மோமோஸ் சாப்பிட வாங்க....
நம்முரு கொழுக்கட்டை மாதிரி இருந்தாலும்...சுவை வித்தியாசமானது...சாப்பிடவும் நல்லா இருக்கும்...புதிய சுவையில் ..புதிய உணவுகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு...
மோமோஸ்' என்று இங்கும்,
சீனாவில் 'மோமோ',
திபெத் நேபாளில் 'டம்ப்ளிங்' என்று அழைக்கப்படும் இந்த உணவு
மங்கோலியாவில் புௗஸ்,
ஜப்பானில் Qyoza,
ஆப்கான், கொரியாவில் Mantu,
மொரிசியஸ்யில் Dim sum என்றெல்லாம் கூறப்படுகிறது.
எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதானே?
அதுபோலவே நேபாளம், சிக்கிம், லடாக் மக்களின் பாரம்பரிய உணவை எப்படி அழைத்தாலும் சுவை ஒன்றுதான்.
ஆரம்பத்தில் மாமிசம் கலந்த மோமோஸ்களே பயன்பாட்டில் இருந்தன.
அதன் பரிணாம வளர்ச்சியாக இப்போது வெஜ், பனீர், இறால், மோமோஸ் சூப் என்று கணக்கிலடங்காத வகைகளாக பரவி உள்ளது.....
மேலும் மோமோஸ் பத்தி தெரிச்சுகனுமா....
வெங்கட் நாகராஜ் சார் தளத்தில் போய் பாருங்க.... சாப்பிட வாங்க: மாமோய்..... இது மோமோ!
தேவையானவை....
மைதா - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உள்ளே வைக்கும் பூரணத்துக்கு ...
முட்டை கோஸ் - கால் கப் (துருவிது)
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி ,பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
(வெங்காயம் ,வெங்காயத் தாள் , சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்..
எல்லாம் சேர்க்கலாம் ..ஆனால் அன்று நான் சேர்க்க வில்லை)
செய்முறை...
மைதாவை உப்பு எண்ணெய் சேர்த்து , தேவையான தண்ணீர் விட்டு சிறிது கெட்டியாக பிசைந்து அரைமணி நேரம் ஊற விட வேண்டும்..
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கோஸ், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பெரிய தீயில் வதக்கவும். பின் சிறிது நீர் சேர்த்து வேகவைத்து , உப்பு, மிளகுத் தூள், சேர்த்து வதக்க வேண்டும்...
ஒரு சப்பாத்தி அளவு மாவு எடுத்து சிறிது தட்டையாக்கி நடுவில் பூரணம் வைத்து, கொசுறி வைத்து மடிக்க வேண்டும்.... இட்லி பாத்திரத்தில் 5 நிமிடங்கள் மட்டும் வேகவைத்து எடுத்தால் ..... சூடான மோமோஸ் காரமான சட்னியுடன் சாப்பிட தயார்....
நிறம், உருவம் எல்லாம் கடை அளவு வந்தாலும்....சுவை சிறிது குறைவு தான் ....😐
ஆனாலும் மோசம் இல்லை...சின்னவர் ரொம்ப ஆசையாய் விரும்பி கேட்டு வாங்கி உண்டார்...😂😀 எனக்குமே பிடித்து இருந்தது..💃
அன்புடன்
அனுபிரேம்..
கேள்விப்பட்டிருக்கேன் ஆனா சாப்பிட்டதில்லை ..ஈஸியா இருக்கு மகளுக்கு செய்து தரேன்
ReplyDeleteநல்லாருக்கும் ஏஞ்சல். இதுக்குள்ள உங்க இஷ்டப்படி உள்ள ஸ்டஃப்ஃபிங்க் வைக்கலாம்...ஆப்பிள் கூட இந்த மாதிரி செஞ்சு உள்ள வைச்சுருந்தாங்க மணாலில ஆப்பிள் ஃபெஸ்டிவல் சமயத்துல...அதுவும் நல்லாருந்துச்சு...
Deleteகீதா
புகைப்படமே ஆசையை தூண்டுகிறது
ReplyDeleteஆஹா.... என் பதிவினையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி. எனக்கு அவ்வளவா பிடிக்கலை!
ReplyDeleteவெங்கட்ஜி கடைகளில் மோமோஸ் நன்றாக இல்லை ஆனால் நாம் வீட்டில் செய்தால் நன்றாக நம்ம இஷ்டப்படி உள்ளே பூரணம் வைத்து சாப்பிடலாம்..
Deleteகீதா
இங்கு ரெஸ்டோரன்களில் சைனீஸ் உடையதும், சூப்பர்மார்கட்டிலும் விதம் விதமா வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம், ஆனா முட்டைக்கோஸ் வைத்தது சாப்பிட்டதில்லை.
ReplyDeleteமுட்டைக்கோசை உள்ளே வைக்கும்போது, சீஸ் துருவலும் சேர்த்து வைத்து மடித்தால் இன்னும் சூப்பராக இருக்குமென நினைக்கிறேன்.
யெஸ் அதிரா ஸேம்...நான் வெரைட்டி வெரைட்டியா மகன் இருக்கும் போது செஞ்சு கொடுத்துட்டேன் இப்போ அவ்வளவா செய்யறது இல்லை..
Deleteகீதா
அனு அம்மாவிடம் செய்ய சொல்லவும்
ReplyDeleteசுவைக்க ஆவல் நன்றிக
அனு தூள் கிளப்புங்க!!! இதுல நான் மைதா வித் கோதுமையும் கலந்து செஞ்சு பார்த்தேன் அதுவும் ஓகெயா வந்துச்சு..அப்புறம் அரிசி மாவோடு மைதாவும் சேர்த்துக் கிளறி நாம கொழுக்கட்டை செய்வோம்ல அப்படியும் செஞ்சு பாருங்க அது இன்னும் நல்லா வந்தா மாதிரி எனக்குத் தோணிச்சு...இன்னிக்கு எங்க வீட்டில் ருமாலி ரோட்டியும், மட்டர் பனீரும், வாழைப்பூ தொக்கு வரகரிசி தயிர்சாதம்...கெஸ்ட் வந்தாங்க...
ReplyDeleteகீதா
நன்றி கீதாக்கா...
Deleteஅடுத்த தடவை கோதுமை மாவில் முயற்சிக்கணும்...
இன்னிக்கு எங்க வீட்டில் ருமாலி ரோட்டியும், மட்டர் பனீரும், வாழைப்பூ தொக்கு வரகரிசி தயிர்சாதம்.....சூப்பர் ரெசிப்பி ...படிக்கும் போதே ஆசையாய் இருக்கு...
ருமாலி ரொட்டி செய்முறை பகிருங்களேன்...செஞ்சு பார்க்கிறேன்...
அழகாய் படங்களுடன் மோமோஸ் அருமை
ReplyDeleteஅழகாய் படங்களுடன் மோமோஸ் அருமை
ReplyDelete