31 March 2016

நெடுஞ்சாலையில் .. சில புகைப்படங்கள்...



நெடுஞ்சாலையில்..  சில  புகைப்படங்கள்...

தினமும் நிகழும் நகிழ்வு தான் ....

                                                             ஆனாலும்

ஒவ்வொரு  முறையும்  ஒரு  விதம் ....


பார்வைக்கு  பார்வை   வேறுபடும்   அழகு

நெடுஞ்   சாலையின்   ஒளி   கீற்று

தென்னைமரத்தின்   பின்னே  ஒளியும்   வெட்கம்

மலையின்   உடே   ஒளி   கிரகணம் ...


இன்று எனது காட்சிப்பதிவுக்குள்....

















அன்புடன் 
அனுபிரேம் 



Image result for tamil BHARATHI quotes

28 March 2016

பச்சைப் பயறு தோசை

 அனைவருக்கும் வணக்கம் ...

            பச்சைப்  பயறு தோசை செய்வதற்கு முன்        பச்சைப் பயறு  பற்றி .....




                    பயிறு வகைகளில்   மிக   முக்கியமான   பயிர் பச்சைப் பயிர் ...... பச்சைப்  பயிறு     புரோட்டீன், ஃபைபர் (fibre )   ஆகிய    சத்துக்களை   கொண்டுள்ளது.   இந்த    பச்சைப்பயிறானது   உடல் சூட்டை    தணிக்கிறது,    மேலும்    சருமத்திற்கு இயற்கையான   பாதுகாப்பை     அளிக்கிறது.

          
             பச்சைப் பயிறு     உடலில்     ஏற்படும் நோய்களை    குணப்படுத்துவதோடு,   கூந்தல் பிரச்சனைகளையும்   சரி   செய்ய    உதவுகிறது.

        
           அடிக்கடி   பச்சைப்   பயிரை   உணவில்   சேர்த்து    வந்தால்,   இரத்த   அழுத்தம் கட்டுப்படுவதுடன்,     கொலஸ்ட்ரால்   அளவும் குறையும்.

           
           பச்சைப் பயற்றில்   இரும்புச்சத்து   வளமாக உள்ளது.  இதனால்   உடலுக்கு    வேண்டிய இரும்புச்சத்து   கிடைத்து,   இரத்த   சோகை ஏற்படும் வாய்ப்பில்   இருந்து   தப்பிக்கலாம்.

தகவல்கள் இணையத்திலிருந்து 




வாங்க   பச்சை பயறு தோசை செய்ய  போகலாம் ....


தேவையானவை .....

உடைத்த பச்சைப் பயறு     -    1  கப்
இட்லி அரிசி                             -   1  கப்
பச்சை மிளகாய்                     -    2
இஞ்சி                                         -    சிறிது 
பூண்டு                                        -    3 பல் 
உப்பு                                            -   தேவையான அளவு 


செய்முறை ...

  மேலே உள்ள பொருட்களை 3 மணி நேரம் ஊரவைத்து ....
பின் அரைக்க வேண்டும் .... 

அந்த மாவை உப்பு சேர்த்து  மெலிதாக ஊற்றி எடுத்தால் ...பச்சைப் பயறு தோசை தயார் ..













அன்புடன்

அனுபிரேம்

Image result for tamil BHARATHI quotes

24 March 2016

தொண்டனூர் ஏரி -மேல்கோட்டை பயணம் 8



அனைவருக்கும் வணக்கம் ...

 முந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...

திருநாராயணபுரம்  - செல்லுவ நாராயண  சுவாமி 


செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...


சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..


மலைமேல் யோக நரசிம்மர்  ஆலயம் ..

தொண்டனூர் கெரே -ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவில் ,வேணுகோபால  சுவாமி கோவில்......

சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்..




     அடுத்ததாக நாம் காண இருப்பது சுவாமி இராமானுஜர் அமைத்த  ஏரி ..     இந்த  ஏரி 2150 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது ...












ஆனால் இப்பொழுது ஏரியின் பராமரிப்பு பாவம் .. மிகவும்  மோசம்.. ..

