த துவரம் பருப்பு, பாசி பருப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்க  ...
சுவையான வெந்தய கீரை  சாம்பார் / தால்  ரெடி...


இது சூடான  சாதத்திற்கும் , சப்பாத்திக்கும் நல்ல இணை உணவு...


அன்புடன்

அனுபிரேம்12 September 2016

செடியில் முளைந்த விலங்குகள்...

அனைவருக்கும்  வணக்கம்..லால்பாக் மலர் கண்காட்சியில் இடம் பெற்ற  அழகு மயிலின் படங்களை  பார்தீர்கள்.... இன்று செடியில் முளைந்த விலங்குகள் .....


ஆம்...மிகவும் கலை நயத்துடன் இந்த செடிகள் பராமரிக்கப் படுகின்றன..

மழையின் காரணமாக படங்கள் தான் தெளிவாக வரவில்லை..


அன்புடன்

அனுபிரேம்


05 September 2016

விநாயகர்.... தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 7

அனைவருக்கும்  காலை வணக்கங்கள் ....


       
     விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களுடன் மீண்டும் ஒரு   தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் ...       இன்றைய ஓவியத்தில் விநாயகர்  தாமரை மேல் அமர்ந்து  அருள் புரிகிறார்..
..

முந்தைய ஓவியங்கள் ...

யசோதை கண்ணன்

கண்ணன் தாமரையுடன் .....

பெருமாளும் தாயாரும்

விநாயகர்  ....

மாப்பிள்ளை கிருஷ்ணர் ...

ராதை கிருஷ்ணர்  ...விநாயகனே வினை தீர்ப்பவனே
வேல முகத்தோனே ஞால முதல்வனே...!

குணநிதியே குருவே சரணம்
குணநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேல முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே...!

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேல முகத்தோனே ஞால முதல்வனே...!பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்...!


பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார் ...!


ஆற்றங்கரை   ஓரத்திலே 
அரச மரத்தின்   நிழலிலே
வீற்றிருக்கும்   பிள்ளையார்
 வினைகள் தீர்க்கும்   பிள்ளையார்...!


மஞ்சளிலே   செய்திடினும் 
மண்ணினாலே   செய்திடினும்
ஐந்தெழுத்து   மந்திரத்தை 
நெஞ்சில்  ஆழ்த்தும்  பிள்ளையார் ...!


அவல்  பொரிகடலையும் 
அரிசி மாவு  கொழுக்கட்டையும்
கவலையின்றி தின்னுவார் 
கஷ்டங்களை போக்குவார்...!


வன்னி மரத்தின் நிழலிலே 
வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வ மரத்தின் நிழலிலே 
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்...!


கலியுகத்து விந்தைகளைக்
 காண வேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே
 இஷ்டம் போலச் சுற்றுவார் ...!


ஆறுமுக வேலனுக்கு
 அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் 
நீக்கி வைக்கும் பிள்ளையார்...!


பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்...!அன்புடன் ..

அனுபிரேம் 


03 September 2016

அழகு மயில்....வணக்கம்லால்பாக் மலர் கண்காட்சியில் இடம் பெற்ற  அழகு மயிலின் படங்கள் இன்று.....அருவியாக ஊற்றும் பூக்கள்...

   

இருநூறு ஆண்டுகள்  பழமையான  பருத்தி மரம்


தக்காளி, குடை மிளகாய் களால் ஆன மயில்...அன்புடன்

அனுபிரேம்