30 September 2014

பாசிப் பருப்பு உருண்டை

பாசிப்பருப்பு உருண்டை-


தேவையானவை

1.பாசிப்பருப்பு  - 3\4 டம்ளர் 

2.சர்க்கரை              -1\2  டம்ளர் +1 ஸ்பூன் 

3.நெய்        -1\3 டம்ளர்

4.ஏலக்காய்            -2



செய்முறை

1.கடாயில் பாசிப் பருப்பை  பொன்னிரமாக  வறுக்கவும் ....

2.வறுத்த பாசிப் பருப்பை பொடி செய்ய வேண்டும் ..

3. பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொடிக்கவும் ....

4.பொடித்த பாசிப் பருப்பு   மற்றும்  சர்க்கரையை  சலிக்கவும் ...

5.நெய்யை  சூடாக்கி சலித்த  மாவில் சேர்த்து  உருண்டையாக செய்யவும் ...


சுவையான,சத்தான  பாசிப்பருப்பு உருண்டை தயார் ..........

இந்த அளவிற்கு சின்ன தான 25 உருண்டைகள்  கிடைக்கும்



அன்புடன்
அனுபிரேம்








பிரசன்னாவின் பிறந்தநாள்


பிரசன்னாவின்  பிறந்தநாள் ...

பிரசன்னா(எனது  இளைய மகன் ) விற்கு  செப்டம்பர்  19 அன்று 5வது பிறந்தநாள் ...

ஜூன்  மாதம்  முதலே   அம்மா இன்னைக்கு  செப்டம்பர்  19 னா என்று கேட்க ஆரம்பித்து  விட்டான் ...

இல்லை பா  இன்னும் செப்டம்பர்  19 வரவில்லை ....அதற்கு  முன்  ஜூலை ,ஆகஸ்ட்  எ ல்லாம் வரணும் ....என்று கூறி  .....அப்ப்பா  ஒருவழியா செப்டம்பர் வந்தது ....

சரி  பையன்  ஆசை படுகிறான் என்று...சின்னதா  ஒரு  பிறந்தநாள்  பார்ட்டி  குழைந்தைகளுக்காக  என  பிளான்  போட்டாச்சு ...

முதலில்

1.கேக் (கடையில்   வாங்கலாம்  என நெனச்சா ..பிரசன்னா  அம்மா பரவாயில்லை  நீங்கலே  செய்ங்க சொல்ல...ஓ...  ம்  ..ம் ம்   )

2. COOKIES  மூன்று வகை -முக வடிவம் ,குச்சி வடிவம் ,அன்னாசி பழ சுவை உடைய வட்ட வடிவம் (பையங்க ரொம்ப  உதவி சென்சாங்க  )

3.கொண்டக்கடலை  சுண்டல்

4.காரட் துருவல்

5.பாசி பருப்பு உருண்டை

6.ஜீலேபி ....

7.வாழைப் பழம்

8.சிப்ஸ்

9.chocolates

10.ஜூஸ் ..


cake..

cookies...








அன்புடன் 
அனுபிரேம் 






29 September 2014

எனக்கும் வலைப்பூ விருது...........

 எனக்கும் விருது...

ஆம் தமிழ்  வலைப்பூ எழுத  வேண்டும்  என்று ஆரம்பித்து...இன்னும்  எழுதவே இல்லை ஆனால் அதற்குள்  விருது...


நன்றி ஏன்சலின்  (kaagidhapookal .)..நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்ததே உங்களை பார்த்து இப்பொழுது நீங்களே விருதும் கொடுத்து  ஊக்குவிப்பது ஆகா..மீண்டும்  நன்றி ..

பல  பதிவுக் களை  இங்க   பதிவிட ஆசை  ஆனால் கடத்த  மாதம் முழுவதும் பசங்க தேர்வு, பிறந்த   நாள்  கொண்டாட்டங்கள், திடிர் திருப்பதி பயணம் என ரொம்ப பிஸி ...

ஆனால்  எல்லாருடைய வலைதளமும் இப்பொழுது விருதால் மகிழ்ச்சியாக    உள்ளது ..ஆம்  அனைவரும்  தாமும் மகிழ்ந்து  அனைவருக்கும் பகிர்ந்து எனற  நிலையில்.....எனக்கும் விருது...

இதை   கொண்டாட  இந்தாங்க  இனிப்பு ...வீட்டில் செய்தது  பாசி பருப்பு உருண்டை 










எனக்கு  கிடைத்த விருதை  நான் ஐந்து பேருக்கு பகிரனும் ...ஆன எல்லாருக்கும் விருது கிடச்சாச்சு   (நான்தான் கடைசி போல  )....

கடைசியாக  நான் கண்டுபிடித்த  ஐவர்

  ராஜி அம்மா  அவர்களின்  சமையலுக்காக

சகோதரர் சிவா  அவர்களின் தோட்டத்திற்காக

அமுதா கிருஷ்ணன்  அம்மா  அவர்களின் எழுத்திற்காக

சகோதரி தியானா  அவர்களின் பூந்தளிர்காக

ராஜி அம்மா  அவர்களின் கனவுகளுக்காக



மேலும்  இ ங்கு  வந்து என்னை உக்கப்படுத்தும்  அனைவர்க்கும்  எனது மனமார்ந்த  நன்றிகள் ...



அன்புடன்
அனுபிரேம்