தொடர்ந்து வாசிப்பவர்கள்

06 April 2018

வேர்க்கடலை உருண்டை

வாழ்க வளமுடன்..இன்றைய இனிப்பு பதிவு வேர்க்கடலை உருண்டை...


வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது.

வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.  வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.

வேர்க்கடலையில் வைட்டமின் A, நீரில் கரையக் கூடிய வைட்டமின் B3 போன்றவை அதிகமாக உள்ளன.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம்  உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.
தேவையானவை

வேர்க்கடலை  - 1.5 கப்

வெல்லம்             - 1 கப்

எள்                          - 1 கப்


நெய்                    - 2 ஸ்பூன்செய்முறை


 கடலை, எள்ளு  இரண்டையும் தனி தனி யாக  வறுத்து கொள்ளவும்..

பின் கடலையின் தோலை நீக்கி ..அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸ்யில் நுணுக்கவும்...ரொம்ப அரைத்து விட கூடாது...

பின் அந்த கலவையில்  வறுத்த எள், நெய் சேர்த்து பிடிக்கவும் ...

இதில் எள்ளை பொடித்தும் சேர்க்கலாம்..

 நான் எள்ளை அப்படியே தான் சேர்த்தேன்..
வேர்க்கடலை உருண்டை ரெடி..


அன்புடன்
அனுபிரேம்...17 comments:

 1. சுலபமாக இருக்கிறதே.. மாமியார். வெல்லப் பாகு வைத்து ,வேர்க்கடலை சேர்த்து பிடிப்பார். கையெல்லாம் சிவந்து விடும். இது நன்றாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன் நன்றி அனு மா.

  ReplyDelete
  Replies
  1. அந்த முறையை விட இது எளிது மா..செஞ்சு பாருங்க..

   Delete
 2. மிகசுலபமா இருக்கு. நான் வேர்கடலை அல்வா(நாங்க சொல்வது கச்சான் அல்வா) தான் சாப்பிட்டிருக்கேன். இது சாப்பிட்டதே இல்லை. நல்ல சத்தா இருக்கும். நன்றி அனு.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சுவையா இருந்துச்சு அம்மு ...செஞ்சு பார்த்து சொல்லுங்க..

   Delete
 3. அருமையான கடலை உருண்டை.
  அதிகமாய் பொடி செய்தால் எண்ணெய் வாடை வந்து விடும்.
  என் அக்கா அருமையாக செய்வார்கள்.
  வெல்லம், கடலை எள் மூன்றுமே மிகவும் சத்த்தானது.

  படங்கள் அழகு.
  பாரதி கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மா..

   ஆமா மா...பொடிக்கும் போது மட்டும் கவனமா செய்யணும்..

   Delete
 4. துளசி: ரொமப்ப் பிடிக்கும் கடலை உருண்டை ஆனால் வீட்டில் எல்லாம் செய்வதில்லை. எனவே கடையில் நான் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிடுவதுண்டு. இந்த முறையில் சாப்பிட்டதில்லை-கடையில் கிடைக்காததால்!!

  கீதா: அனு சூப்பர்!! என்னன்னா சில சமயம் வெல்லம் மண் கலந்து வருவதால் கரையவிட்டு வடிகட்டி பாகு வைத்து நார்மலாகச் செய்வது போல் செய்ய வேண்டியதாகிவிடுகிறது. என் பாட்டிக்கு வயதாகி பல் எல்லாம் கொஞ்சம் வீக் ஆகிய போது அவருக்கு ரொம்பப் பிடிக்கும் என்று இப்படித்தான் செய்து கொடுத்தேன்...நானுமே சில சமயம் சோம்பேறித்தனத்தில் முன்பு...வேர்க்கடலை ஒரு கப்பிலும் வெல்லமும் வைத்துக் கொண்டு ரெண்டு கடலை ஒரு கடி வெல்லக்கட்டி என்று சாப்பிட்டதுண்டு!!

  ReplyDelete
  Replies
  1. பாகு விட்டும் செய்யலாம் அக்கா...இந்த முறை வெல்லம் பார்க்கவே ரொம்ப பளிச்சுன்னு இருந்துச்சு ..சோ இப்படி பண்ணேன்...

   ....வேர்க்கடலை ஒரு கப்பிலும் வெல்லமும் வைத்துக் கொண்டு ரெண்டு கடலை ஒரு கடி வெல்லக்கட்டி என்று சாப்பிட்டதுண்டு!!.......

   ஹா..ஹா..சூப்பர் போங்க

   Delete
 5. ஆஹா, கடலையைப் பொடித்து இப்படி உருண்டை சுவைத்ததில்லை. கடலை அப்படியே வெல்லப்பாகில் சேர்த்துச் சுவைப்பது தான் வழக்கம். கடலை உருண்டை மிகவும் பிடித்தது. இப்படிச் செய்து பார்க்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப எளிய முறை..செஞ்சு பாருங்க..

   Delete
 6. ஆகா
  மிகவும் பிடித்தமானது கடலை உருண்டை

  ReplyDelete
 7. உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது,

  பார்வையிடவும்.

  வணக்கம் நண்பர்களே.. !

  தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/

  வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக

  பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின்

  எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  நன்றி
  http://gossiptamil.com/aggre/

  ReplyDelete
 8. இப்போதான் இதனைப் பார்த்தேன். வேர்க்கடலை உருண்டைக்கு ஏன் எள் சேர்க்கணும்? இரண்டும் வேறு வேறு இல்லையோ

  ReplyDelete
  Replies
  1. எங்கள் வீட்டில் எள்ளு சுவை அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.. அதனால் ஒரு மாறுதலுக்கு சேர்த்து செய்தது ..

   Delete