தொடர்ந்து வாசிப்பவர்கள்

20 May 2017

முதல் சிறுகதை.....


முதல் சிறுகதை  -----லட்சியம்


     எங்கள் ப்ளாக்கின் கேட்டு வாங்கிப் போடும் கதைக்காக  எனது முதல்  முயற்சியாக அமைந்த என் முதல்  எழுத்து.... .இந்த லட்சியம் 

எங்கள் ப்ளாக் வலைதளத்தில்..... எனது..... லட்சியம் சிறுகதை     வாய்ப்பு  அளித்து எழுத தூண்டிய  ஸ்ரீராம் சாருக்கும் ....எங்கள் ப்ளாக் தளத்தில் கதை வெளிவந்த அன்று பாராட்டி... வாழ்த்திய.... அன்பு நட்புக்களுக்கும் மிகவும் நன்றி... நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கம் மிகவும் பெரியது....என்றும் மறக்க இயலாததும்..

எனது அடுத்தகட்ட முயற்சிக்கான வித்துக்கள் அவை....என்றும் உங்கள் அனைவரின் நட்பும், உறவும் வாழ்க, வளர்க.....

  வெங்கட் நாகராஜ் said...
மனதுக்குப் பிடித்ததை, மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் செய்ய வேண்டும்..... நல்ல விஷயம்.

முதல் முயற்சிக்கு பாராட்டுகள் அனுராதா ப்ரேம்குமார் ஜி! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.
Thulasidharan V Thillaiakathu said...
உங்கள் முதல் முயற்சியே அருமையாக வந்துள்ளது அனு!!! பாராட்டுகள்! மிக மிக நல்ல விஷயம். பிறர் சிரித்தாலும், கமென்ட் அடித்தாலும், பழி சுமத்தினாலும், என்னென்ன பேசினாலும் நாம் நம் மனதுக்குப் பிடித்ததை எப்படியேனும் செய்ய வேண்டும் என்ற என் உள்மனக் கிடக்கையையும் இந்தக் கதை வெளிப்படுத்தியதாலோ என்னமோ பிடித்திருந்தது. உங்கள் வீட்டு ஸ்போர்ட்ஸ் பேக் க்ரவுன்ட் கதையில் வெளிப்பட்டது!!

மேலும் எழுதுங்கள் இன்னும் சிறப்பாக உங்களால் எழுத முடியும் அனு!!!

அனுவையும் ஊக்குவித்து கதை எழுத வைத்து இப்படி ஒவ்வொருவரது திறமையையும் வெளிக் கொணரும் எங்கள் ப்ளாகிற்கு எத்தனை பாராட்டுகள் வாழ்த்துகள் சொன்னாலும் தீராது!!! நிறைய எழுத்தாளர்களை உருவாக்கும் எங்கள் ப்ளாக் வாழ்க! வளர்க! மேடை போட்டு மாலை போட்டு விழா எடுத்துறலாமானு கூட தோணிச்சு ஹஹஹஹ .... சரி உங்களுக்கு எங்கள் சார்பாக ஒரு பூங்கொத்து!!

கீதா
Anuradha Premkumar said...
வணக்கம்...


ஸ்ரீராம் சார்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் ...என்னையும் ஊக்குவித்து எழுத தூண்டியமைக்கு...


மேலும் இங்கு உள்ள எழுத்து பிழைகளுக்கும் மன்னிக்கவும்... அப்பொழுதும் பலமுறை சரி பார்த்தேன்.. அப்பொழுது கண்ணில் படாதது எல்லாம் இப்பொழுது தெரிகிறது...
Anuradha Premkumar said...
இன்றைக்கு கதை வெளி வரும் என்பதால் ...நேற்றிலிருந்தே ஒரு படபடப்பு....தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவி போல்...
Anuradha Premkumar said...
நன்றி வெங்கட் சார்...
Anuradha Premkumar said...
நன்றி கீதாக்கா...


கதை எழுதலாமுன்னு யோசிச்ச உடன இந்த கரு தான் மனசுக்கு பட்டது.....அனுபவம் தான் கதைகளுக்கான கருவை தருகிறது...அதுனால மனசுக்கு தெரிஞ்சத எழுத்திட்டேன்....


