(78) வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே.
கூரத்தாழ்வானுக்கு இரண்டு பிள்ளைகள். பராசர பட்டர் மற்றும் வேதவியாச பட்டர். பராசர பட்டர் மூத்தவர்.எப்படிக் கோயில் என்றால் திருவரங்கத்தைக் குறிக்குமோ ; ஆழ்வார் என்றால் நம்மாழ்வாரைக் குறிக்குமோ அதே போல் பட்டர் என்றால் பராசர பட்டரைக் குறிக்கும்.
ஆழ்வானிடம் ராமானுஜர் ”பராசர பட்டரை ரங்க நாச்சியார், பெரிய பெருமாளுக்குக் குழந்தையைக் கொடுங்கள்” என்றார்.
ஆழ்வானும் ”தந்தோம்!” என்றார்.
பட்டர் திருவரங்கத்தில் பெருமாளும் தாயாரும் தங்கள் குழந்தையாகப் பார்த்துக்கொண்டனர். பெரிய பெருமாள் சந்நிதியில் இருக்கும் திருமணத் தூணில் தொட்டில் கட்டி விடுவார்கள். தாகத்துக்குத் திருமஞ்சனத் தீர்த்தமும், பசிக்கு பெருமாளின் பிரசாதங்களையும் சாப்பிட்டு வளர்ந்தார்.
பராசர பட்டர் இளமையிலேயே எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார். வேதம் ஆழ்வார்களின் பாசுரங்களைச் சொல்லிக்கொடுக்கும்போது ஒரு முறை கேட்டாலே அவருக்கு மனப்பாடம் ஆகியது.
ஒரு சமயம் பட்டரின் வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்தார். கூரத்தாழ்வான் “என்ன பாடம் படிக்கப் போகாமல் விளையாடிக்கொண்டு இருக்கிறாய் ?” என்று கேட்டார்.
அதற்குப் பட்டர் “தந்தையே! குரு ஒரே பாடத்தைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார். அதனால் போகவில்லை” என்றார்.
ஆழ்வான் “ஒரு முறை சொன்னால் மனப்பாடம் ஆகாது. குரு அதனால் தான் பல முறை சந்தை சொல்லிக்கொடுக்கிறார்!” என்றார்.
“எனக்கு ஒரு தடவை சொன்னாலே மனப்பாடம் ஆகிவிடும்!” என்று பட்டர் தான் கற்ற பாடத்தை அப்படியே ஒப்புவித்தார்.
ஒரு நாள் வழக்கம்போலப் பட்டர் திருவரங்கம் வீதி விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது மேள தாளத்துடன் ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கு முன் சிலர் “மகா பண்டிதர் சர்வக்ஞ பட்டன் வருகிறார்! பராக் பராக்” என்று விருதுகளைக் கூறிக்கொண்டு சென்றார்கள்.
சிறுவனான பட்டர் “உடையவர், ஆழ்வான், ஆண்டான், எம்பார் போன்ற பெரியவர்களே அடக்கமாக இருக்கும் இந்த இடத்தில் ஆடம்பரமாகப் போகும் இவர் யார் என்று பல்லக்கின் பின்னாடி ஓடிச் சென்று “யார் இவர் ? திருவரங்கத்தில் நம்பெருமாளுக்குப் போட்டியாக இப்படிப் படாடோபத்துடன் போகிறாரே!” என்று பல்லக்கை நிறுத்தி அதைச் சுமப்பவர்களைக் கேட்டார்.
“சிறுவனே! வழி விடு இவர் தான் சர்வக்ஞ பட்டன். திருவரங்கத்தில் வாதம் புரிய வந்திருக்கிறார்!” என்றனர்.
பட்டர் “அப்படியா ? இவருக்குச் சர்வமும் தெரியுமோ ? என் கேள்விக்குப் பதில் சொல்லுவாரா ? ” என்றார்.
பல்லக்கில் இருந்த வித்வான் பட்டரை ஆச்சரியத்துடன் பார்த்தார் “சிறுவனே ! என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேள் அதற்குப் பதில் சொல்லுகிறேன்!” என்றார் ஏளனமாக.
பட்டர் குனிந்து கையில் மண்ணை அள்ளினார். வித்துவானைப் பார்த்து “என் கையில் எவ்வளவு மண்ணு இருக்கிறது?” என்றார்.
வித்வான் திகைத்தார். ”மணல் துகள்களை எப்படி எண்ண முடியும் ?” என்று குழம்பினார். வாயடைத்துத் தலைகுனிந்தார்.
பட்டர் சிரித்துக்கொண்டு “இது ஒரு கை பிடி மண் என்று சொல்லத் தெரியவில்லையே! இனி உமது ஆடம்பரங்களைக் கைவிடுங்கள்!” என்று பட்டர் மழலையாகச் சொன்னாலும் இவர் பெரும் மேதாவி என்று புரிந்துகொண்டார்.
“சிறுவனே உன் வீடு எங்கே இருக்கிறது ? உன் தந்தை யார் ?” என்றார்.
“என் தந்தை கூரத்தாழ்வான். அதோ பெரிய நம்பிகள் இல்லத்துக்கு எதிர்புறம் இருக்கிறது எங்கள் குடிசை!” என்றார்.
சர்வக்ஞ பட்டன் “ஆழ்வான் குமாரர் இப்படி இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பறப்பதன் குட்டி தவழுமோ ?” என்று பட்டரை கையில் தூக்கிக்கொண்டார். “இனி இந்தப் பல்லக்கில் ஏற எனக்குத் தகுதி இல்லை!” என்று பட்டரை பல்லக்கில் ஏற்றி அமர வைத்து ஆழ்வான் இல்லம் நோக்கிச் சென்றார்.
இல்லத்தின் வாசலில் பல்லக்கு நின்றது.
வாசலில் பட்டரின் தாயார் ஆண்டாள் வெளியே வந்தாள்.
சர்வக்ஞ பட்டன் தன் கையால் பட்டரை பல்லக்கிலிருந்து கீழே இறக்கிவிட்டு ஆண்டாளிடம் “பட்டரை தெருவில் இப்படி விடாதீர்கள். கண்பட்டுவிடப் போகிறது!” என்று பட்டரை வாழ்த்திவிட்டுச் சென்றார்.
ஆண்டாளும் பட்டர் காதில் ரக்ஷ்சையாக த்வயத்தை ஓதினார்.
“சாமி! நான் பட்டரை போலச் சிறுவயதிலேயே பெரிய வித்துவான்களை வென்றேனா ? இல்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்கிறாள் திருக்கோளூர் மங்கை.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
திருவாய்மொழி இரண்டாம் பத்து
2 - 5 அந்தாமம்
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க, மகிழ்தல்
ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த,
கார் ஆர் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு,
நேரா வாய் செம்பவளம், கண் பாதம் கை கமலம்,
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே. 5.5
3057
பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே,
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்,
பலபல கண்டு, உண்டு, கேட்டு, உற்று, மோந்து, இன்பம்,
பலபலவே ஞானமும் பாம்பு அணை மேலாற்கேயோ. 5.6
3058
79. திருச்சிரீவரமங்கை
ஸ்ரீ ஸ்ரீவரமங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ தோதாத்ரி தெய்வநாயகாய நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அன்புடன்
No comments:
Post a Comment