எங்க வீட்டு ஒட்டகச்சிவிங்கி ...
எல்லாரும் ஆசையாய் , அருமையாய் செல்லங்களை வளர்க்கிறார்கள் ..ஆன எனக்கு அந்த அனுபவம் இல்ல...
வீட்டுல பசங்களுக்குனு ஒரு அறை ஒதுக்கி ...அதை பசங்களுக்காக அழகு படுத்தனும்னு ஒரு ஆசை...அதன் பயனாக வந்ததே இந்த ஒட்டகச்சிவிங்கி... கொஞ்ச நாள் அதுதான் எங்க வீட்டு செல்லம்...
பையனோட புத்தகத்துல இந்த ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து ...சுவற்றில் அதை மாதரியே வரைந்து...fabric paint ல வண்ணம் செய்தேன்......அழகாக வந்தது...
எங்க வீட்டுக்கு வர குட்டி பசங்க எல்லாம் உண்மையான ஒட்டகச்சிவிங்கி பார்க்குற மாதரியே பார்ப்பாங்க...தொடுவாங்க...😊 😍....பக்கத்து வீட்டு பாப்பா தினமுமே வந்து ரசிப்பாங்க...
போன வருடம் சுண்ணாம்பு அடிக்கும் போது இந்த செல்லமும் காணபோச்சு.....😞
மீண்டும் இது மாதரி வித்தியாசமாய் ஏதாவது வரையனும்....விரைவில்....
அன்புடன்
அனுபிரேம்
அழகு... 3D ஓவியம் போல இருக்கிறது.
ReplyDeleteபொதுவாக, பெரியவர்கள் வீட்டுச் சுவற்றில் எதனையும் எழுதவோ கிறுக்கவோ விட மாட்டார்கள். நீங்கள் வித்தியாசமானவர்கள். வித்தியாசமான பதிவு. வலைப்பக்கம் தொடர்ந்து வந்திட வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகான ஓவியம். மீண்டும் வரைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாரதி கவிதைக்கு நன்றி.
ஒட்டகச் சிவிங்கியும் பறவைகளும் மிகவும் அழகு!!
ReplyDeleteகுழந்தைகளை ஊக்குவிய்யுங்கள்.
ReplyDeleteசுவற்றில் வரைந்துள்ள ஓவியங்கள் மிகவும் அழகாக உள்ளன. சுண்ணாம்பு அடிக்கும் போது காணாமல் போனவற்றை மீண்டும் வரையவும். குழந்தைகளுக்கும் வரைய பழக்கப்படுத்தவும். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஎனக்கும் தொட்டு பார்க்க ஆசையா இருக்கு அனு. அவ்வளவு அழகா இருக்கு..வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்க வீட்டு ஒட்டகச் சிவிங்கி காணாமல் போச்சா இப்போ..:) விரைவில் இன்னொன்று வாங்கிடுங்கோ.
ReplyDeleteகண்கள் இரண்டில்.. ஒன்றையும் குத்தலாகாது:).
வாவ் !! சூப்பர்ப் அனு எனக்கே தொட்டு விளையாட ஆசையா இருக்கு அந்த கீச் பறவைகளும் ஒட்டகச்சிவிங்கியும் கொள்ளை அழகு ..மீண்டும் வரையுங்கப்பா ..
ReplyDeleteஅழகு.... மீண்டும் வரையலாமே....
ReplyDeleteசூப்பராக இருக்கிறது சகோ!!!
ReplyDeleteகீதா: என்ன அழகு! திறமை! பறவைகளும் அழகு! சுண்ணாம்பு அடிச்சா என்ன மீண்டும் வரையுங்க அனு!! சூப்பர் பாராட்டுகள்!!!அனு!! நிறைய திறமைகள் அனு உங்களிடம்...
அழகான ஒட்டகச் சிவிங்கி..கிளிகள், மீனும் அழகு!! சீக்கிரம் மறுபடி வரையுங்கப்பா!! :)
ReplyDelete