சாரநாதப்பெருமாள் திருக்கோயில்- திருச்சேறை (தஞ்சாவூர்)
இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.
முன்பு இத்திருத்தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது.
மூலவர் : சாரநாதப் பெருமாள்
தாயார் : சாரநாயகி - பஞ்சலெட்சுமி
தீர்த்தம் : சார புஷ்கரிணி
திருச்சேறை சாரநாதப் பெருமாள் கருட சேவையில் ( 4. 2. 2017)...
அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை வரையகலத் தமர்ந்து, மல்லல்
கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்,
வம்பலரும் தண்சோலை வண்சேறை வானுந்து கோயில் மேய,
எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும் என்மனத்தே யிருக்கின் றாரே.
-திருமங்கையாழ்வார் (1579)
( விளக்கம் -
அழகிய திருப்புருவங்களோடும் நீண்ட திருக்கண்களோடுங் கூடின பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே வைத்துக் கொண்டிருப்பவனும்,
முள்ளைக்கொண்டே முள்ளைக் களைவதுபோல,
கன்றினுருவங் கொண்டு வந்த ஒரு அஸுரனைக் கொண்டு விளாமரமாய் நின்ற மற்றோரஸுரன்மேல் வீசியெறிந்து இரண்டையும் முடித்தவனும்,
அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருச்சேறையில் ஆகாசத்தளவும் ஓங்கியுள்ள ஸந்நிதியில் நித்யவாஸஞ்செய்தருள்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளை ஸேவிப்பவர்கள் ஒருநொடிப் பொழுதும் எனது நெஞ்சைவிட்டுப் பிரியாதிருக்கின்றனர் என்றாராயிற்று.)
அன்புடன்,
அனுபிரேம்
திருச்சேறை ஸ்ரீ சாரபரமேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன்..
ReplyDeleteஅங்கிருந்து அருகிலுள்ள ஸ்ரீ சாரநாதப் பெருமாள் திருக்கோயிலுக்குச் செல்வதற்குள் இரவுப் பொழுதாகி விட்டது.. நடை அடைத்து விட்டார்கள்..
அழகிய பதிவு.. வாழ்க நலம்!..
இந்த இடம் பார்த்ததில்லை. படங்கள் அழகு. சுவாரஸ்யம்.
ReplyDeleteபடங்கள் அழகு...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
When does this karuda sevai take place?
ReplyDeleteபிப்ரவரி 6 ம் தேதி...
Deleteமிக அழகிய ரதத்தில் வலம் வருகிறார்..
ReplyDeleteபார்த்த நினைவுகளை கொண்டு வந்தது உங்கள் பதிவு.
ReplyDeleteஅழகான படங்க்கள்.