ஆமாம்..சீக்கிரம் ஸ்ரீராம் சார்க்கு... மேடை போட்டு மாலை போட்டு விழா எடுத்துறலாம்...என்னைய மாதரி ஆளுகளை எல்லாம் கதை எழுத சொல்றதுக்கு...
KILLERGEE Devakottai said...
முயற்சி திருவினையாக்கும் என்பதை மையமாக வைத்து சொல்லப்பட்ட கருத்து நன்று இந்த முயற்சி தங்களுக்கும்தான் வாழ்க வளமுடன் - கில்லர்ஜி
கார்த்திக் சரவணன் said...
சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே எனும் பாடலுக்கும் அசிம் பிரேம்ஜியின் நூலில் வரும் சொற்றொடருக்கும் எத்தனை முரண்பாடு?

ஒரே ஒரு தனிப்பட்ட கருத்து - இதுபோன்று புதிதாக முயற்சிக்கும்போது, அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டு பிழைத்திருத்தங்களை செய்துவிட்டு எழுதுங்கள்.

முதல் முயற்சிக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ஹேமா (HVL) said...
நன்று,வாழ்த்துகள்!
Asokan Kuppusamy said...
பாராட்டுகள் தொடருங்கள் வெற்றி
Angelin said...
ஹை நம்ம அனுவோட கதையா இன்று ..
அனு நல்லா இருக்கு கதை அழகிய எளிய நடையில் பயணிக்கிறது . (அவர்கள் ட்ரூத் கண்ணில் இது(நடை ) படக்கூடாது )

தவளை கதையும் நினைவிற்கு வருகிறது எதைப்பற்றியும் கவலைப்படாமல் இலட்சியம் இலக்கு ஒன்றை மட்டும் மனதிற்கொண்டு யாராக இருந்தாலும் பயணிக்க வேண்டும் ...கதை நல்லா இருக்குப்பா ..
Angelin said...
வாழ்த்துக்கள் அனு தொடர்ந்து எழுதுங்கள் .பாராட்டுக்கள் எங்கள் பிளாக் பகிர்வுக்கும் அனைவரையும் ஊக்குவிப்பதற்கும்
Angelin said...
அனு நீங்க கட்டியிருக்கும் பட்டுப்புடவை கனகாம்பரம் வித் கிறீன் பார்டர் தானே ..சேம் பின்ச் .என்கிட்டயும் இருக்கே இதே கலர் பட்டு
Chellappa Yagyaswamy said...
நல்ல முயற்சி. எந்தக் கதைக்கும் ஒரு சின்ன கரு தான் முக்கியம். உங்கள் கரு வலுவாக உள்ளது. கதையை எழுதிய பிறகு ஐந்துமுறையாவது படித்துப் படித்து மெருகூட்டவேண்டும் என்று சாவி கூறுவாராம். அதை இப்போது நான் பின்பற்றுகிறேன். நீங்களும் முயற்சிக்கலாம். வயதும் வாழ்வும் உங்களுக்குப் பலம். எனவே விரைவில் முன்னுக்கு வரலாம். வாழ்த்துக்கள்.
- இராய செல்லப்பா நியூஜெர்சி
Thulasidharan V Thillaiakathu said...
ஏஞ்சல் எனக்கு மிகவும் பிடித்த காம்பினேஷன் ஆரஞ்ச் வித் க்ரீன்...அதே போல ஸ்கை ப்ளூ வித் ஆரஞ்சும் செமையா இருக்கும் ஆனா நான் பட்டு உடுத்தறது இல்ல...ஏஞ்சல் அனு ரொம்ப அழகா இருக்காங்கல்ல.!!!! ஏஞ்சல் போல...அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்லுவாங்களே!!

கீதா
'நெல்லைத் தமிழன் said...
நல்ல கரு. பாரா ஒலிம்பிக்ஸ்ல கலந்துகொண்டவர்கள், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ல கலந்துகொண்ட இந்தியர் இவங்கள்லாம் மிக மிக எளிய சூழலிலிருந்து வந்தவர்கள். லட்சியம் அல்லது முனைப்பு இல்லைனா?
Thulasidharan V Thillaiakathu said...
கதை எழுதலாமுன்னு யோசிச்ச உடன இந்த கரு தான் மனசுக்கு பட்டது.....அனுபவம் தான் கதைகளுக்கான கருவை தருகிறது...அதுனால மனசுக்கு தெரிஞ்சத எழுத்திட்டேன்....// நல்ல கரு அனு! உங்கள் வீட்டனுபவம் நிறைய தெரியுது!!! மனதில் தோன்றுவதுதானே கதை!! நல்ல இருக்கு அனு. பிழைகள் எல்லாருக்கும் வரும் அனு. எனக்கெல்லாம் நிறையவே வரும்... உங்கள் நடை ஏஞ்சல் சொல்லியிருப்பது போல் ஒரு கிராமத்து இளைஞன் தன் வழக்குமொழியில் பேசியிருப்பது போல் வருவது நன்றாகவே இருக்கு! வழக்கு மொழி, வட்டார மொழியில் வந்தால் கதையின் உயிரோட்டம் வலுப்பெற்று நன்றாகத்தானே இருக்கும் அது போன்று அனு!! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் குமரு அப்படியே கண் முன் தோன்றினான்...குமரு வெற்றி பெறுவான்!! அது போல் அனு நீங்களும்!! வாழ்த்துகள்!!

