14 March 2016

தொண்டனுர் -மேல்கோட்டை பயணம் 6


அனைவருக்கும் வணக்கம் ...

முந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...


திருநாராயணபுரம்  - செல்லுவ நாராயண  சுவாமி 


செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...


சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..



மலைமேல் யோக நரசிம்மர்  ஆலயம் ..


அடுத்தாக நாம் பார்க்க  இருப்பது தொண்டனூர்...




இவ்வூர்   தொண்டனூர் கெரே என அழைக்கப்படுகிறது ...


மேல்கோட்டையில் இருந்து  20 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேல்கோட்டையில்  இருந்து பாண்டவபுரா  பயணிக்கும் போது,  வலது பக்கத்தில் தொண்டனூர்  உள்ளது ..

தொண்டனூரில் அமைந்து உள்ள கோவில்கள் 

1.இங்கு சுவாமி இராமானுஜரால் நிர்மானிக்கப்பட்ட ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவிலும்  (பஞ்ச ஸ்தலங்களில் ஒன்று ) , 

2 .எதிர் புறம் வேணுகோபால  சுவாமி கோவிலும் 

3.மற்றுமொரு யோக நரசிம்மர் கோவிலும் உள்ளன .....


ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவில் -








இணையத்தில் இருந்து 

மூலவர்      : ஸ்ரீ  நம்பி நாராயண பெருமாள்

 தாயார்    :    அரவிந்த  நாயகி

           இத்தல   இறைவன்  "நம்பி நாராயணன்", பெருமாள்   நின்ற   கோலத்தில்  அவரது  வலது மற்றும்  இடது கைகளில்  சங்கு,  சக்கரத்துடன் காட்சி  அளிக்கிறார் ...இதுவே  இத்தலத்தின் சிறப்பு ..




முகப்பு 




அமைதியான கோவிலின் உட்புறம் ...
















இக்கோயிலுக்கு  எதிரே

வேணுகோபால  சுவாமி கோவில் உள்ளது.





இணையத்தில் இருந்து 

மூலவர்   : ஸ்ரீதேவி , பூதேவியுடன் பார்த்தசாரதி பெருமாள் 

உற்சவர்  : ருக்மிணி ,சத்யபாமா உடன் கோபாலகிருஷ்ணன்

     உற்சவர் கிருஷ்ணன் காலை உயர்த்தி நடனம் ஆடுவது போல் அழகாக காட்சி அளிக்கிறார் ...
பார்த்தசாரதி பெருமாலும் கண்களை விரித்து நம்மை பார்ப்பது போல் உள்ளது .


முகப்பு 
கோவிலின் உட்புறம் ..
















தேர் 



அமைதி ..அமைதி ...எல்லா இடமும் மிகவும் அமைதியாக இருந்தது ....

இக்கோவில் சனிக்கிழமை மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை திறந்து இருக்கும் ...மற்ற நாட்களில் சில மணி நேரமே நடை திறப்பு ...

மேலும் பட்டர் அருகிலே இருப்பதால் அழைத்தால் உடனடியாக வந்து நடை திறப்பு செய்வதாக கூறினார் .. 

நாங்கள் யோக நரசிம்மர் ஆலயத்தில் தரிசனத்தை முடித்து 12.30 மணிக்கு இங்கு வந்துவிட்டோம் ...

யாருமே இல்லாததால் மிக வேகமான தரிசனம் எங்களது ...




வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்

வீடுடை யானிடை வீடுசெய்ம்மினே.

நம்மாழ்வார்
இரண்டாந் திருமொழி
(2910)


தொடரும்....


அன்புடன்

அனுபிரேம்



7 comments:

  1. ஆஹா அழகிய புகைப்படங்களும் விபரங்களும் நன்று சகோ.

    ReplyDelete
  2. ஆலயம் முழுதும் வலம் வந்து தரிசித்த உணர்வு.

    ReplyDelete
  3. அழகான புகைப்படங்களும் தகவல்களும் அருமை சகோ/அனு

    கீதா

    ReplyDelete
  4. புகைப்படங்களும் தகவல்களும் அருமை!

    ReplyDelete
  5. முதல் தடவையாக வருகிறேன். எனக்குப் பிடித்த கோவில்கள் வரிசையாக அணிவகுக்கின்றன. தெரியாமல் போய்விட்டது. நன்றி அனு. பெருமாள் புண்ணியத்தில் மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி அம்மா ...
      உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் .. என் தளத்தை தொடர்வதற்கும்

      Delete