Showing posts with label அப்பாவின் பார்வையில்.... Show all posts
Showing posts with label அப்பாவின் பார்வையில்.... Show all posts

17 September 2020

பஞ்சதுவாரகா தரிசனம் ...

 வாழ்க வளமுடன் 

துவாரகை - துவாரகா குஜராத் மாநிலத்தின் தேவபூமி. 




13 November 2019

ராஜ முடி சேவையும் , அஷ்ட தீர்த்த உற்சவமும் - மேல்கோட்டை


வாழ்க வளமுடன் 

மைசூர் அரச பரம்பரையில் வந்த மன்னர்களில் கிருஷ்ணராஜ உடையார் வைரமுடியைப் போலவே மற்றொரு கிரீடத்தை மேல்கோட்டை பெருமானுக்கு அளித்தார். இதை கிருஷ்ணராஜ முடி என்று புத்தகங்கள் சொன்னாலும், மக்கள்  ராஜ முடி என்றே அழைக்கின்றனர்.

 ராஜ முடி அணிந்துக்கொண்டு நிஜமாகவே , இளவரசன் போல நடந்து செல்கிறார் டெல்லியிலிருந்து இராமானுர் கூப்பிடக்குரலுக்காக ஒடி வந்த இராமப்பிரியர் .


17 April 2019

திருக்குறுங்குடி கருடசேவை

வாழ்க வளமுடன் 


திருக்குறுங்குடி ஸ்ரீ வைஷ்ணவ நம்பி திருப்பங்குனி ப்ரம்மோத்ஸவம்



23 February 2019

ஸ்ரீவில்லிப்புத்தூர் காட்டழகர் திருக்கோவில்

வாழ்க வளமுடன்


காட்டழகர் திருக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  15 கி.மீ தூரத்தில்  அமைந்துள்ளது.


09 February 2019

திருநாங்கூர் கருட சேவை - 2019

திருநாங்கூர் பதினொரு கருட சேவை 

தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னதியில்  கருடசேவை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.


07 July 2018

வீரநாராயணப்பெருமாள், காட்டுமன்னார்குடி..



நாதமுனிகள் (ஆனி – அனுஷம்)


ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே

ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே

பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே

பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே

கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே

கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே

நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே

நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே






22 June 2018

மரக்காணம் - ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில்

வாழ்க நலம்



விழுப்புரம் மாவட்டம் , மரக்காணத்தில்  உள்ள

ஸ்ரீ ராதா ருக்மணி சமேத  ஸ்ரீ வேணுகோபால சுவாமி  திருக்கோவிலில் நடைபெற்ற உற்சவத்திலிருந்து சில படங்கள் இன்று தங்கள் பார்வைக்கு..



அப்பாவின் பார்வையாக...



22 February 2018

ஆயிரம் தடா வெண்ணெய், தேரழுந்தூர் ...


முந்தைய பதிவில் திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில்  கருட சேவையை தரிசித்தோம்...


இன்று திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் ஆயிரம் தடா வெண்ணெய் படைத்து சிறப்பித்த படங்கள்......


தல பெருமை

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இங்கு மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத்தலத்தில் தான் பிறந்தார்.




20 February 2018

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கருடசேவை


திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்..  மாயவரம் குத்தாலம் கோமல் செல்லும் வழியில் 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.   தேரழுந்தூரில் அமைந்துள்ள இக்கோவில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.

சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.

மூலவர்: தேவாதிராஜன்

உற்சவர்: ஆமருவியப்பன்

தாயார்: செங்கமலவல்லி

தீர்த்தம்: தர்சன புஷ்கரிணி, காவிரி

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்





04 December 2017

ஆழ்வார்கள் தரிசனம்..


வாழ்க வளமுடன்...




முந்தைய பதிவுகளில் 

திருமங்கையாழ்வார்  அவதார பற்றியும்

திருப்பாணாழ்வார்  அவதாரம் பற்றியும் ..தரிசித்தோம்...