ஆனாலும் கோவிலை விட இங்கு கும்பல் அதிகம் ..அன்று ஞாயிறு என்பதால்  நிறைய மக்கள்  குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர் .....உண்டு, குளித்து என மிக மகிழ்வாக அனைவரும் இருந்தனர் ....


செல்லும் வழியில் இருந்த காட்சிகள் ...

குட்டையான செவ்விளநீர்  மரம் ..





வழியெல்லாம் வெல்லம் காய்சும் மணம் ...எங்கு திரும்பினாலும்  வெல்லம் காய்சும் ஆலைகள் ....

மலை மலையாய் கரும்பு சக்கைகள் ...

    

இணையத்திலிருந்து 

இணையத்திலிருந்து 

இணையத்திலிருந்து 


நாங்கள் இங்கிருந்து 4 மணிக்கு மீண்டும் புறப்பட்டு இரவு 7 மணிக்கு பெங்களுருவை அடைந்தோம் .....

மிகவும் மகிழ்வான பயணம் ....



எங்களுடன் மேல்கோட்டை பயணத்தை படித்து ,

இரசித்த அனைவருக்கும் மிகவும்  நன்றி ....




அவரவர் தமதம தறிவறி வகைவகை

அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்

அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்

அவரவ விதிவழி யடையநின் றனரே.


  -நம்மாழ்வார்
முதல் திருமொழி
(2904)



அன்புடன்

அனுபிரேம்




20 March 2016

சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம் -மேல்கோட்டை பயணம் 7


அனைவருக்கும் வணக்கம் ...

முந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...


திருநாராயணபுரம்  - செல்லுவ நாராயண  சுவாமி 


செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...


சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..


மலைமேல் யோக நரசிம்மர்  ஆலயம் ..



ஏற்கனேவே கூறியது போல்   நாம் இப்பொழுது  மற்றுமொரு யோக நரசிம்மர் ஆலயத்தை பார்க்கலாம் .. ...  











இங்கும் மூலவர் சுவாமி யோக நரசிம்மர் ..
       ஆனால் இக்கோவிலின்  சிறப்பு சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்...

         மிக சிறிய கோவில்..ஆனாலும் மிக
பெரிய கீர்த்தி ..ஆம் இங்கு உள்ள சுவாமி  இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது ...

        முந்தைய பதிவில் நாம் பிட்டி தேவன்  என்ற மன்னனின்  மகள் சுவாமி இராமானுஜரின்      உதவியால் சித்தபிரம்மையில்    இருந்து விடுதலை ஆனார்  அதன் காரணமாக பிட்டி தேவன்  ஜெயின்   மதத்தைத்   துறந்து,        ஸ்ரீவைஷ்ணவன் ஆனார் என பார்த்தோம் ...

பிறகு ........


            அரச ஆதரவு இழந்த ஜெயின் அறிஞர்கள் இராமானுஜர்  மேல் கோபம் கொண்டு..ஒரு சமய  தத்துவ விவாதத்திற்கு  சவால் விடுத்தனர். ..அவர்களின் சவாலை சுவாமி இராமானுஜர்  ஏற்றுக்கொண்டார். 

           


       ஆனால் ஆயிரம் ஜெயின் அறிஞர்கள் இந்த விவாதத்திற்கு கூடியிருந்தனர் .

 எனவே சுவாமி ராமானுஜர்  , "நான் உங்களின்  சவால்களை ஏற்கிறேன் ஆனால் , நான் இந்த திரைக்குப் பின்னால் அமர்ந்தே  பதிலளிக்க இயலும் ",
  என்று  கூறினார். அவர்கள் தங்களுக்குள்ளே பேசி இந்த ஒரு பிராமணர் திரைக்குப் பின்னால் என்ன செய்ய முடியும்". .. நாம் ஆயிரம் பேர் என கூறி ..

சுவாமி இராமானுஜர் திரைக்குப் பின்னால் அமர்ந்து பதில் அளிக்க ஒத்துக்கொண்டனர் ...