கீதா
வை.கோபாலகிருஷ்ணன் said...
முதல் கதை ... முதல் முயற்சி ... அதுவும் மிக அழகாகவே வெளிப் படுத்தப்பட்டுள்ளது.

குறையொன்றும் இல்லை !

எதையும் சாதிக்க நம்மிடம் முதலில் லட்சியம் மட்டுமே வேண்டும். பிறரின் கேலி கிண்டல்களை அலட்சியம் செய்ய வேண்டும்.

நம்முடைய உண்மை நலம் விரும்பிகளுடனும், நம்மை ஊக்குவிப்பாளர்களுடனும் ஊக்கு (Safety Pin) போல நாம் நம்மைப் பின்னிப் பிணைந்து கொள்ள வேண்டும்.

கதாசிரியருக்குப் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

வாசிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களுக்கு என் நன்றிகள்.
Angelin said...
@கீதா ..ஆமாம் ..கோயில் பின்னணியில் அழகான சிரிக்கும் தங்க சிலை போல தோன்றியது அனுவை பார்க்கும்போது ..
அப்புறம் நானும் பட்டு வாங்குவதில்லை ..இந்த நிறத்தில் ஒரு பட்டுப்புடவை அப்பா 2008 இல் எனக்காக வாங்கி அனுப்பினார் அதோடு பார்சல் அனுப்ப அவருமில்லை .மேலும் இங்கே நான் சம்மரில் சல்வார் குர்தா வின்டரில் டெனிம் ,,இதில் பல வருடம் கழித்து ஆலயத்துக்கு 2016 கிறிஸ்துமஸுக்கு தன புடவை கட்டினேன் அதுவும் பல வருடம் பத்திரப்படுத்தி வைத்த ஒரு புடவையை ..
tussar சில்க் என்று ஒரு புடவை படம் பார்த்தேன் அழகோ அழகுதான் ஆனால் ஒரு பட்டுக்காக அத்தனை பூச்சிகளை :( என்ற எண்ணம் தோன்றியபோது அது பிடிக்கவில்லை இது எனது கருத்து mattume :) பட்டு உடுத்துவது அவரவர் விருப்பம் :)
Angelin said...
அனு ..கீதா சொல்வதைப்போல ..எழுத்து பிழைகளுக்கெல்லாம் வருந்தாதீங்க ..இன்னும் எனக்கே பல நேரம் வார்த்தைகள் தொண்டையில் நிற்கும் சில நேரம் சரியான வார்த்தைகள் வராது நிறைய நேரம் பின்னூட்டத்தில் கோபு அண்ணா மற்றும் பலர் சரியான வார்த்தைகளை இட்டு பதில் தருவார்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக்கொள்கிறோம் நாம் அனைவருமே அதனால் தொடர்ந்து எழுதுங்கள்
athira said...
ஓஓஓ மை கடவுளே இப்போதான் பார்த்தேன்ன்ன்ன் வாறேன்ன்ன் ஈவினிங்......
ஓஓஓஒ அனுவைப் பார்த்திட்டேன்ன்ன்ன் அனுவைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்
G.M Balasubramaniam said...
குமாரை வெச்சுக் கலக்கிட்டீங்களே அனு
Anuradha Premkumar said...
நன்றி கில்லர்ஜி சகோ...

ஆம் கண்டிப்பாக முயற்சி திருவினையாக்கும் ...
Anuradha Premkumar said...
தங்கள் கருத்தும், ஆலோசனைக்கும் மிகவும் நன்றி கார்த்திக் சரவணன்..

