18 April 2024

மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர்....."பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்"

- ராமர் புஜங்காஷ்டகம்.

பொருள்: அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.


22 March 2024

ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீகமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்-- பங்குனி திருநாள் (ஆதி பிரம்மோற்சவம்) 6-ம் நாள் (22.03.2024) மாலை 

ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீகமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை 

நம்பெருமாள் உறையூர் புறப்பாடுஸ்ரீ செல்வநாராயண பெருமாள் வைரமுடி உத்ஸவம்

 மேல்கோட்டை திருநாராயணபுரம் ஸ்ரீ செல்வநாராயண பெருமாள் திருக்கோயில் - வைரமுடி உத்ஸவம் - திவ்ய ஸேவை


21 February 2024

குலசேகராழ்வார்

 இன்று ஸ்ரீ  குலசேகராழ்வார் அவதார திருநட்சத்திரம் ..... மாசி - புனர்பூசம்

'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய் தோன்றிய 'சேரலர் கோன்' குலசேகராழ்வார்' அவதரித்த நந்நாள். குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்களத்தில் - திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார்.

29 January 2024

மார்கழி கோலங்கள் ...

வாழ்க வளமுடன் .. 


இந்த வருடம் மார்கழியில் மலர்ந்த எங்கள் வீட்டு கோலங்கள்.. 28 January 2024

திருமழிசையாழ்வார் திருநக்ஷத்திரம்

 இன்று திருமழிசையாழ்வார் திருநக்ஷத்திரம்  தை - மகம்

25 January 2024

தைப்பூசம் நன்னாள்....

 முருகா சரணம் ..... கந்தா சரணம் .....இன்று தைப்பூசம் நன்னாள்....

15 January 2024

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 அனைவருக்கும்  இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் !! 

14 January 2024

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்


 

30.வங்கக்கடல்

 30. வங்கக்கடல்...

மாதவனை, கேசவனை அழகிய இடைப்பெண்கள் துதித்து, பாவை நோன்புக்குரிய கைங்கர்யத்தைப் பெற்ற ஸ்ரீவில்லிப் புத்தூரில் பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் அருளிச் செய்த 30 பாசுரங்களையும் பாராயணம் செய்தால் லக்ஷ்மி நாதனல் திருவருள் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.

29. சிற்றஞ் சிறுகாலே...

29.சிற்றஞ் சிறுகாலே...

கோவிந்தா! இடை குலத்தில் பிறந்த நீ நாங்கள் செய்யும் சிறு கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்ளாமல் போகக்கூடாது. ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உன் மகிழ்ச்சிக்காகவே உனக்கே தொண்டு புரிய அருள வேண்டும்.
13 January 2024

28.கறவைகள் பின்...

28. கறவைகள் பின்...

 பசுக்களோடு காடு சேர்ந்து உண்டு திரிவோம். எங்கள் குலத்தில் நீ பிறக்கும் புண்ணியத்தை செய்துள்ளோம். கோவிந்தா! உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவு ஒழிக்க முடியாது. கோபிக்காமல் நாங்கள் விரும்புவதை அருள வேணும்.
12 January 2024

27.கூடாரை வெல்லும்

27.கூடாரை வெல்லும்...

தன்னை அடிபணியாதாரையும்  வெல்லும் கோவிந்தா! உன்னைப் பாடி நாங்கள் அடையும் பரிசாவது என்னவெனில், பலவகை ஆபரணங்களை அணிவோம். பீதாம்பரத்தால் அலங்கரித்துக் கொள்வோம். பால் சோறு நெய்யிட்டு உன்னுடன் கூடி உண்டு மனம் குளிர்வோம்.11 January 2024

26.மாலே மணிவண்ணா...

 26. மாலே மணிவண்ணா...

 அடியாரிடத்தில் அன்புடைய மணிவண்ணா! இவ்விரதத்தை நாங்கள் செய்வதற்காக பாஞ்சசன்னியமான சங்குகளையும், பெரியனவான பறைகளையும், திருப்பல்லாண்டு பாடுமவர்களையும், மங்கள தீபங்களையும், துவஜங்களையும் அளித்தருள வேண்டும்.


10 January 2024

25. ஒருத்தி மகனாய்...

 25.ஒருத்தி மகனாய்...

ஒரே இரவில் தேவகிக்கு பிள்ளையாய் தோன்றி, யசோதையின் பிள்ளையாய் ஒளிந்திருந்து வளரும் காலத்தில், கம்சனுடைய வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமாலே! எங்கள் விருப்பத்தை நிறைவேற்று, உன் வீர்ய குணத்தை நாங்கள் பாடி மகிழ்ந்திடுவோம்.09 January 2024

தொண்டரடிப்பொடியாழ்வார்

 தொண்டரடிப்பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை
24.அன்று இவ்வுலகம்..

