28 June 2017

வண்ண வண்ண வாகனங்கள்...



அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்...


முந்தைய பதிவில் எங்கள் வீட்டு சுவற்றை அலங்கரித்த செல்லங்களை  ரசித்தீர்கள்...

இன்றும் அது போல் ஒரு ஓவியமே...செல்லங்களுக்கு எதிர் புற சுவற்றில் வரைந்த வண்ண வண்ண வாகனங்கள் இவை...
ஆனால் இவை எல்லாம் கிரையான் பென்சில்களால் வண்ணம் செய்யப்பட்டவை... அதுவும் தேவையில்லாத பழைய  கிரையான் பென்சில்களால்...


டயர்  பஞ்சர்....


20 June 2017

லவேரியா.......இனிப்பு பூரண இடியாப்பம்....



அன்பின் வணக்கங்கள்...

வாழ்க வளமுடன்......


எங்கள் ப்ளாக் ல அஞ்சுவோட இனிப்பு இடியாப்பம் ( லவேரியா) வை பார்த்ததும்  ..கண்டிப்பா செய்யணும்னு நினைத்தேன்...போன வாரம் இடியாப்பம் செய்யும் போது கொஞ்சம் மாவை எடுத்து வைத்து அடுத்த நாள் லவேரியா செஞ்சாச்சு...வாவ்...ரொம்ப நல்லா இருந்தது...

மேலும் லவேரியா பத்தி தெரிஞ்சுக்க இங்க  பாருங்க.......http://engalblog.blogspot.com/2017/06/170605-lavariya.html


முதல் முறையாய் ஒரு இலங்கை உணவு....நன்றி அஞ்சு...



17 June 2017

எங்க வீட்டு ஒட்டகச்சிவிங்கி....



எங்க வீட்டு  ஒட்டகச்சிவிங்கி ...



எல்லாரும் ஆசையாய் , அருமையாய் செல்லங்களை வளர்க்கிறார்கள் ..ஆன எனக்கு அந்த அனுபவம் இல்ல...

வீட்டுல  பசங்களுக்குனு ஒரு  அறை ஒதுக்கி ...அதை பசங்களுக்காக அழகு படுத்தனும்னு ஒரு ஆசை...அதன் பயனாக வந்ததே இந்த ஒட்டகச்சிவிங்கி... கொஞ்ச நாள் அதுதான் எங்க வீட்டு செல்லம்...


 பையனோட புத்தகத்துல இந்த ஒட்டகச்சிவிங்கியைப்  பார்த்து ...சுவற்றில் அதை மாதரியே வரைந்து...fabric paint ல  வண்ணம் செய்தேன்......அழகாக வந்தது...


எங்க வீட்டுக்கு வர குட்டி பசங்க எல்லாம் உண்மையான ஒட்டகச்சிவிங்கி பார்க்குற மாதரியே பார்ப்பாங்க...தொடுவாங்க...😊 😍....பக்கத்து வீட்டு பாப்பா  தினமுமே வந்து ரசிப்பாங்க...




13 June 2017

காளான் பக்கோடா...


காளான் பற்றி....



    மழைக்காலத்தில் அங்கங்கு முளைவது நாய்க்குடைமை எனப்படும் பூஞ்சைக் களான். நாம் அதை உட்கொள்ளக் கூடாது. உலகத்தில் நூற்றுக்கணக்கான காளான் வகைகள் உள்ளன. எல்லாவற்றையும் உட்கொள்ள இயலாது.



     சமையல் செய்ய வேண்டும் என்று தனியாக வளர்த்து கடைகளில் விற்பனைக்கு உள்ளவைகளை  மட்டும் பயன்படுத்த வேண்டும். நம் ஊரில்  மொட்டுக் காளான் (பட்டன் காளான்கள்) மற்றும் சிப்பிக் காளான் (ஷெல் காளான்கள்)  என இரண்டு வகை மட்டுமே கிடைக்கும். இதுவும் வடிவத்திற்கு ஏற்பவே பெயரும் அமைந்து உள்ளது.