கண்டிப்பாக அடுத்த முறை அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டு என் எழுத்தை மெருகேற்றுகிறேன்...
Anuradha Premkumar said...
நன்றி ஹேமா மேடம்...
Bagawanjee KA said...
சிறுகதை எழுத வேண்டும் என்ற இலட்சியத்தில் அனுராதா பிரேம்குமார் வெற்றி பெற்றுவிட்டார் !வாழ்த்துக்கள் :)
Anuradha Premkumar said...
நன்றி அசோகன் சார்...
Anuradha Premkumar said...
வழக்கம் போல் உங்க ஆழ்ந்த ..அழகான வாழ்த்துக்கு மிகவும் நன்றி...ஏஞ்சலின்....
athira said...
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா.. இது கண்ணில ஆரம்பம் படாமல் போச்சா... அதனால இங்கு வர லேட்டாயிட்டேன்.. இப்போதான் அஞ்சு மணிக்கு வந்து அஞ்சாவது வோட்ட் என்னோடது:).. ஏன் சொல்றேன் எனில் ஒலிம்பிக்கில் தங்கம் கிடைச்சால் எனக்கும் பங்கு கிடைக்குமெல்லோ:)..
athira said...
ஆஹா இது முதல் முயற்சியே இப்பூடி பப்ளிக்கில் எத்தனையோ பேர் படிக்கும்படி ஆச்சு.. நல்ல முயற்சி.. நல்ல சிந்தனை.. தொடர்ந்து எழுதுங்கோ..என்னுடைய முதல் கதை, எழுதி பேப்பருக்கு போட்ட இடத்தில போட்ட வேகத்தில வெளியே வரல்ல எனச் சொல்ல வந்தேன் அதால மனமொடிஞ்சு.... சரி விடுங்கோ.. அது போகட்டும்... மிக அருமையான கற்பனை. சொந்தப் பாசையில் அழகா சொல்லிட்டீங்க குமரு:) கதையை.
athira said...
சகோ ஸ்ரீராமுக்கு ஒன்று சொல்ல நினைத்தேன், சொல்லிடுறேன்.. சரி எனில் எடுத்துக்கோங்க இல்லையெனில் கிழிச்சு கீதா வீட்டுக் கூரையில வீசிடுங்கோ:)..

ஹா ஹா ஹா இல்ல நான் நினைச்சது என்னவெனில்... திங்கள் கிழமை சமையல் குறிப்புப் போடும்போது அல்லது ஞாயிற்றுக் கிழமை வீடியோவின் கீழே சின்னதா ஒரு ஊசிக்குறிப்பு போட்டுவிடலாம்... செவ்வாய்க் கிழமை இன்னாருடைய கதை வரப்போகிறது என. நம் உறவுகள்.. நெருங்கிய சொந்த பந்தங்கள் எனில், நாங்க கொஞ்சம் ரெடியாகலாமெல்லோ.. அரிவாள் மண்வெட்டி ஆயுதம் எல்லாம் எடுத்து வச்சு...:)
athira said...
///Angelin said...
அனு நீங்க கட்டியிருக்கும் பட்டுப்புடவை கனகாம்பரம் வித் கிறீன் பார்டர் தானே ..சேம் பின்ச் .என்கிட்டயும் இருக்கே இதே கலர் பட்டு////

நான் இதுக்கு ஒண்ணும் சொல்லாமல் போறேன்ன் ஜாமீஈஈஈஈஈஈ:)... கடவுளே ஆண்டவா உனக்குக் கருணையே இல்லயாஆஆஆஆ.. இந்தக் கொமெண்ட்ஸ் ஐ எல்லாம் என் கண்ணில பட வைக்கிறியே ஆண்டவா:)..
Anuradha Premkumar said...
இங்க உள்ள பாசமான பாராட்டையும் , அனுபவ வழிகாட்டல் களையும் படித்த உடனே மறுமொழி கொடுக்க வேண்டும் என் நினைத்து டைப் அடிக்க ஆரம்பித்தால்....எங்கள் கணிணிக்கு உடல் நலம் இல்லாமல் போய் விட்டது...அதை சரி செய்து இப்பொழுதுதான் மீண்டும் ஆரம்பிக்கிறேன்..


என்னடா இது கடமைக்கு வந்த சோதனை.. !
Anuradha Premkumar said...

ஆமா அஞ்சு இந்த புடவை ஆரஞ்சு வண்ணத்தில் பச்சை கரை உள்ள ரா சில்க் புடவை ....பட்டு இல்லை...
நானும் பட்டு புடவைகள் பெரும்பாலும் வாங்குவது இல்லை....

