08 March 2018

பெண்மையை போற்றுவோம்...


பெண்மையை போற்றுவோம்... ..

வணக்கம் தோழமைகளே....


பெண்மையை போற்றுவோம்... ..

ஆம் பெண்களாகிய நாம் முதலில் நம்மை போற்றுவோம்...

பின் அனைவரும் அதை தொடர்வார்கள்....

பெண்மை எங்கும் எதிலும் உள்ளது..

அதை நாம் உணர வேண்டும்..

போன தலைமுறையில் இருந்த அடக்கு முறை இன்று இல்லை...ஆனால் இன்னும் மாற வேண்டும்...

பெண்மையே பற்றி பேசும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது...நாணயத்தின் இரு பக்கம் போல்...பெண்மை பேசி நம்மை சிறுமை படுத்தும் நிகழ்வுகளும் இப்பொழுது நடக்கின்றன..




பேசி பேசி எதுவும் சாதிக்க இயலாது..செயலில் வேண்டும்...

பெண்மையின் அடிப்படை உயரிய குணமே அன்பு தான்...அதை என்றும் மனதில் பதிக்க வேண்டும் அதற்காக ..

அடிமையாய் இரு என கூறவில்லை விட்டு கொடுத்து வாழவேண்டும் என்கிறேன்...


நமது பலமே குடும்ப அமைப்பு தான்...அதை வலுபடுத்த வேண்டும்..நம் எதிர்கால  மக்களுக்கு அதை உணர்த்த வேண்டும்...




இந்த ஒரு மாதம் மட்டும் இதை பேசி பயன் இல்லை என்றும் மனத்தில்  பதித்து நடக்க வேண்டும்...


அதற்கு முதலில் ...

நம்மை நாமே போற்ற வேண்டும்...


நம்மை நாமே மதிக்க வேண்டும்....


நம்மை நாமே உயர்த்த வேண்டும்....


நம்மை நாமே  பேண வேண்டும்...


நம்மை நாமே மகிழ்விக்க வேண்டும்....


அனைத்து செயல்களையும்


முதலில்

 நம்மில் ஆரம்பிப்போம் ...


அதைக் கண்டு ..


அனைவரும்  தொடர்வார்கள்...


அன்பு என்றும் எங்கும் ஆளட்டும்...



பெண்கள் விடுதலைக் கும்மி




பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.


கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! 
                                            

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.     
                                                

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி!   
                                             

நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.     
                                      

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.   

                                       

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!     

                          

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.       

                                       

காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!   










அன்புடன்
அனுபிரேம்

11 comments:

  1. பெண்மை வாழ்க..
    பெண்மை வெல்க!..

    அன்பின் இனிய
    மங்கையர் தின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. ஆஹா அழகிய பதிவு... பாரதியாரின் அற்புத வசனங்களோடு... கும்மிப்பாட்டு அருமை.

    ReplyDelete
  3. அருமை சகோதரி :)

    ReplyDelete
  4. அருமையான மகளிர்தின பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மகளிர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  6. பெண்மையை போற்றுவோம் .இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. மகளிர் தின நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள். இந்த தினத்தில் அருமையான பதிவு.

    ReplyDelete
  11. நல்ல பதிஉ அனு...

    கீதா

    ReplyDelete