22 February 2016

மேல்கோட்டை பயணம் 1

அனைவருக்கும் வணக்கம் ....


கடந்த வாரம் நாங்கள் ஒரு நாள் பயணமாக கர்நாடகா ..மாண்டியாவில் உள்ள மேல்கோட்டை ஸ்தலத்திற்கு சென்று வந்தோம் .....அந்த பயணத்தை பற்றியும் ...மிகவும் சிறப்பான மேல்கோட்டை ஸ்தலத்தை பற்றியும் ...தகவல்களுடன்  தரிசிக்கலாம் வாருங்கள் ...

இத்தலம் தென் இந்தியாவில் கர்நாடகா மாநிலம்  , மாண்டியா மாவட்டத்தில் , பெங்களுரிலிருந்து சுமார் 140 கி.மீ ரும் , மைசூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும்  உள்ளது.

பெங்களூர் மைசூர் ரயில் பாதையில் பாண்டவபூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம் ஒரு மலை வாசஸ்தலம். சமுத்திர மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில்அமைந்து.செல்லும் வழி 


திருநாராயணபுரம், யாதவகிரி என்ற பெயர்கள் இருந்தாலும் மேலே இருக்கும் கோட்டை என்ற பொருள்பட மேல்கோட்டை என்ற பெயரே பிரசித்தம்.சுவாமி  இராமானுஜர்


            கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். 

            அதனால் ஸ்ரீரங்கத்தில்    ராமானுஜருக்கு       பல தொல்லைகள்    கொடுத்தான்.    இதனால்  கூரத்தாழ்வாரின்   ஆலோசனைப்படி     ராமானுஜர்    வெள்ளை    சாத்தி, தமிழ்நாட்டை விட்டு     கர்நாடக   தேசத்துக்கு      சத்தியமங்கலம்  வழியாக         தொண்டனூர்    வந்தார். 


            அப்போது   ஜைன   மதத்தை      ஆதரித்து        வந்த   பிட்டிதேவன்    என்ற     மன்னன்      இந்த    இடத்தை   ஆண்டு   வந்தார் . அவரது   மகளுக்கு சித்தபிரம்மை       பிடித்திருந்தது.  அதனை    நீக்க ஜைனத்    துறவிகளால்   முடியாமல்     போக, ராமானுஜர்     உதவியால்  அது      நீங்கியது. இதைக் கண்ட   பிட்டிதேவன்     ஜைன   மதத்தைத்   துறந்து,        ஸ்ரீவைஷ்ணவன்    ஆனார் .  ஸ்ரீ ராமானுஜர்           அவருக்கு     விஷ்ணுவர்தனன்    என்ற    பெயரைச்    சூட்டினார்.  இந்த   மன்னன்    மேல்கோட்டை  கோயிலுக்குப்   பல   உதவிகள்    செய்துள்ளார் . 

             பின் சுவாமி ராமானுஜரின்  வழிகாட்டலில்  சுவாமி முதலியாண்டான்  அவர்கள் பஞ்ச நாராயண ஸ்தலத்தை நிறுவினார் . அதற்கு தேவையான அனைத்து  உதவியையும் விஷ்ணுவர்தன் அளித்தார் . 

அந்த பஞ்ச நாராயண ஸ்தலங்கள் .... ஸ்ரீ கீர்த்தி நாராயணா  திருக்கோவில் ,தலக்காடு

ஸ்ரீ நம்பி  நாராயண திருக்கோவில் , தொண்டனுர் 

ஸ்ரீ கேசவ நாராயணா திருக்கோயில் (சென்ன கேசவ ), பேலூர்

ஸ்ரீ சௌம்யா  நாராயண திருக்கோவில் , நாகமங்கலா  

ஸ்ரீ வீர நாராயண திருக்கோயில்,  சாளக்கிராமம் 


 பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி    ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு (1)
இப்பதிவின்  தொடர்ச்சிகளின் இணைப்பு ... 2 .திருநாராயணபுரம்  - செல்லுவ நாராயண  சுவாமி 

 3.செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...


 4.சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..


 5.மலைமேல் யோக நரசிம்மர்  ஆலயம் ..தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்

13 comments:

 1. படங்களில் விரல் தெரியாமல் எடுக்கக் கூடாதோ?

  :))))

  அந்த இடத்தின் அழகு கவர்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி ...இப்பொழுது படத்தை சரிப்படுத்திடேன் ..

   ஆமாம் ..ரொம்ப அழகான இடம் ..எல்லா பக்கமும் பசுமை ....

   Delete
  2. அட! விரலைக் காணோமே!

   Delete
  3. எடிட் சென்சாச்சு ...

   Delete
 2. நான் நமது புராதனக் கோவில்களுக்குப் போவேன், சாமி கும்பிடுவதில்லை, தமிழரின் தொன்மைச் சிறப்புமிக்க வரலாற்றுத் தடங்களைப் பார்ப்பேன்..உங்கள் பதிவில் படங்களை மிகவும் ரசித்தேன், என் வலைப்பக்க இணைப்பிலும் சேர்த்துள்ளேன் (நீங்களும் சேர்த்திருக்கும் போது நானும் சேர்ப்பதுதானே பண்பாடு? இணையத்தால் இணைந்து வளர்வோம்) நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் இணைப்பிற்கும் மிகவும் நன்றி ஐயா ...


   ஆம் ..நம் முன்னோரின் கலை படைப்புகளை காண கண் கோடி வேண்டும் ஐயா ...என்ன ஒரு உழைப்பு ...நேர்த்தி ...அழகு ....கலைநயம் ....

   Delete
 3. தொடரக் காத்திருக்கிறேன். மைசூரிலிருந்து திரும்பும் போது ஒரு சமயம் இங்கே இருந்த ஒரு சுற்றிவர பெரியப் படிக்கட்டுகளைக் கொண்ட குளம் (படையப்பா படத்தின் பாடல் காட்சியில் வரும்) மற்றும் குன்றின் மேல் இருந்த கோவில் ஆகியவற்றைப் படம் எடுத்திருக்கிறேன். நேரமின்மையால் கோவிலுக்குச் செல்லவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிகவும் நன்றி ...

   அது கல்யாணி தீர்த்தம்...மேலும் மலை மேல் உள்ள யோக நரசிம்மர் ஆலயமும் நிறைய படங்களில் வந்து உள்ளது..

   Delete
 4. மேல்கோட்டைக்குச் சென்றதுண்டு ஒரே ஒரு முறை. கதையும் அறிவோம். துலுக்கநாச்சியார் என்று சொல்லப்படுவார் அங்கிருக்கும் இறைவி. அதற்கும் கதை உண்டு. வளம் மிக்க இடம்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி அனு

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி...

   அடுத்த பதிவில் பீபி நாச்சியார் கதை ...

   Delete
 5. இந்தியா சென்றிருந்தபோது மைசூரில் தங்கியிருந்தோம்.அப்போ தெரிந்திருந்தால் சென்றிருக்கலாம்.அழகான இடம்.மேல்கோட்டை பயண அனுபவம்,தகவல்கள் படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரியா ...

   அடுத்த முறை வரும் போது கண்டிப்பாக இங்கு வாருங்கள் ...அமைதியான ...வரலாற்று சிறப்பு மிக்க இடம் ....

   Delete
 6. படங்களும் பகிர்வும் அருமை

  ReplyDelete