ஆன இன்னொரு சேம் பின்ச் உண்டு...அது என்னா இந்த புடவை இந்த தீபாவளிக்கு அப்பா வாங்கி தந்தது....
Anuradha Premkumar said...

நன்றி...இராய செல்லப்பா சார் ....அடுத்த முறை நீங்கள் கூறியிருப்பது போல் 4- 5 முறை படித்து கதையை மெருகேற்றுருகிறேன்...மிகவும் நன்றி நெல்லை தமிழன்....


நன்றி வை. கோ சார்... என் எழுத்தே முதலில் உங்கள் சிறுகதைக்கான விமர்சனங்களிலே தொடங்கியது...


நன்றி G .M B ஐயா..

நன்றி Bagawanjee KA ஐயா ..


நன்றி அதிரா..குமரு ஒலிம்பிக்ல தங்கம் வாங்கும் போது உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு...
Anuradha Premkumar said...
அஞ்சு, கீதா அக்கா...

எந்த காரியமுமே செய்ய செய்ய அந்த பழக்கத்திலே தான் அதன் சிறப்பும் , தெளிவும் அதிகமாகும் என்பது தெரியும்...


இருப்பினும் உங்களின் கருத்துகளை வாசிக்க வாசிக்க ....மனம் மகிழ்கிறது என்பது உண்மை....
Thulasidharan V Thillaiakathu said...
சகோ ஸ்ரீராமுக்கு ஒன்று சொல்ல நினைத்தேன், சொல்லிடுறேன்.. சரி எனில் எடுத்துக்கோங்க இல்லையெனில் கிழிச்சு கீதா வீட்டுக் கூரையில வீசிடுங்கோ:)../ ஹஹாஹ்ஹ் அதிரா ஸ்ரீராம் ரொம்ப நல்ல பையனாக்கும்...அவர் பேப்பரக் கிழிச்சு கீதா வீட்டுக் கூரை மேல போட மாட்டார்...குப்பைய வெளிய போடவே மாட்டார்...எங்க ஊர்ல நாங்க வெளில குப்பை கொட்ட மாட்டோம் ஹிஹீஹி அதனால ஸ்ரீராம் எங்கிட்ட ரகசியம் சொன்னார்..அதிரா கிட்ட சொல்ல வேண்டாம்னு. அதிரா விட்டு டஸ்ட்பின்ல தான் கிழிச்சுப் போடுவாராம்...ஹஹஹ்

கீதா..
வல்லிசிம்ஹன் said...
அன்பு அனு, அழகாக் கதை எழுதி இருக்கீங்க. ஒண்ணுமே கோர்பவையா சொல்லத் தெரியாத என்னையே ஸ்ரீராம் ,எழுதச் சொல்லும்போது உங்கள் கதை ஒரு நல்ல கருவோடு அருமையா வந்திருக்கு. மனம் நிறை வாழ்த்துகள். ஸ்ரீராமுக்கு நன்றி.
Anuradha Premkumar said...
நன்றி அம்மா...
Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
கன்னி முயற்சியே
நன்றென நறுக்கென
சொல்லி முடித்த
கதையாச்சே!
பாராட்டுகள்!
பரிவை சே.குமார் said...
முதல் கதை....
முதல் முயற்சி...
நல்ல கதை...
வாழ்த்துக்கள்...
Mahi said...
வாழ்த்துக்கள் அனு!! உங்க எழுத்துப்பயணம் தொடர்ந்து வெற்றி பெற நல்வாழ்த்துகள்!! குமரு சூப்பரு!! 😀


லட்சியம்

   குமரு பஸ்ல உக்காந்து வெளியில விசுற  காத்தையும், மலையின் அழகையும் பார்த்துட்டு இருந்தான்...அந்த பக்கம் ஓடுன ஆட்டு குட்டிய பார்க்கவும் மனசுக்கு ஊரு ஞாபகம் வந்துடுச்சு..சொர்க்கம் ..சொர்க்கம்...

   பக்கத்துல இருந்த தாத்தா என்ன அப்பு சொல்லறீங்க னு.. கேக்க.. தான் ..சொர்க்க சொர்க்கனு மனசுகுள்ள சொல்றதா நினச்சு வெளியில சொன்னது தெரிஞ்சது...இல்ல தாத்தா ஊரு  ஞாபகம் னு அவர பார்த்து ஒரு சமாளிப்பு... ....

