29 April 2018

ஸ்ரீ மதுரகவியாழ்வார்

இன்று  (29.4.2018)  மதுரகவியாழ்வார்    அவதார தினம் .....

 (சித்திரையில் – சித்திரை)........









மதுரகவி ஆழ்வார்  வாழி திருநாமம்!


சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே

திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே

உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே

ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே

பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே

பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே

மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே


மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே !


25 April 2018

மத்ஸ்ய மேளா 2


இனிய காலை வணக்கம்...



மத்ஸ்ய மேளா என்னும் மீன்கள் கண்காட்சியின் பட தொகுப்பு...

மீண்டும்..





21 April 2018

சுவாமி இராமானுஜர் -உடையவரின் உயர்ந்த பக்தி நிலை


இன்று உடையவர் திருநட்சத்திரம்..சித்திரையில் திருவாதிரை

எம்பெருமானார்  (சித்திரை – திருவாதிரை)


அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே

அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே

பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே

பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே

சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே

சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே ..!













14 April 2018

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..



நட்புக்கள் அனைவருக்கும்..

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..




10 April 2018

என் காதல் ஒரு வேள்வி..



வணக்கம் ..

வாழ்க நலம்..


இது வரை இந்த புத்தக அலமாரியில் சில புத்தகங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளேன்..

அவை  விமர்சனம் அல்ல..எனது வாசிப்பு அனுபவம்..😊😊😊


அந்த வரிசையில் இன்று காணப்போவது...

என் காதல் ஒரு வேள்வி..

ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் ..

இக்கதை இன்னும் புத்தகமாக வரவில்லை..விரைவில் வரும்.....

ஆனால் புத்தம் புது கதை...

சிலநாள் முன்னே முடிவுற்ற புத்தம் புது மலர்..






08 April 2018

மத்ஸ்ய மேளா (MATHSYA MELA) 2017


இனிய காலை வணக்கம்...



மத்ஸ்ய மேளா என்னும் மீன்கள் கண்காட்சிக்கு  கடந்த டிசம்பர் மாதம் செல்லும் வாய்ப்பு கிட்டியது......

அங்கு  வண்ண வண்ண மீன்கள்...

பல பல நிறத்திலும்...அளவிலும்... கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

ஒவ்வொன்றும் அத்துனை அழகு...

இக்கண்காட்சி பெங்களுருவில் (  kanteerava stadiumத்தில் )  நடைபெற்றது...


அந்த அழகு காட்சிகள் இன்று உங்களுக்காக...







06 April 2018

வேர்க்கடலை உருண்டை

வாழ்க வளமுடன்..



இன்றைய இனிப்பு பதிவு வேர்க்கடலை உருண்டை...


வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது.

வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.  வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.

வேர்க்கடலையில் வைட்டமின் A, நீரில் கரையக் கூடிய வைட்டமின் B3 போன்றவை அதிகமாக உள்ளன.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம்  உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.