Showing posts with label ஸ்ரீரெங்கம்அருள்வரிகள். Show all posts
Showing posts with label ஸ்ரீரெங்கம்அருள்வரிகள். Show all posts

31 May 2023

*வைகாசி 17ம் நாள் !*

 *வைகாசி 17ம் நாள் *


*ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் (நம்பெருமாள்) ஸ்ரீரங்கம் திரும்பிய நாள் இன்று!* வைகாசி17  (31.5.23) 


19 May 2023

ஶ்ரீரெங்கநாச்சியார் கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்)

 ஶ்ரீரெங்கநாச்சியார்  தாயார் சந்நிதியில்  கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்)...

 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பெருமாள், தாயாரைக் குளிர்விக்க `பூச்சாற்றி விழா’ நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் ஸ்ரீரங்கநாதருக்கும் அதன்பிறகு ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கும் இந்த உற்சவம் தலா பத்து நாள்கள் நடைபெறும். 

அதன்படி ரங்கநாதருக்குக் கோடை விழா முடிவடைந்து,  நாச்சியாருக்கு விழா தொடங்கியது. முதல் 5 நாட்கள் `வெளிக் கோடை விழா’வும், பின் 5 நாட்கள் `உள் கோடை விழா’ எனும் பூச்சாற்றி விழா நடைபெறும். இந்த ஆண்டு மே மாதம்  10 தேதி தொடங்கி இன்று வரை இவ்விழா நடைபெறுகிறது. இதில் போன வெள்ளிக்கிழமை நேரில் கண்டு மகிழும் பேறு  கிடைத்தது. அதிலும் அன்று வெள்ளிக்கிழமை நல்ல கூட்டம்  இருந்தாலும் தாயாரை கண் குளிர அருகில் நின்று காணும் பாக்கியம் கிட்டியது. 

ஶ்ரீரங்கநாயகி தாயார் பூச்சாற்று புறப்பாடு


12 January 2023

28. திருப்பாவை - கறவைகள் பின் சென்று கானம்

 இருபத்தெட்டாம் பாசுரம் -  இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள்.