25 May 2017

சித்ராங்கதா...



அன்பின் வணக்கங்கள்....



இங்கு நான்  பகிரபோவது  நூலின்  விமர்சனம் அல்ல .. எனது வாசிப்பின் அனுபவம்...பல நாவல்களை வாசித்தும், வாசித்துக் கொண்டும்   இருக்கிறேன் ..பல புதிய நாவல் ஆசிரியர்கள் இணையத்திலே ....அவர்களின் தளத்திலே தங்களின் நாவல்கள் பகிர்கிறார்கள்...அதில் பயன்பெரும் பலபேரில் நானும் ஒருவள்....

அவ்வாறு   படித்த   நாவல்களில்   என்னை   மிகவும் கவர்ந்தவைகளையும் , பாதித்தவைகளையும்


...இந்த புத்தக அலமாரியில் அடுக்க போகிறேன்..

அதில் இன்று பகிர போவது     சித்ராங்கதா....






இந்நாவலின் ஆசிரியர் தமிழ் மதுரா.. அவரின் தளம்...






பொதுவாக படம் பார்க்கும் போது சிலர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடுவார்கள்..ஆனால் நான் மனதை வருடும் நாவல்களை வாசிக்கும் போதே கண்ணீர் விடும் ரகம்...அவ்வாறு மனதை மிகவும் பாதித்த நல் நாவல்களுள் இதுவும் ஒன்று...

மிக அழகான பாத்திரபடைப்புகள்...
சரயு, விஷ்ணு (ஜிஷ்ணு)   தான்   இதில்    நாயகி , நாயகன்...பின் ஏன் இந்நாவலுக்கு சித்ராங்கதா.... என்னும் பெயர்...நாவல் வாசிக்கும் பொது அந்த முடிச்சு அவிழும்...


சரயுவின் கிராமத்து வாழ்க்கை ..அடடா மிக அழகு....அவளின் சுட்டித்தனமும் , கள்ளம் அற்ற அன்பும் , அவள் தனது  சிறு நண்பர்களுடன் செய்யும் சேட்டைகளும் என நம்மையும் அங்கு அழைத்து செல்லும் பாங்கு என அனைத்தும் சிறப்பு...

அடுத்த அவள் வாழ்வில் முக்கியமான நேரத்தில் தாயின் அன்பும் , பாதுகாப்பும் இன்றி இருப்பதும் ...good டச் , bad டச் சொல்லி தரும் விஷ்ணுவையே  அவளின் தாயின் ரூபத்தில் காண்பதும் ஆஹா.....

காதலுக்காக கடமையை விட கூடாது ......

கடமைக்காக காதல் காத்திருக்கலாம் ...

என்பதும்...

நான்கு பெண் குழந்தைகளை பெற்று அதிலும் கடைசி மகவை செல்லம் கொடுத்து ஆண் மகனின் தைரியத்தில் வளர்க்கும் தன் தந்தைக்கு ... ..... தான் கடமையை செய்ய செல்லும் போதும் ...அவரை பரிவோடு பேணும் போதும் ..அத்தந்தையின் பாசமே மீண்டும் நம் கண்ணில்  வருகிறது...

அவளில் உள்ள நட்பிற்காக அணுகுண்டு செய்யும் பாச போராட்டங்களும்...


தனது எஜமானன் வயதில் சிறியவர் ஆனாலும் ..அவரின் குணத்தில் ராமனை கண்டு தான்  அவருக்கான  அனுமனாக நினைத்து உருகும் ராஜுகோகுலம் வாகட்டும்...


அனைத்தும் கவிதை....



நட்பில் உள்ள நேர்மையும்,

பாசத்தில் பரிவையும்,

வாழ்க்கை போராட்டத்தில் நிகழும்

மன உளைச்சலும்  என

பல பல சுவாரஸ்யமான  திருப்பங்களுடன் , ....

அங்கு அங்கு அள்ளி தெளிக்கப் பட்ட கொஞ்சும் தெலுங்கில் ...


ஒரு  அழகிய  காவியத்தை படைத்து உள்ளார் தமிழ் மதுரா....

ஒரு மிக பெரிய நாவலை இந்த சிறு அனுபவ பக்கத்தில் வர்ணிக்கவோ....எழுதவோ இயலாது...

அது படித்து , அனுபவித்து உணர வேண்டிய  சில சில இனிமையான தருணங்கள்..


நாவல்களை விரும்பி படிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு அருமையான நாவல்..

நீங்களும் வாசிக்க விருப்பபட்டால்  தமிழ் மதுராவின் தளத்தில்...

.    சித்ராங்கதா...    வை  படித்து மகிழுங்கள்...


அன்புடன்

அனுபிரேம்..



10 comments:

  1. >>> ஒரு மிகப் பெரிய நாவலை இந்த சிறு அனுபவ பக்கத்தில் வர்ணிக்கவோ எழுதவோ இயலாது...

    அது படித்து - அனுபவித்து உணர வேண்டிய இனிமையான தருணங்கள்..<<<

    அருமை.. தங்களின் கை வண்ணம் அருமை..

    ReplyDelete
  2. சுருக்கமாக எனினும்
    நாவலைப் படித்துத்தான் ஆகவேண்டும்
    என்னும் ஆவலைத் தூண்டும்படியான
    அருமையான விமர்சனம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆவலைத் தூண்டும் விமர்சனம்... இணைப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  4. ஆவலைத் தூண்டி விட்டீர்கள் அனு! ஷார்ட் அண்ட் ஸ்வீட் விமர்சனம்... வாசித்து விடுகிறோம்...இணைப்பிற்கு மிக்க நன்றி....

    கீதா

    ReplyDelete
  5. படிக்கத் தூண்டும் விமர்சனம்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. அருமையான கதையாக இருக்கும் போல தெரியுதே.. இப்போதெல்லாம் கதை படிக்க நேரம் கிடைப்பது அரிதாகிறது.. மனதை ஒருநிலைப் படுத்தி படிக்க முடிவதில்லை.

    தெரிந்து வைத்திருந்தால், தேடும் வேலை இல்லாமல் தேவைப்படும்போது படித்திடலாம்.

    ReplyDelete
  7. படித்த அனுபவத்தை அழகாக எளிமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். தமிழ் மதுராவுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  8. புத்தக விமர்சனத்தை பார்க்க வாசிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. அழகா விமர்சித்திருக்கீங்க அனு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. புத்தக விமர்சனம் அருமை.

    ReplyDelete
  10. vimarsanam arumaiya irkku. Madhuravukku paratukal :)

    ReplyDelete