ஆயிரம் சமணர்கள்  ஒரே  நேரத்தில் சுவாமி ராமானுஜரிடம்  ஆயிரம் கேள்விகளை வீசினர்.... சுவாமி ராமானுஜர் ஒரே  நேரத்தில்  ஆயிரம் கேள்விகளுக்கும்  பதிலளித்தார்...



இணையத்திலிருந்து 




   மேலும் , பதில்களை கேட்டவர்களுக்கு , உரத்த இரைப்பு சத்தம் கேட்டது... திரை அகற்றப்பட  ஆயிரம்  தலையுடன் சுவாமி இரமானுஜர் ஆதிசேஷ அவதாரத்தில் இருந்தார் ... . சமணர்கள் தங்கள் தோல்வியை ஒப்பு கொண்டு அவசரமாய் கலைத்தனர்.



இணையத்திலிருந்து 

இதன் காரணமாக இந்த யோக நரசிம்மர் ஆலயத்தில் சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதார சன்னதி நிறுவப்பட்டுள்ளது.



இணையத்திலிருந்து 


கோவிலின் வெளிப்புறம் ....










 மேலும் இங்கு சுவாமி ராமானுஜர்  உபயோகப் படுத்திய கூடை இன்றும்   ஒரு சிறிய கண்ணாடி பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது.




இணையத்திலிருந்து 



வேணுகோபால சுவாமி கோவில் பட்டரே இங்கும் என்பதால் ..நாம் காத்திருக்க வேண்டும் ...

காத்திருந்தாலும் கிடைத்த தரிசனம் மிகவும் ஆத்மார்த்தமாக இருந்தது ...


சுற்றிலும் உள்ள பெரிய பாறைகள் ...









உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.


  - நம்மாழ்வார்
முதல் திருமொழி
(2899)




தொடரும் ...

அன்புடன் 

அனுபிரேம் 





14 March 2016

தொண்டனுர் -மேல்கோட்டை பயணம் 6


அனைவருக்கும் வணக்கம் ...

முந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...


திருநாராயணபுரம்  - செல்லுவ நாராயண  சுவாமி 


செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...


சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..



மலைமேல் யோக நரசிம்மர்  ஆலயம் ..


அடுத்தாக நாம் பார்க்க  இருப்பது தொண்டனூர்...




இவ்வூர்   தொண்டனூர் கெரே என அழைக்கப்படுகிறது ...


மேல்கோட்டையில் இருந்து  20 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேல்கோட்டையில்  இருந்து பாண்டவபுரா  பயணிக்கும் போது,  வலது பக்கத்தில் தொண்டனூர்  உள்ளது ..

தொண்டனூரில் அமைந்து உள்ள கோவில்கள் 

1.இங்கு சுவாமி இராமானுஜரால் நிர்மானிக்கப்பட்ட ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவிலும்  (பஞ்ச ஸ்தலங்களில் ஒன்று ) , 

2 .எதிர் புறம் வேணுகோபால  சுவாமி கோவிலும் 

3.மற்றுமொரு யோக நரசிம்மர் கோவிலும் உள்ளன .....


ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவில் -








இணையத்தில் இருந்து 

மூலவர்      : ஸ்ரீ  நம்பி நாராயண பெருமாள்

 தாயார்    :    அரவிந்த  நாயகி

           இத்தல   இறைவன்  "நம்பி நாராயணன்", பெருமாள்   நின்ற   கோலத்தில்  அவரது  வலது மற்றும்  இடது கைகளில்  சங்கு,  சக்கரத்துடன் காட்சி  அளிக்கிறார் ...இதுவே  இத்தலத்தின் சிறப்பு ..




முகப்பு 




அமைதியான கோவிலின் உட்புறம் ...
















இக்கோயிலுக்கு  எதிரே

வேணுகோபால  சுவாமி கோவில் உள்ளது.





