24 July 2014

தக்காளி செடி......


காலை வணக்கம் ....

எனக்கும் செடி வளர்க்க வேண்டும் என்று பல நாள் .......வருட கனவு

8 வருசத்துக்கு முன் வாங்கின தொட்டி இது....நானும் பலமுறை பலவிதமாக முயற்சி செய்தும்.............ஒண்ணும் வளறல....

கடைசியா ஏப்ரல் மாதம் வந்த அம்மா....சும்மா ஒரு தக்காளிய நசிக்கி போட்டாங்க...


10 நாள்ல வளர ஆரம்பித்து விட்டது...

ஆன எனக்கு கவலையும் ஆரம்பித்து விட்டது.....ஆமா  நான் ஒரு மாசத்துக்கு ஊருக்கு போறேனு...

ஆன அவர்கிட்ட மட்டும் தண்ணி ஊத்த சொல்லிட்டு கிளம்பியாச்சு...

ஒரு மாசத்திற்கு பிறகு...........

ஆச்சரியம்....எல்லாரும் நல்லா வளர்ந்திதாங்க.....

தொட்டிக்குள்ள மண்ணு மட்டுமில்ல பிரட் எல்லாம் இருந்தது....

 நல்லா  செடிய வளர்திருக்கிங்கன அவருக்கும் ஒரு பாராட்டை கொடுத்தாச்சு.....


 அவங்க எப்போ காய் காய்ப்பாங்கனு எல்லாம் எனக்கு தெரியாது  ஆன மனசுக்கு  ரொம்ப சந்தோசம்....அதை உங்ககிட்ட பகிர்ந்துக்கதான் இந்த பதிவு...........



தினமும் அந்த இலைய தொட்டு வாசம் பிடிப்பது..........அப்பப்பா...ஆனந்தம்















எங்க செடியில் காய்த்த  தக்காளி    உங்கள் பார்வைக்கு...



என்றும் அன்புடன்

அனுபிரேம்










04 July 2014

எனது தமிழ் வரிகளின் முயற்சி.....................



அனைவருக்கும் காலை வணக்கம்

எனது  anu-rainydrops வலைதளத்தில்  நான் அதிகமாக டைப்  அடிப்பதே இல்லை.....அனைத்தும்  புகைப்படத்திலே  விளங்கிவிடும்.....


ஆனால் தமிழ் பதிவு செய்வதற்காக நான் செய்த முயற்சிகள் இவை...

நாள் 1

1. தமிழ் keyboardயை  (lexilogos. keyboard) கண்டுபிடித்து டைப்பிங்கு பயிற்சி..ஏன்எனில் இதுவரை தமிழ் டைப் செய்ததே இல்லை...


நாள் 2

2.தமிழ் virtual  keyboard ல் (Tamil-Keyboard)  பயிற்சி.....

நாள் 3

எனது கணவரின் உதவியால்....settingsல்  languageஜ மாற்றி   அடுத்த முயற்சி

அடுத்ததாக ஒரு பெரும் முயற்சியாக  சிறுகதை விமர்சனப்போட்டியில்  ( gopu1949 )பங்கேற்க எண்ணம் ஏற்பட்டது...

ஐயாவின் உற்சாகமிக்க சொற்கள் என்னை பங்கு பெற செய்தது...

அதற்காக நான் 2 நாட்கள் செலவிட்டேன்...கை வலியே வந்து விட்டது...(veeeery slow typing.....)


ஆனால் நானும் தமிழ் பதிவு செய்வதற்கு கற்றுக் கொண்டேன் என நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்...












நன்றிகளுடன் 

அனுபிரேம்


03 July 2014

நன்றி....

அனைவருக்கும் காலை வணக்கம் .....


kaagidhapookal  வலைத்தளத்தை  படிக்க ஆரம்பித்த  உடன்  எனக்கும்  தமிழ்  வலைத்தளம் ஆரம்பிக்க வேண்டும் என்ற  எண்ணம் ஏற்பட்டது..அதனால் உதித்ததே இந்த அனுவின் தமிழ் துளிகள்...



நன்றி  Angelin ....




என்றும் அன்புடன்

அனுபிரேம்