  என்னமோ போப்பா...இந்த பசங்கள புரியவே மாட்டேங்குது னு...தாத்தா திரும்ப கண்ண மூடி உறங்க ஆரம்பிச்சுட்டார்...


   நானு தான் குமரு சுமார படிச்சு...ஒரு கம்பெனியில வேல பார்க்குறேன்...அப்பாவும்,  அம்மாவும் காடு பார்த்து வாழற குடும்பம்...என்னையே நம்பி எல்லா எங்க வீடு இல்ல..அவ்வங்க சம்பாதிக்கிறது அவ்வங்க செலவுன்னு போகுது..

   இப்ப எங்க பஸ்  ஸ்கூல்ல கிராஸ் பண்ண பசங்க அழகா சந்தோசமா விளையாண்டுகிட்டு இருந்தானுக..அதை பார்க்கவும் நாமும் இப்படி தானே விளையாண்டோம்...இப்ப என்னமோ போகுது வாழ்க்கைன்னு ஒரு வெறுமை வந்து ஊட்காந்துகிச்சு...


   மீண்டும் மனசுல இப்போ இருக்கற வேலையும்...அதுக்கு ஓடுற ஓட்டமும்...னு..திரும்ப திரும்ப ஒரு அலுப்பு..சலிப்பு


   ஒரு மாசம் அப்படியே ஒரு மாதிரி போச்சு ..ஊருக்கு போய்ட்டு வந்தும் ஒரு மாசம் ஓடிபோச்சு ...ஆன இந்த வெரும மட்டும் அப்படியே இருக்கு ...ஒரு மாசமா ஏன் இப்படியே இருக்கு ஏதாவது பன்னனும் தோணுச்சி..


அப்பதான் பஸ் அங்க இருக்கிற சேடியத்த(stadiym) கிராஸ் பன்னுது ..ஒன்னும் யோசிக்காம நானும் அங்க இறங்கி உள்ள போனேன்...பார்த்தா எவ்வோளோ சனம் எல்லாம் ஓடுது... குண்ட தூக்கி போடுது... ஈட்டிய எரியுது...excercise பண்றேன்னு எண்ணமோ பண்ணுது... அடடா...

    வயசுன்னு பார்த்த சின்ன பசங்கலேந்து...தாத்தா வரைக்கும் உள்ள வயசுகாரவங்க...சூப்பர் ..சூப்பர்.. னு.. மனசு குதியாட்டம் போட ஆரம்பிடுச்சு....


   இப்படியே தனமும் இங்க வேடிக்க பார்க்க வர ஆரம்பிச்சுட்டேன்...மனசுல இருந்த வெரும எல்லா காத்தோட போச்சு...

   அய்..அங்க அந்த அண்ணங்க ராமரோட வில்லு மாதிரி வச்சுகிட்டு  ஏதோ பண்றங்கனு பக்கத்துல போய் கேட்டேன்...அந்த அண்ணே ...இது தான்பா வில்வித்தை னு சொன்னாரு ..


  சூப்பரா இருக்கு அண்ணே ..நானும் பண்லாமனு.. கேட்டேன் ..அதுக்கு என்ன.. நீ சார்ர போய் பாரு அந்த ரூம்ல இருபாருனு ..அவரு உனக்கு எல்லாம் சொல்லி குடுப்பாருன்னு சொன்னாங்க......

    ஐயையோ..சார்ர பார்க்கறதுக்குள்ள கையெல்லாம் வேர்த்துடுச்சு....அவசரப் பட்டுடோமோனு ஒரு பயம் வந்துடுச்சு...திரும்பலாம் நினக்கரதுக்குள்ள ..

    சார்ரும் என்னைய பார்த்துட்டு...என்ன தம்பி வேணும் கேட்டாரு...அது சார்
 நானும் கத்துக்கலாம னு ...பயந்து பயந்து கேட்டேன்..

   

ஓ ... அதுக்கென்ன தாராளமா join செய்யலாம்....கொஞ்சம் physical fittness தான் வேணும்...ம்ம் பார்த்துக்கலாம்.... நீ எந்த நேரத்து குரூப் னு முடிவு பண்ணிக்க.. அப்பறம் நேரத்துக்கு வரணும்...நல்லா பயற்சி எடுக்கணும் ..என்னக்கி வரனும் சொல்லி ..நம்ம ஆட்டத்தையும் தொடக்கி வச்சுட்டாரு....