இன்று அவர்களின் புகைப்பட உலா...

போன வருடம்  .....அப்பா ஆழ்வார்களின்  அவதார தலங்களில் தாம் தரிசித்து எடுத்த  படங்கள் இன்று ..இங்கே  ஆழ்வார்கள் தரிசன  உலாவாக...


திருமங்கையாழ்வார்......




14 November 2017

திரு இந்தளூர்...


திரு இந்தளூர் ... ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள் கோயில், மாயவரம்



இந்த எம்பெருமானுக்கு சுகந்தன்-  என்று பெயர்!

 பரிமளம் வீசுபவன்! அழகிய தமிழில் மரு இனிய மைந்தன்!

அவர் மேனியில் எப்போதும் ஒரு சுகந்தம், வாசனை வீசும்!

அதானால் பரிமள ரங்க நாதன்!

மது-கைடப அசுரர்கள் அபகரிப்பால் பொலிவிழந்த வேதங்களுக்கு மீண்டும் நறுமணம் வீசச் செய்தவனும் கூட!

கருவறையில், அரங்கன் தலை மாட்டில் காவிரி அன்னையும்,
 கால் மாட்டில் கங்கை அன்னையும் உள்ளார்கள்!


தாயார்: ஸ்ரீ பரிமள ரங்க நாயகி

மூலவர்: பரிமள ரங்கநாதன்


 கடந்த வாரம்  அங்கு  நடைபெற்ற கருட சேவையின் சில படங்கள் இன்று ...







27 October 2017

திருவந்திபுரம் மாமுனி கோவில் உற்சவம்...

திருவந்திபுரம் மாமனி கோவில் உற்சவம்.....



நேற்றைய  சுவாமி மணவாளா மாமுனிகளின் அவதார திருநட்சத்திர பதிவில் சுவாமிகளை  தரிசித்தோம்.....



இன்று....


திருவந்திபுரம் (  திருவஹீந்திரபுரம் ) ..


கடலூர் மாவட்டம்...


கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது...

திருவந்திபுரத்தில்    திருமங்கையாழ்வாரால்   பாடல்   பெற்ற

தேவநாத   சுவாமி கோவிலும்... 

அருள்மிகு ஹயக்ரீவர் ஆலயமும் அமைந்துள்ளன...


இங்கு  உள்ள தேவநாத சுவாமி திருக்கோவில்  நடு நாட்டுத் திருப்பதிகளில்  ஒன்றாகும்.

அதன் அருகில்  சுவாமி மணவாள மாமுனிகளுக்கு தனிக் கோவில் உள்ளது...


அங்கு  அவரின் திருநட்சத்திர வைபவமாக   நடைபெற்ற உற்சவத்தின் சில படங்கள்.. ...இன்று அப்பாவின் பார்வையாக...



ரத்தின அங்கி சேவையில் சுவாமிகள்



17 July 2017

ஸ்ரீமத் நாதமுனிகள் ...

வீரநாராயணப்பெருமாள், காட்டுமன்னார்குடி..

நாதமுனிகளார் அவதார ஸ்தலம்...

வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதரித்த ஸ்தலம்..

 ஸ்ரீமத் நாதமுனிகள்  திருநட்சத்திரம் ஆனி அனுஷம்,   (5.7.2017) அன்று
காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற  உற்சவத்தில் அப்பா எடுத்த படங்கள் இன்று உங்கள் சேவைக்கு....


















09 July 2017

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஜ்யேஷ்டாபிஷேகம்...




கடந்த   ஜுலை 7ம்தேதி (2017)  நம்பெருமாளின் ஜ்யேஷ்டாபிஷேகம்
(பெரிய திருமஞ்சனம்) ...