24.அன்று இவ்வுலகம்..

அக்காலத்தில் இவ்வுலகினை அளந்த ஸ்வாமி! உன் திருவடிகளுக்கு, பலத்திற்கு, உன் புகழிற்கு மங்களம். உன் குணத்திற்கு, உன் கையிலுள்ள வேலாயுத்திற்கு மங்களம் என உன்னை துதித்து, பறை கொள்வதற்காக வந்துள்ளோம். ஸ்வாமி அருள் புரிய வேண்டும்.08 January 2024

23.மாரி மலை முழைஞ்சில்

  23.மாரிமலை முழைஞ்சில்...

மழை காலத்தில் மலைக் குகையில் உறங்கும் வீர்யமுடைய சிங்கம், தேகத்தை உதறி கர்ஜனை செய்து வெளிப்புறப்பட்டு வருவதைப் போல, காயாம்பூ நிற வண்ணா உன் சிம்மாசனத்தில் எழுந்தருளி நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து அருள வேணும்.


07 January 2024

22. அங்கண் மா ஞாலத்து

 23.அங்கண் மா ஞாலத்து...

இப்பூமியை ஆட்சி புரியும் அரசர்கள் தங்கள் அகங்காரம் குலைந்து உன் சிம்மாசனத்தின் கீழ் கூடி இருப்பது போல, நாங்களும் உன் பாதங்களை சரணடைந்தோம் ஸ்வாமி! அழகிய கண்களால் எங்களை கடாக்ஷித்து அருளுங்கள்.06 January 2024

21.ஏற்ற கலங்கள்

   21. ஏற்ற கலங்கள்...

நந்தகோபனின் மைந்தனே! ஸ்ரீகிருஷ்ணா! எழுந்திராய். உன் எதிரிகள் உனக்கு தோற்று உள் மாளிகை வாசலில் வந்து உன் திருவடியை  வணங்கி கிடப்பது போல, நாங்களும் உன்னை போற்றி வந்துள்ளோம். துயில் எழுந்து ஆட்கொள்வாய்.
05 January 2024

20. முப்பத்துமூவர் அமரர்க்கு...

20.முப்பத்துமூவர்_அமரர்க்கு...

தேவர்களின் பயத்தைப் போக்கும் பலமுள்ளவனே! அழகிய வடிவுடைய நப்பின்னையே! துயில் ஏழாய். நோன்பிற்கு வேண்டிய உபகரணங்களை அளித்து, எங்கள் விரதத்தினை முழுமை அடையச் செய்திடுவாய்.04 January 2024

19.குத்துவிளக்கெரிய...

19.குத்துவிளக்கெரிய...

நிலை விளக்கானது எரிய, யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட பஞ்சனையில் நீளா தேவியுடன் உறங்கும் ஸ்வாமி! வாய் திறந்து சொல்வாயாக. நீளாதேவி சிறிது போதும் அவனை விட்டு பிரிவதில்லை. இது உன் ஸ்வபாவத்துக்கும் தகுந்ததன்று.
03 January 2024

18.உந்து மதகளிற்றன்

18.உந்து மதகளிற்றன்...

யானை போல் பலமுள்ளவரான நந்த கோபருடைய மருமகளே! நீளாதேவியே எழுந்திரு. கோழிகள் அழைத்தன. குயில்களும் கூவின, உன் நாதனாகிய கண்ணபிரானுடைய நாமங்கள் பாட வந்தோம். மகிழ்வுடன் கதவைத் திறப்பாயாக.02 January 2024

17. அம்பரமே தண்ணீரே

17. அம்பரமே தண்ணீரே...

வஸ்த்ரத்தையும், தண்ணீரையும், சோற்றினையும் தர்மம் செய்யும் நந்தகோபரே!! ஆயர்குலத்து ஒளி விளக்காயுள்ள யசோதை பிராட்டியே! ஆகாய ஒளியைத் துளைத்து உலகை அளந்தவனே! வீரக்கழல்களை அணிந்த பலராமா எழுந்திருக்க வேணும்.


01 January 2024

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2024

  வாழ்க வளமுடன் .....                                                                  


அனைவருக்கும் 
எங்களது 

இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்   2024 ................🌼🌻🌺🌸🌹


Happy New Year 2024......

16. நாயகனாய் நின்ற

 16. நாயகனாய் நின்ற...

நந்தகோபனுடை திருமாளிகையைக் காப்பவனே! அழகிய தாழ்ப்பாளைத் திறந்து விடு, இடைச் சிறுமிகளுக்கு நீல நிற வண்ணனான  ஸ்ரீ கிருஷ்ணன் சப்திக்கும் பறையைக் கொடுப்பதாக  வாக்களித்தான். அவன் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க  பாட வந்திருக்கிறோம்.