தொடர்ந்து வாசிப்பவர்கள்

13 June 2017

காளான் பக்கோடா...


காளான் பற்றி....    மழைக்காலத்தில் அங்கங்கு முளைவது நாய்க்குடைமை எனப்படும் பூஞ்சைக் களான். நாம் அதை உட்கொள்ளக் கூடாது. உலகத்தில் நூற்றுக்கணக்கான காளான் வகைகள் உள்ளன. எல்லாவற்றையும் உட்கொள்ள இயலாது.     சமையல் செய்ய வேண்டும் என்று தனியாக வளர்த்து கடைகளில் விற்பனைக்கு உள்ளவைகளை  மட்டும் பயன்படுத்த வேண்டும். நம் ஊரில்  மொட்டுக் காளான் (பட்டன் காளான்கள்) மற்றும் சிப்பிக் காளான் (ஷெல் காளான்கள்)  என இரண்டு வகை மட்டுமே கிடைக்கும். இதுவும் வடிவத்திற்கு ஏற்பவே பெயரும் அமைந்து உள்ளது.
      காளான்கள் அதிக முக்கியத்துவம் பெற்றதற்கு காரணம் இதில்   உள்ள மிகக் குறைவான கலோரிகள்.மேலும்  சிறந்த புரதச் சத்தை கொண்டது. குறைந்த கொழுப்பு உடையது. அதுவும் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு கொண்டதால், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உண்ண நினைக்கும் உணவு.


    காளான் எளிதில் ஜீரணமாகக் கூடியது. சமைப்பதற்கு மிகக்குறைவான நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். இதில் அதிகமான பொட்டாசியமும் குறைவான சோடியும் உள்ளதால் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல உணவாகக் கருதப்படுகிறது. புரதம் அதிகமாகவும் நார்ச்சத்தும் உள்ளதால் நீரிழிவு உள்ளவர்கள் கூட இதை பயன்படுத்தலாம்.


   இதில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களில் பாந்தியானிக் ஆசிட், பி 2, பி 3, பி 6 மற்றும் ஃபோலிக் அஸிட் ஆகியவை உள்ளன. மினரல்களில் 'காப்பர்' அதிக அளவு உள்ளது. பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் ஒரே உணவில் இத்தனை இருப்பது அரிது. இது தவிர கேன்சர் வராமல் பாதுகாக்கக்கூடிய சக்தி இதில் உள்ளது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காளான் கிரேவி, பிரியாணி....👌  எப்பவும் ரொம்ப பிடிக்கும்...

இந்த முறை அம்மா காளான் பக்கோடா நல்லா இருக்கும்னு சொல்லி செஞ்சாங்க.....

ரொம்ப மொரு மொரு னு சூப்பரா இருந்துச்சு...

அந்த ஸ்பெஷல் சிற்றுண்டி தான் இன்றைய ஸ்பெஷல்..


காளான் பக்கோடா...

தேவையானவை...


காளான்              - 1 பாக்கெட்

அரிசி மாவு       -1/4 கப்

கடலை மாவு   -1/4 கப்

மிளகாய் தூள் - 3 ஸ்பூன்

சமையல் சோடா - 2 சிட்டிகை

உப்பு

எண்ணெய்


செய்முறை...

காளானை நன்றாக   கழுவி பின் நீள் வாகாக நறுக்க வேண்டும்...பின்  மி. தூள் , மாவு வகைகள்,சமையல் சோடா, உப்பு சேர்த்து  சிறிது நீர் விட்டு   பிசறி விட வேண்டும் ...பின்  சூடான எண்ணெயில் பாக்கோடா போல கரகரப்பாக பொரித்து எடுக்க மிக ருசியான   காளான் பக்கோடா...தயார்...

அன்புடன்

அனுபிரேம்


17 comments:

 1. பார்க்க மொறுமொறுப்பா இருக்கே ..வீட்டில் பட்டன் காளான் இருக்கு இன்னிக்கே செய்யப்போறேன் தாங்க்ஸ் ரெசிப்பிக்கு

  ReplyDelete
  Replies
  1. ஒ..சூப்பர்..செஞ்சு பார்த்து சொல்லுங்க அஞ்சு...