"ஜேஷ்டா" என்றசமஸ்கிரத  சொல்லுக்கு  "பெரிய '" என்று பொருள்....  ஜ்யேஷ்டா"  நக்ஷத்திரம் (கேட்டை )  என்றால் பெரிய நக்ஷத்திரம் என்றும் பொருள் கொள்ளலாம் ...

அரங்கனுக்கு வருடாவருடம் ,....

ஆனி மாதம், ஜ்யேஷ்டா (கேட்டை ) நக்ஷத்திரத்தன்று ,விசேஷமாக  திருமஞ்சனம் நடைபெறும் ....

இந்த ஆனி மாதத்தில், ஜ்யேஷ்டா நக்ஷத்திரத்தில் ,

"பெரிய நதியான"   தென்  திருக்காவிரிலிருந்து ,

"பெரிய கோபுரமான "  ராஜ கோபுரத்தின் வழியே ,

தீர்த்தம் கொண்டு வரப்பட்டு,

விசேஷமாக ,"பெரிய கோயிலான"  அரங்கன் ஆலயத்தினில் உள்ளே எழுந்தருளிக் கொண்டிருக்கும்   அரங்கனுக்கு ,

பெரிய திருமஞ்சனம் (அபிஷேகம்)  செய்யப்படும் ....



பெரிய நட்சத்திரத்தில் ,

பெரிய நதியில் இருந்து ,

பெரிய கோபுரத்தின் வழியே ,

பெரிய அளவில் (28 குடங்களில் ),

பெரிய கோயிலில் உள்ள ,

பெரிய பெருமாளுக்கு ,

பெரிய அளவில் ,

வெகு விமரிசையாக நடைபெறும் ,திருமஞ்சனம் என்பதாலேயே இதற்கு "பெரிய திருமஞ்சனம்" என்று பெயர்.....

வருடத்தில் பதினோரு மாதங்கள் ,(ஐப்பசி தவிர ) ஸ்ரீரங்கத்தின் வடக்கு பகுதியில் ஓடும் ,வட திருக்காவிரியில் இருந்து ,யானை மீது தீர்த்தம் கொண்டு வரப்படும் .....

ஆனால் இந்த "பெரிய திருமஞ்சனத்திற்கு "  மட்டும்   வழக்கம்போல், கொள்ளிடக்கரையிலிருந்து தீர்த்தம் எடுக்காமல்,   ஸ்ரீரங்கத்தின் தெற்குப் பகுதியில்- அம்மா மண்டபத்தின்                           காவிரியிலிருந்து   தீர்த்தம்  எடுத்து வருவார்கள்...




( ஆனால் இந்த வருடம் அம்மா மண்டபத்தில் நீர் இல்லாதலால் ..கொள்ளிடக்கரையிலிருந்து தீர்த்தம் எடுத்தார்கள்..)








25 February 2017

திருச்சேறை சாரநாதப் பெருமாள் கருட சேவையில்...


 சாரநாதப்பெருமாள் திருக்கோயில்- திருச்சேறை (தஞ்சாவூர்)


        இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.

   முன்பு   இத்திருத்தலம்   திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது.

   

     மூலவர்    : சாரநாதப்   பெருமாள்

     தாயார்     : சாரநாயகி - பஞ்சலெட்சுமி

     தீர்த்தம்   : சார புஷ்கரிணி

 



23 February 2017

மதுரமங்கலம்..

எம்பார் ஸ்வாமிகளின் (எம்பெருமானார் என்கிற கோவிந்த பட்டர்) அவதார ஸ்தலம்...மதுரமங்கலம்..



சென்னையில் இருந்து 60 km தொலைவில் உள்ளது



 மூலவர்       : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்

 தாயார்       : கமலவல்லி

புஷ்கரணி: கருட புஷ்கரணி


       இந்த க்ஷேத்ரம் எம்பார் ஸ்வாமிகளின் அவதார ஸ்தலம். எம்பார் சுவாமிகள் ஸ்ரீ ராமானுஜர் பிறந்து 9 ஆண்டுகள் கழித்து அவதரித்தவர்.