30 July 2022

18 ."அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே"

 18 ."அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே"




 திரிசடையைப் பற்றிக் கூறும் பொழுது "அன்பினால் தாயைக் காட்டிலும் இனியவள்" என்கிறார் கம்பர், ஏனெனில் திரிசடை அரக்கியாக இருந்தாலும் தாயுள்ளம் கொண்டவள்.

  திரிசடை விபீஷணனின் மகள். 

விபீஷணன் போல இவளும் நல்லவள்.  அவள் மூன்று ஜடை போட்டிருப்பாள் அதனால் அவள் பெயர்  திரிசடை!

சீதைக்கு அசோகவனத்தில் கிடைத்த ஒரே ஆறுதல் திரிசடைதான்.

திரிசடை தான் சீதைக்கு அனைத்து நேரங்களிலும் ஆறுதலோடு பேசியதோடு மட்டுமின்றி, 'ஸ்ரீராமச்சந்திர பிரபுவோடு நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்' என்று ஆசி கூறி ஆறுதல் சொன்னாள்.

அத்தகைய திரிசடையின் ஆறுதலால் தான் சீதை அசோகவனத்தில் உயிருடன் இருந்தாள் என்றே கூறலாம்.

எப்பொழுதும் போல இராவணன் வந்துபோன பிறகு, அசோகவனத்தில் ராக்ஷஸிகள் சீதையை நிந்தித்தார்கள். ஆனால், திரிசடை அவர்களை தன் கனவைக் கூறி விரட்டுகிறாள்.

திரிசடை கண்ட கனவானது, "இராவணன் சிவப்பு வஸ்திரம் அணிந்துகொண்டு, தன் பத்து தலைகளிலும் எண்ணெய் பூசிக்கொண்டு, கழுதை மீது ஏறி, எமன் இருக்கும் திசை நோக்கிப் போவதாகவும், அவனின் புதல்வர்கள், உறவினர்கள் அவன் சென்ற வழியிலேயே செல்வதாகவும், அப்படிச் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வராதது போலவும் கனவு கண்டேன்.

 ராவணன் யாக குண்டங்களில் அக்னிக்குப் பதிலாக செங்கரையான் புற்று வளரக் கண்டேன்.

 அவனது அரண்மனை ஒளி இழந்து, இடி தாக்கி நொறுங்குவதாகக் கண்டேன். 

பெண் யானைக்கு மதம் பிடித்தது போலவும், முரசுகள் இடியைப் போல முழங்குவது போலவும், வானத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் கீழே வீழ்வது போலவும், சூரியன் இரவு உதிப்பது போலவும் கனவு கண்டேன். 

மேலும், இலங்கை நகரே அழிவது போலவும், கோட்டை மதில்கள் தீப்பற்றி எரிவது போலவும், மங்கல கலசங்கள் கீழே விழுந்து நொறுங்குவது போலவும், எங்கும் இருள் சூழ்வது போலவும் கனவு கண்டேன். 

தூய வெண்ணிற வஸ்த்திரம் அணிந்து மலர்சூடி இராமன் தங்க ரத்தத்தில் வருவதையும், அவன் சீதையை ஒரு களிற்றின் மீது ஏற்றிக்கொண்டு செல்வதையும் கண்டேன். இராமன் நிச்சயம் இராவணனை அழித்து சீதையை வெற்றிக்கொள்வான்."


"நீங்கள் உயிர் பிழைக்க வேண்டுமெனில் சீதையிடம் சரணடைந்து அவளிடம் மன்னிப்பு கோருங்கள்!" என்றாள் திரிசடை. 

இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தினால் இராமனும் இலக்குவனும் மயக்கமுற்றபின், ராக்ஷஷர்கள் சீதையை போர்க்களம் அழைத்துச் சென்று  அவர்கள் இறந்துவிட்டதாக கூறினர். 

அதை நம்பி சீதை பெரும் துயரமுற்று கண்ணீர் சிந்தினாள்.

 அப்போது திரிசடைதான், "பயம் கொள்ளாதே மகளே! இராமனும் இலக்குவனும் மூர்ச்சை அடைந்து உள்ளனரே தவிர, இந்த ராக்ஷஸர்கள் பானங்களினால் அவர்கள் இறந்துவிடக்கூடியவர்கள் அல்ல" என பிராட்டியை தேற்றினாள்.

இதைக்கேட்ட சீதை துயரத்திலிருந்து விடுபட்டிருப்பாள் அல்லவா? "இவ்வாறு  திரிசடையைப் போல எந்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் சரியான தருணத்தில் ஆறுதல் வழங்குபவளா நான்?" என்கிறாள் திருக்கோளூர் பெண் பிள்ளை.





முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே


திருவாய்மொழி -முதற் பத்து

1 - 3. பத்து உடை அடியவர்க்கு 


பிணக்கு அற அறு வகைச் சமயமும்*  நெறி உள்ளி உரைத்த* 

கணக்கறு நலத்தனன்*  அந்தம் இல் ஆதி அம் பகவன்*

வணக்கு உடைத் தவநெறி*  வழி நின்று, புறநெறி களைகட்டு* 

உணக்குமின், பசை அற!*  அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே. 5   

2925


உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று*  உயர்ந்து உருவியந்த இந் நிலைமை* 

உணர்ந்து உணர்ந்து உணரிலும்*  இறை நிலை உணர்வு அரிது உயிர்காள்!*

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  அரி அயன் அரன் என்னும் இவரை* 

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.   6

2925












19. திருநாகை

ஸ்ரீ சௌந்தர்யவல்லீ ஸமேத ஸ்ரீ சௌந்தர்யராஜாய நமஹ

சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕


No comments:

Post a Comment