31 May 2017

பிம்பங்கள்...

பிம்பங்கள்....

கரையாத

நனையாத

வெளுக்காத

சாயம் போகாத

அடுக்கு மாடிகளின்  பிம்பங்கள்  - நீரில்





25 May 2017

சித்ராங்கதா...



அன்பின் வணக்கங்கள்....



இங்கு நான்  பகிரபோவது  நூலின்  விமர்சனம் அல்ல .. எனது வாசிப்பின் அனுபவம்...பல நாவல்களை வாசித்தும், வாசித்துக் கொண்டும்   இருக்கிறேன் ..பல புதிய நாவல் ஆசிரியர்கள் இணையத்திலே ....அவர்களின் தளத்திலே தங்களின் நாவல்கள் பகிர்கிறார்கள்...அதில் பயன்பெரும் பலபேரில் நானும் ஒருவள்....

அவ்வாறு   படித்த   நாவல்களில்   என்னை   மிகவும் கவர்ந்தவைகளையும் , பாதித்தவைகளையும்


...இந்த புத்தக அலமாரியில் அடுக்க போகிறேன்..

அதில் இன்று பகிர போவது     சித்ராங்கதா....






இந்நாவலின் ஆசிரியர் தமிழ் மதுரா.. அவரின் தளம்...



20 May 2017

முதல் சிறுகதை.....


முதல் சிறுகதை  -----லட்சியம்


     எங்கள் ப்ளாக்கின் கேட்டு வாங்கிப் போடும் கதைக்காக  எனது முதல்  முயற்சியாக அமைந்த என் முதல்  எழுத்து.... .இந்த லட்சியம் 

எங்கள் ப்ளாக் வலைதளத்தில்..... எனது..... லட்சியம் சிறுகதை 



    வாய்ப்பு  அளித்து எழுத தூண்டிய  ஸ்ரீராம் சாருக்கும் ....எங்கள் ப்ளாக் தளத்தில் கதை வெளிவந்த அன்று பாராட்டி... வாழ்த்திய.... அன்பு நட்புக்களுக்கும் மிகவும் நன்றி... நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கம் மிகவும் பெரியது....என்றும் மறக்க இயலாததும்..

எனது அடுத்தகட்ட முயற்சிக்கான வித்துக்கள் அவை....என்றும் உங்கள் அனைவரின் நட்பும், உறவும் வாழ்க, வளர்க.....





18 May 2017

மோமோஸ்....


மோமோஸ்  சாப்பிட வாங்க....

நம்முரு கொழுக்கட்டை மாதிரி இருந்தாலும்...சுவை வித்தியாசமானது...சாப்பிடவும்  நல்லா  இருக்கும்...புதிய சுவையில் ..புதிய உணவுகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு...


மோமோஸ்'   என்று இங்கும்,

சீனாவில் 'மோமோ',

திபெத் நேபாளில் 'டம்ப்ளிங்'   என்று அழைக்கப்படும் இந்த உணவு

மங்கோலியாவில் புௗஸ்,

ஜப்பானில் Qyoza,

ஆப்கான், கொரியாவில் Mantu,

மொரிசியஸ்யில்  Dim sum   என்றெல்லாம் கூறப்படுகிறது.  


எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதானே?

 அதுபோலவே  நேபாளம், சிக்கிம், லடாக் மக்களின் பாரம்பரிய உணவை  எப்படி அழைத்தாலும்  சுவை ஒன்றுதான்.


ஆரம்பத்தில் மாமிசம் கலந்த மோமோஸ்களே பயன்பாட்டில் இருந்தன.

அதன் பரிணாம வளர்ச்சியாக  இப்போது வெஜ், பனீர், இறால், மோமோஸ் சூப் என்று கணக்கிலடங்காத வகைகளாக பரவி உள்ளது.....

மேலும் மோமோஸ் பத்தி தெரிச்சுகனுமா....

வெங்கட்  நாகராஜ் சார் தளத்தில் போய் பாருங்க....  சாப்பிட வாங்க: மாமோய்..... இது மோமோ! 






16 May 2017

ஏரிக் கரையோரம்....


அனைவருக்கும் வணக்கம்...


எங்க வீட்டின் அருகே உள்ள ஏரியின் அழகிய  காட்சி பதிவுகள் இன்று......




03 May 2017

உடையவர் திருநட்சத்திர விழா...

ஸ்ரீமதே ராமானுஜாய நம


 ராமானுஜர் 1000ம்  திருநட்சத்திர நாளான மே 1 அன்று,
காலை ராமானுஜர் நம்பெருமாள் சந்நிதி எழுந்தருளி அவரின் மரியாதைகளை பெற்றுக்கொண்டு .. வீதி வலம் வந்து தாயார் சந்நிதி மரியாதை பெற்று ..
உள் ஆண்டாள் சந்நிதி கோஷ்டி ஆகி அவரது சந்நிதிக்கு திரும்பினார் ..


ராமானுஜர் திருஉருவ சிலை