17 March 2018

அழகு சிங்காரி...



வாழ்க வளமுடன்...


மீண்டும் கேக் படங்கள்....பார்த்து ரசிக்கலாம் வாங்க....அழகு சிங்காரிகளை...
















































எப்படி இருந்தது எல்லாம்...அங்க போய் பார்க்கும் போது நாங்க அப்படியே திகைத்து விட்டோம்...என்ன அழகு ன்னு...


வருடா வருடம் நடக்கிறது இந்த ஷோ ..செய்திகளில் பார்த்தாலும் இந்த முறை தான் நேரில் பார்க்கும் வாய்ப்பு...

இந்த கேக் ஷோ க்கு அனுமதி கட்டணம் 50 ரூபாய்...

பார்த்து முடிக்கும் போது தான் கவனித்தேன் ..இக்கேக்கு களையெல்லாம் தயாரித்தது.. வாய் பேச இயலா பிள்ளைகள் என...அவர்கள் ஒரு 60 - 70 பேர் இருப்பார்கள் ...குழு தலைவர் அவர்களை எல்லாம் பாராட்டி அவர்கள் மொழியில் பேசினார்கள்...

ரொம்ப பிரமிப்பாகவும் ஆச்சிரியமாகவும் இருந்தது...எல்லாம் கல்லூரி படிக்கும் பிள்ளைகள் போல.. இதை கவனித்ததில் இவர்கள் இந்த காட்சி முடிந்த பின்  இந்த கேக்குகளை என்ன செய்வார்கள் என கேக்கவே மறந்தேன்...



அடுத்த முறை செல்லும் போது அறிய வேணும்...

மேலும் இது அவர்களின் பல மணி நேர உழைப்பு...மிக  சிறப்பான காட்சிகளை கண்ட நிறைவு...💙💚💛💜💛💚💙



வாங்க பாக்கலாம் கேக்...முதல் தொகுப்பு

டைனோ முதல் கல்யாணம் வரை....



தொடர்ந்து ரசித்தமைக்கு நன்றிகள் பல...


மற்றுமொரு பதிவில் காணலாம்...



அன்புடன்,

அனுபிரேம்




11 comments:

  1. Cake ivlo alaga iruntha epdi sapdarathu???? Solluda sollu

    ReplyDelete
    Replies
    1. இது பாக்க மட்டும் தான்...நல்லவனே...😊😊

      Delete
  2. அழகான படங்கள்...
    சமையல் கலைஞர்களின் கைவண்ணம் அருமை...

    வாழ்க நலம்...

    ReplyDelete
  3. உண்மையில் எல்லாமே பார்க்க பிரமிப்பாக இருக்கு. நீங்க பார்த்தது மட்டுமல்லாமல் எங்களுக்காக படம் எடுத்து பதிவாக போட்டமையால் நாமும் இரசித்தோம். அப்பிள்ளைகளுக்கு என்ன திறமை.ஆச்சரியப்படவைக்குது. வாழ்த்துக்கள் அவர்களுக்கு. அருமை. நன்றி பகிர்வுக்கு அனு.

    ReplyDelete
  4. பார்த்து முடிக்கும் போது தான் கவனித்தேன் ..இக்கேக்கு களையெல்லாம் தயாரித்தது.. வாய் பேச இயலா பிள்ளைகள் என...அவர்கள் ஒரு 60 - 70 பேர் இருப்பார்கள் ...குழு தலைவர் அவர்களை எல்லாம் பாராட்டி அவர்கள் மொழியில் பேசினார்கள்...//

    பிரமிப்பு அனு!!! செமையா இருக்கு அவங்க திறமை...நான் முந்தைய பதிவில் கேட்டதையே நீங்களும் கேட்க நினைத்து விட்டுருக்கீங்க இல்லையா...அடுத்த முறை கேட்டுக்கலாம்...ஆனா எனக்கு என்ன தோணுதுனா இதெல்லாம் வாய் பேச முடியா பிள்ளைகள் என்பதால் கண்டிப்பா அவங்களுக்கு உதவறா மாதிரிதான் இருக்கும் இது....என்றாலும் தெரியலை...இப்படித்தான் ஃபாரின்ல எல்லாம் நிறைய ஃபாண்டன்ட் வைச்சு கேக்கைப் பலவிதமா செய்யறாங்க. நானும் ஒரு முறை என் ஃப்ரென்ட் கல்யாணத்துக்கு மூன்று அடுக்கு வெட்டிங்க் கேக் செஞ்சேன்...மேல ஃபாண்டட் போட்டு கவர் பண்ணி ஃபான்டன்ட் நால குட்டியா டெட்டி பெர் மாதிரி பொம்மை செஞ்சு டாப்ல வைச்சு க்ரீம் கொண்டு டெக் பண்ணிருந்தேன் ஃபுல்லும் வெள்ளை தான்...வேற எந்த கலரும் இல்லாம...அது எங்கிட்ட ஃபோட்டோ இல்லை ஃப்ரென்ட் கிட்ட இருக்கானு கேட்டுப் பார்க்கறேன்....

    கீதா

    ReplyDelete
  5. அருமை
    போற்றுதலுக்கு உரிய திறமையாளர்கள்

    ReplyDelete
  6. ​வாய் பேச முடியா பிள்ளைகளின் திறமை வியக்க வைக்கிறது.​

    ReplyDelete
  7. //பார்த்து முடிக்கும் போது தான் கவனித்தேன் ..இக்கேக்கு களையெல்லாம் தயாரித்தது.. வாய் பேச இயலா பிள்ளைகள் என...அவர்கள் ஒரு 60 - 70 பேர் இருப்பார்கள் ...குழு தலைவர் அவர்களை எல்லாம் பாராட்டி அவர்கள் மொழியில் பேசினார்கள்...//

    குழந்தைகள் செய்தவை நம்முடன் பேசுகிறது, அவர்களின் புகழை பேசுகிறது.

    இறைவன் அவர்களுக்கு எல்லா, நலன்களையும் வளங்களையும் தர வேண்டும்.

    கேக படங்கள் அழகு.

    ReplyDelete
  8. எப்பொழுதுமே உடல் ஊனமுற்றோருக்கு ஏதாவது வகையில் திறமையை இறைவன் கொடுத்து இருப்பார் என்பது உண்மைதான் போலும்.

    ReplyDelete
  9. வாவ்வ்வ்வ் அத்தனையும் அழகு.. ஒரு சிங்காரியைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கலாமே அனு:))

    ReplyDelete
  10. மறுபடியும் கேக். இருந்தாலும் அலுப்பு தட்டவில்லை.

    ReplyDelete