செல்லுவ நாராயண சுவாமி திருக்கோவில் ...
கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். அதனால் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் கூரத்தாழ்வாரின் ஆலோசனைப்படி ராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டை விட்டு கர்நாடக தேசத்துக்கு சத்தியமங்கலம் வழியாக தொண்டனூர் வந்தார்.
என போன பதிவில் வாசித்தோம்...
வரலாறு
மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூரில் ராமானுஜர் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.
ராமானுஜர் பெருமாள் சொன்ன வழியாக திருநாராயணபுரத்துக்கு வந்து அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எறும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார்.
ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது.
இணையத்தில் இருந்து |
இணையத்தில் இருந்து |
இணையத்தில் இருந்து |
இணையத்தில் இருந்து |
மூலவர்: - திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.
உத்ஸவர்: - ஸம்பத்குமாரர்.
இதரபெயர்கள் - ராம ப்ரியர், செல்ல பிள்ளை, செல்வ நாராயணன்.
தாயார்: - யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.
தீர்த்தம்: - கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.
விமானம்: - ஆனந்தமய விமானம்
ப்ரத்யக்ஷம்: - கருட பகவான்
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வ நாரணன், திருநாரணன். வண்புகழ்நாரணன், வாழ்புகழ்நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம்.
முகப்பு |
ராமானுஜர் தை புனர்பூச நாளில் கல்யாணி புஷ்கரணிக்கரையில் அமைந்த புதரினுள் ஒளிர்ந்த பெருமானைக் கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்த அந்த நன்னாள் இன்றும் தை மாதம் விமரிசையாகத் திருநாராயணபுரத்தில் கொண்டாடப்படுகிறது.
தேர் |
மிக அழகான திருக்கோவில்....மூலவரும் ரொம்ப அழகு ....
நாங்கள் காலை 5 மணிக்கு பெங்களுரிலிருந்து கிளம்பி இத்திருகோவிலை காலை 8 மணிக்கு அடைந்தோம் . ஆனால் கோவில் திறப்பு காலை 9 .30 மணிக்கு என்று கூறவே நாங்கள் எடுத்து சென்றிருந்த காலை உணவை சாப்பிட்டு காத்திருந்தோம் .பின் நடை திறக்கவே எங்களுக்கு மிகவும் சிறப்பான தரிசனம் கிடைத்தது . ....
ஒருநா யகமாய் ஓடவுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்கொள்வர்,
திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ.
- நம்மாழ்வார்
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
இப்பதிவின் தொடர்ச்சிகளின் இணைப்பு ...
3.செல்ல பிள்ளை - வைரமுடி சேவை ...
4.சுவாமி ராமானுஜரின் - தமர் உகந்த திருமேனி ..
5.மலைமேல் யோக நரசிம்மர் ஆலயம் ..
3.செல்ல பிள்ளை - வைரமுடி சேவை ...
4.சுவாமி ராமானுஜரின் - தமர் உகந்த திருமேனி ..
5.மலைமேல் யோக நரசிம்மர் ஆலயம் ..
6. தொண்டனூர் கெரே -ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவில் , வேணுகோபால சுவாமி கோவில்......
7. சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்..
8. சுவாமி இராமானுஜர் உருவாக்கிய ஏரி ..
7. சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்..
8. சுவாமி இராமானுஜர் உருவாக்கிய ஏரி ..
மேல்கோட்டை பயணம் 1 & 2 இரண்டு பதிவுகளையும் இப்போதுதான் படித்தேன். தொடர்கின்றேன். நன்றி.
ReplyDeleteவருகைக்கும் ,தொடர்தலுக்கும் ரொம்ப நன்றி ஐயா ....
Deleteசுவாரஸ்ய விவரங்கள். தகதகக்கும் அழகிய படங்கள்.
ReplyDeleteஉங்க கூடவே பயணித்த உணர்வு. அழகான கோவில். படங்களும் அழகா இருக்கு.நன்றி.
ReplyDelete