09 March 2018

குழுமாயி அம்மன் திருவிழா...


திருச்சி மாவட்டம் புத்தூரில் நடைபெறும் மிக பெரும் விழா இந்த குழுமாயி அம்மன் திருவிழா...


குழுமாயி அம்மன் கோவில் திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது...


இந்த ஒருவார திருவிழாவின் போது அம்மன் இங்கு அருள் புரிவாள்....

































குழுமாயி அம்மனுக்கு உற்சவ அம்மன் சிலை கிடையாது.

பனை ஓலைகளால் தான் உற்சவ அம்மன் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் திருவிழாவின்போது, உற்சவ அம்மன் செய்யப்படும். பனை ஓலைகளை அம்மன் உருவில் கத்தரித்து அதை கறுப்பு துணியால் வைத்து அம்மன் உருவை அமைப்பர்.


மாசி மாதம் முதல் வாரம் புதன்கிழமை அன்று காப்பு கட்டும் வைபவம் நடக்கும். ..


 அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு காளி வட்டம் நடக்கும்.

புதன் கிழமை சுத்த பூஜையும்,

வியாழக்கிழமை குட்டி குடித்தல் வைபவமும்,

வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடுதலும்,

சனிக்கிழமை அன்று சாமி குடியேறுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

 அன்றுடன் திருவிழா முடிவடைகிறது.







மிக அருமையாக நடைபெறும் அத்திருவிழாவின் அழகிய படங்கள்  இவை...




அதை போல் சிறுது தூரத்தில் குலுந்தாலாயி அம்மனுக்கும் நடைபெறும் ...இவள் குழுமாயியின் தங்கை...



மிக சிறப்போடு நடைபெறும் திருவிழாக்களுள் இதுவும் ஒன்று....நான் கண்டு பல வருடங்கள் ஆனாலும் ...என்றும் மனதில் பசுமையாக...




பெண்  தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
    தேவி கருமாரி துணை நீயே மகமாயி

பெண்  ஆயிரம் கண்கள் உடையவளே
    ஆலயத்தின் தலைமகளே
    கடைக் கண்ணாலே பார்த்தருள்வாய்
    காலமெல்லாம் காத்தருள்வாய் (தாயே)
    அன்னை உந்தன் சன்னதியில்
    அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்
    அம்மா உந்தன் பொன்னடியில்
    அனுதினமும் சரணடைவோம்  (தாயே)
    சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா
    வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குல தெய்வம் மாரியம்மா




அன்புடன்
அனுபிரேம்...

10 comments:

  1. நேரில் கண்டாற்போல இனிய தரிசனம்...

    அழகிய படங்கள்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. பனை ஓலைகளால் தான் உற்சவ அம்மன் செய்யப்படுகிறது. // வித்தியாசமான,கேள்விபடாத தகவலாக இருக்கு.
    அழகான படங்கள். ஊர் திருவிழாவினை ஞாபகப்படுத்துகிறது படங்கள். ஒவ்வொரு நாளும் நடைபெறும் திருவிழா வித்தியாசமாக இருக்கு.

    ReplyDelete
  3. அழகிய தேரில் அம்மன் ஊர்வலம்.. துர்க்கை அம்மன் தானே..

    ReplyDelete
  4. எங்க ஊரிலும் பனை ஓலைகளால் ஆன அம்மன் சிலைக்கு திருவிழா எடுக்கும் வைபவம் வைகாசி மாசத்தில் நடக்கும்

    ReplyDelete
  5. படங்களும் பகிர்வும் அருமை சகோதரியாரே

    ReplyDelete
  6. கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் நேரில் பார்த்ததில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்க வேண்டும்.

    தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  7. குழுமாயி அம்மன் திருவிழா... இப்போது தான் கேள்வி படுகிறேன்.
    அழகான படங்கள் மூலம் நேரில் பார்த்த உணர்வு.

    ReplyDelete
  8. உற்சவ அம்மன் இல்லாத இதுபோன்ற கோயில்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். இக்கோயிலுக்கு இதுவரை செல்லவில்லை. விரைவில் செல்வேன்.

    ReplyDelete
  9. புதிய நிறைய அறிந்திராத தகவல்கள் அனு!!

    இப்படிச் செய்வதேல்லாம் ஒரு வேளை மரங்கள் எலலமே புனிதமானவை....இறைவனின் அம்சம் வெட்டக் கூடாது அவற்றைத் துன்புறுத்தக் கூடாது என்பதற்க்காக இருக்கும் என்றும் தோன்றுகிறது....

    கீதா

    ReplyDelete