   நானும் பயற்சிக்கு போக ஆரம்பிச்சுடேன்ங்க.....சூப்பரா போகுது...என்ன படம் பார்க்கறது...ஊர் சுத்தறது எல்லா இல்ல....
வேலைக்கு போறது...அப்பறம் பயற்சினு..ம்ம் ..ம்ம்..நானே மனசுக்குள்ள "குமரு கலக்குறடா "னு சொல்லிக்கிறேன்...

   ஆரம்பத்தில்   ஊர்ல, friends எல்லாரும் நான் சொல்லறதே கேட்டு ஆச்சிரியமாக பார்த்தாங்க...


    அப்பறம் தானே வில்லங்கமே , கொஞ்ச நாளுகலுச்சு சொந்தகாரங்களே .."என்னா குமரு எண்ணமோ விளையாட்டு எல்லா பண்றியாமே .சீக்கிரம் சம்பாதுச்சு கல்யாணம் கட்டுவோம்,,,ஊட்ட கட்டுவோனு இல்லாம... இந்த வேண்டாத வேல எல்லாம்... போய் பொழப்ப பாருனு” சொல்ல ஆரம்புசுட்டாங்க....

   என்னடாது இது...திரும்ப ஒரு ராமாயணம் ன்னு...நான் கண்டுக்கல..


    ஒருநாளு என் சிநேகிதன் கேட்டான்...என்னடா பண்றேன்னு எவ்வளவு நாளக்கி இந்த இரட்டை மாட்டு வண்டினு..

   அதுக்கு நானு மச்சான்..நான் அடுத்த ஒலிம்பிக் போக போறன்னு டக்குனு  சொல்லிடேன் ..அவன் அப்படியே நின்னுடான்..அப்பறம் பார்த்த அவன்ட ஒரே சிரிப்பு..

    நேத்து தான் அசிம் பிரேம்ஜியின்  புக்கு படிசேன்.. அவருதான் சொன்னாரு.. “ எப்பொழுது நமது இலட்சியத்தை பார்த்து மற்றவர்கள் சிரிக்கவில்லையோ,  அப்பொழுது நாம் மிக சிறிய இலட்சியத்தை கொண்டுள்ளோம் ” என்னு

   அப்பாடா இப்பதான் மனசுக்கு சந்தோசமா இருக்கு...ஆமா நமக்கு இலட்சியம் இருக்கு இல்ல...

    என்ன இரட்டை மாடுவண்டிதான் ...பொழப்புக்காக வேல..மனசுக்காக வில் வித்தை...


   இப்போ எல்லா மனசுல வெறுமை எல்லாம் இல்ல...ஒரே சந்தோசம் ஆம் நாமும் ஒலிம்பிக் போறத்துக்குள கடுமையா வேல பார்க்குறோம்...

என்ன நான் சொல்றது..


...7 comments:

 1. வாழ்த்துகளும், பாராட்டுகளும். இன்னும் நிறைய முயற்சி பண்ணுங்க...

  ReplyDelete
 2. உண்மையில் கதையின்
  மையக் கருவை யோசிக்க
  முதல் கதை என அனுமானிக்க இயலவில்லை
  மிக மிக அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ஹை ..பின்னூட்டங்களை தொகுத்து வித்யாசமான முயற்சி ..வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் அனு ..

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 5. வாழ்த்துகள் பாராட்டுகள்! முயற்சி திருவினையாக்கும்!! ச்கோ!! இங்குதான் வாசிக்க முடிந்தது. கதை நல்லாருக்கு..

  கீதா: அட! அனு! பின்னூட்டங்களையும் கொடுத்து க்தையையும் கொடுத்து என்று கலக்குறீங்க!!

  மேலும் மேலும் எழுதி முயற்சி செய்யுங்க!! வாழ்த்துகள்! பாராட்டுகள்!

  ReplyDelete
 6. சூப்பர் குமரு. என்ன ஒரு எழுத்துநடை அனு. சூப்பரா எழுதுறீங்க. இவ்வளவு நாளா எழுத்தாளர் அனு எங்கே இருந்தாங்க. தொடர்ந்து முயற்சி செய்து எழுதுங்க. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
  சில தடைகள் வர இயலவில்லை. மற்றைய பதிவுகளை வாசிக்கிறேன் அனு.

  ReplyDelete