இணையத்தில் இருந்து 

மூலவர்   : ஸ்ரீதேவி , பூதேவியுடன் பார்த்தசாரதி பெருமாள் 

உற்சவர்  : ருக்மிணி ,சத்யபாமா உடன் கோபாலகிருஷ்ணன்

     உற்சவர் கிருஷ்ணன் காலை உயர்த்தி நடனம் ஆடுவது போல் அழகாக காட்சி அளிக்கிறார் ...
பார்த்தசாரதி பெருமாலும் கண்களை விரித்து நம்மை பார்ப்பது போல் உள்ளது .


முகப்பு 
கோவிலின் உட்புறம் ..
















தேர் 



அமைதி ..அமைதி ...எல்லா இடமும் மிகவும் அமைதியாக இருந்தது ....

இக்கோவில் சனிக்கிழமை மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை திறந்து இருக்கும் ...மற்ற நாட்களில் சில மணி நேரமே நடை திறப்பு ...

மேலும் பட்டர் அருகிலே இருப்பதால் அழைத்தால் உடனடியாக வந்து நடை திறப்பு செய்வதாக கூறினார் .. 

நாங்கள் யோக நரசிம்மர் ஆலயத்தில் தரிசனத்தை முடித்து 12.30 மணிக்கு இங்கு வந்துவிட்டோம் ...

யாருமே இல்லாததால் மிக வேகமான தரிசனம் எங்களது ...




வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்

வீடுடை யானிடை வீடுசெய்ம்மினே.

நம்மாழ்வார்
இரண்டாந் திருமொழி
(2910)


தொடரும்....


அன்புடன்

அனுபிரேம்



10 March 2016

தொடர் பதிவு ...


அனைவருக்கும் காலை வணக்கம் ...

பதிவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு தொடர் பதிவில்  சகோதரி

ஏஞ்சலின்  என்னையும் அறிமுகப்படுத்தினார் ...அதற்காக இந்த பதிவு ...வாய்ப்பிற்கு நன்றி சகோதரி ....

நான் இப்பொழுது பல தளங்களை தொடர்ந்து ... பலரது பதிவுகளையும் வாசிக்கின்றேன்  ...அதில் சில பேரை மட்டும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்...




நிறைய தகவல்களை  வாரி வழங்கும்  தளம்  திரு .செந்தில் குமார் அவர்களின் கூட்டாஞ்சோறு ..

பல பயண குறிப்புகளை  சுவையாக அளிக்கும்  துளசி  டீச்சரின்  துளசி தளம்..


அனைத்து துறைகளைப் பற்றியும் பேசும் கீதா மற்றும் துளசிதரன் அவர்களின்   thillaiakathuchronicles...


திரு.பாலா அவர்களின் தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா தளத்தில் 
ஆன்மிக செய்திகளும் ,பாசுர விளக்கங்களும் மிகவும் அருமையாக இருக்கும் ..


எனக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் விருப்பம் ..ஆனால்  அதை பற்றிய  அறிவு மிகவும் குறைவு ...அதனால் நான் பிரமிப்பாக  காணும்  தளங்கள் 


திருமதி .ராம லக்ஷ்மி  அவர்களின்  முத்து சரம் ... 

மற்றும்  திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின்  சந்தித்ததும் சிந்தித்தும் ...

என்ன அழகான படங்களின் அணிவகுப்பு  இவர்களின் தளங்களில் ....அழகு ..!



மேலும் 


மகியின் தளம் 

சித்ரா சுந்தரமூர்த்தியின் இடம் 

ப்ரியாவின் இடம் பிரியசகி 

இந்த தளங்களில் பதிவு மட்டும் அல்ல பின்னூட்டங்களும் ஒரு நட்போடு இழையோடும் ...

அடுத்ததாக 

திருமதி.மரியா அவர்களின் மரியா 'ஸ்  தளம்   சின்ன சின்ன பூக்கள்  போன்ற கவிதைகளுடன் மிளிர்கிறது ...




இன்னும் பல பல பதிவர்கள் .....எத்தனை  விதமான செய்திகள் அனைத்தையும் பதிவிடும் ..அனைவருக்கும் வாழ்த்துக்கள் 


அன்புடன்

அனுபிரேம்


Image result for tamil quotes