   Delete
 2. ஆஹா படங்களே ஆசையை தூண்டுகிறதே...

  ReplyDelete
 3. பக்கோடா பார்க்க பார்க்க அருமையாக இருக்கிறது.
  காளான் சாப்பிட்டது இல்லை வாங்க்கி செய்துப் பார்க்கிறேன்.
  பாரதி பகிர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா...காளான் ரொம்ப மிருதுவா ...சாப்பிட அருமையா இருக்கும்...சமைச்சுப் பாருங்க..

   Delete
 4. பார்க்க மொறு மொறு என இருக்கு.. இது அஞ்சுவைப் பார்த்துச் சொல்லல்ல நான்.. என் சொந்தக் கிட்னியைப் ஊஸ் பண்ணிச் சொன்னேன்.

  காளான் பற்றிய தகவல்கள் மிக அருமை.

  ஒரு சந்தேகம் காளானில் சூடு பிடித்ததுமே தண்ணித்தன்மை ஆகிடுமே..இது எப்படி பொரிக்க முடிகிறது?

  வாழ்க்கையில் எத்தனையோ விதமாகக் காளான் சமைத்ததுண்டு ஆனா பொரித்ததில்லை..
  அந்தாண்டிக்கா போய் நிட்சயம் ட்ரை பண்ணுவேன்:).. என் சமையல் புகழை ஊரெல்லாம் பரப்ப வேணாமோ?:).

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா...
   உங்க கிட்னிய ஊஸ் பண்ணி சொன்னதுக்கு தேங்க்ஸ்...

   காளானுக்கு சுடு பிடிச்சுச்சா...இல்லையே..(சும்மா நானும் கொஞ்சம் ஜாலியா எழுத பார்த்தேன்...(அதான் வரலியே) )

   .... மாவு எல்லாம் சேர்த்து தானே பொரிக்கிறோம்..அதுனால நீர்க்காது...
   தைரியமா பொரிச்சு பாருங்க ..

   உங்க புகழை உலகமே பேசும்...

   Delete
  2. நீங்க சொன்னபோதுகூட எனக்கு நம்பிக்கை வரவில்லை அனு, இன்று செய்தேன்ன்.. சூப்பரோ சூப்பர்.. சிக்கின் பக்கோறா போல இருந்துது ஹா ஹா ஹா..

   Delete
  3. சிக்கன் பகோடா போலவா? ஐயோ... (கவனிக்கவும் ஹையோ... இல்லை!)

   Delete
 5. காளான் சாப்பிட்டது இல்லை....ஆனால் அதன் ரெசிப்பிஸ் தெரியும்..செய்து கொடுத்தருக்கேன்.காளான் பஜ்ஜியும் செய்யலாம்...அதேபோல காளான் அறுபத்து ஐந்தும் செய்யலாம்...காளான் மஞ்சூரியன் செய்யலாம்.. ...செய்து பாருங்கள் அனு..உங்க ரெசிப்பியும் சூப்பர்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதாக்கா...

   அடுத்த முறை காளான் மஞ்சூரியன் செஞ்சு பார்க்கணும்..

   Delete
 6. காளான் ஒரு பாக்கெட் வாங்கி வச்சாச்சு. நாளைக்கே செஞ்சுடுவோம்!

  ReplyDelete
 7. காளான் எப்போதாவது சிறிதளவு உண்பதுண்டு..

  நல்லதொரு குறிப்பு.. அழகிய படங்கள்..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 8. காளான் பகோடா புதுசா இருக்கு.கேள்விபடல அனு. படங்களே செய்துபார்க்க தூண்டுது. செய்திடலாம் ந்ன்றி அனு.

  ReplyDelete
 9. எனக்கு பிடிச்ச ஐயிட்டம்ப்பா

  ReplyDelete