முருகா சரணம் !
கந்தா சரணம்!
கதிர்வேலா சரணம்!!
குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவில், சேலம் மாவட்டம்.
சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில்...ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.
சுமார் 700 படிக்கட்டுகளைக் கொண்ட கோவில் ஆகும்.
தல வரலாறு
விநாயகப்பெருமான் தங்கள் பெற்றோர்களிடம் மாங்கனியை பெற்றுக்கொண்டதின் காரணமாக,
முருகபெருமான் கோபித்துக் கொண்டு பழனிக்கு செல்லும் போது..
வழியில் இத்திருத்தலத்தில் சிறிது நேரம் தனது மயில் வாகனத்துடன் ஓய்வு எடுத்துச் சென்றதாக கூறுகிறார்கள்.
பிற்காலத்தில் பழனிக்கு செல்ல இருந்த பக்தர் ஒருவர் குமரகிரி குன்றில் சிறிய நேரம் தங்கினார்.
அப்பொழுது “தண்டாயுதபாணியாக நான் இங்கு குடி கொண்டிருக்கிறேன்” என ஒரு அசரீரி ஒலித்தது.
அதைக் கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழனிக்கு சென்றார்.
பழனியில் முருகன், பக்தர் முன் தோன்றி , ஒரு திருவோட்டைக் கொடுத்து குமரகிரி குன்றில், அசரீரி ஒலித்த இடத்தில் ஒரு கோவில் கட்டும்படி கூறினார்.
கீழே உள்ள மண்டபம்
பக்தர் தான் பெற்ற திருவோட்டின் மூலம் கிடைத்த காணிக்கையை வைத்து குமரகிரி குன்றில் தண்டாயுதபாணிக்கு ஒரு கோவில் அமைத்தார்.
மாங்கனிக்காக கோபித்துக் கொண்டு இங்கு வந்த தண்டாயுதபாணிக்கு நைவேத்யமாக மாம்பழங்களை படைத்து வழிபாடு நடத்துகின்றனர்.
மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள சிற்பங்கள்..
இக்கோயிலை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கருப்பண்ண சுவாமி நிறுவினார்.
கருப்பண்ண சுவாமிக்காக நிறுவப்பட்ட சிறுக்கோவிலும் அருகிலே உள்ளது.
தண்டாயுதபாணி மலைக் குன்றின் மீது தண்டத்துடன் (குபேர திசை) வடக்கு திசை நோக்கி அருள்பாளிக்கிறார்.
மேலே கோவிலுக்கு செல்லும் படிகள்..
பிரகாரத்தில் துர்க்கை அம்மன், ஐயப்பன் மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன.
இத்திருக்கோவில் காலை 6 மணிமுதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் திறந்திருக்கும்.
இப்பொழுது குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறுவதால்....முருகன் கீழ் உள்ள மண்டபத்திலே அருள் புரிகிறார்...
இருப்பினும் நாங்கள் மேலே சென்று பார்த்தோம்...மிக மிக அமைதி...
மேலே உள்ள மண்டபத்தையும் எங்களால் காண முடியவில்லை..திருப்பணியால் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது....
வழியெல்லாம் குரங்கார் துணை தான்...
மிக அழகிய திருக்கோவிலும் , அமைதியான இடமும்...
குமரன் என்பது-அவன் பேரு - குன்று
தோறும் அவனது ஊரு - தன்னை
மன்றாடிடும் அடியார்களை, கண்போலவே காத்திடும் - அவன்
இறைவன் எங்கள் தலைவன்!
சூரனை வேலால் பிளந்தான் - கொண்டைச்
சேவற் கொடியோனாய்த் திகழ்ந்தான் - சக்தி
வேலன்-சிவ பாலன்-அவன், தேவர்-துயர் தூசாக்கிட
உதித்தான் அவ தரித்தான்!
மயில் மீதினில் ஏறியே வருவான் - அவன்
துயர்களைக் களைந்தெறிந் தருள்வான் - ஆறு
முகங்கொண்ட முருகன்-அவன், அழகன்-என மனங்-குழைந்திட
வருவான் இன்பம் தருவான்!
காவடி தூக்கியே ஆடு - அவன்
காலடி பணிந்தே பாடு - நம்
பாவங்களைக் பொடியாக்கிடும் தூயன்-அவன் திருவடிகளை
நாடு தினம் நாடு!
ஆறு படை வீடு பாரு - அது
ஆறு தலைத் தரும் கேளு - கந்தன்
சரவணபவ எனும்-மந்திரம் வினைகள்-களை திரு-மந்திரம்
கூறு நாளும் கூறு!
செந்தமிழ்க் காவலன் அவனே - நாமும்
சிந்தையில் கொள்ளுவோம் அவனை - சின்ன
முருகன்-அவன், அழகன்-அவன், குமரன்-அவன், கந்தன்-பதம்
பணிவோம் பணிந்து மகிழ்வோம்!!
முருகா சரணம் !
கந்தா சரணம்!
கதிர்வேலா சரணம்!
அன்புடன்
அனுபிரேம்.
700 படிகள் ஏறிச்சென்று முருகனின் தரிசனம்.... நல்ல விஷயம். இந்தக் கோவில் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. சென்று பார்க்க விருப்பம். அவன் விருப்பம் என்னவோ....
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இதுவரை பார்த்திராத கோயில். விரைவில் செல்லும் ஆவலைத் தூண்டிய பதிவிற்கு நன்றி.
ReplyDeleteநூல் மதிப்புரைக்கான ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. நன்றி.
ReplyDeleteபுதியதோர் கோயில் அறிமுகம்...அனு. வாய்ப்புக் கிடைத்தால் ஏறிவிடலாம்...!!
ReplyDeleteமிக்க நன்றி அனு..
கீதா
மேலிருந்து நகரத்தின் அழகை பார்க்கலாம் போல. கடைசி படம் அழகு. மண்டபத்தின் சித்திர வேலைப்பாடு அழகாயிருக்கு. குன்றுதோறாடும் முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். நன்றி அனு.
ReplyDeleteகோயிலும் வரலாறும் மிக அருமை, நல்ல லொக்கேஷன்.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை சகோதரியாரே
ReplyDeleteஇத்தலம் சென்றது இல்லை.
ReplyDeleteஅருமையான விவரங்கள், படங்களுடன் பதிவு நன்று.
இதுவரை அறிந்திராத கோவில் அனு. பகிர்வுக்கு நன்றி. படங்களும் அருமைம்மா
ReplyDelete