அனைவருக்கும் வணக்கம் ...
முந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...
திருநாராயணபுரம் - செல்லுவ நாராயண சுவாமி
செல்ல பிள்ளை - வைரமுடி சேவை ...
சுவாமி ராமானுஜரின் - தமர் உகந்த திருமேனி ..
மலைமேல் யோக நரசிம்மர் ஆலயம் ..
தொண்டனூர் கெரே -ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவில் ,வேணுகோபால சுவாமி கோவில்......
சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்..
அடுத்ததாக நாம் காண இருப்பது சுவாமி இராமானுஜர் அமைத்த ஏரி .. இந்த ஏரி 2150 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது ...
வழியெல்லாம் வெல்லம் காய்சும் மணம் ...எங்கு திரும்பினாலும் வெல்லம் காய்சும் ஆலைகள் ....
மலை மலையாய் கரும்பு சக்கைகள் ...
சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்..
அடுத்ததாக நாம் காண இருப்பது சுவாமி இராமானுஜர் அமைத்த ஏரி .. இந்த ஏரி 2150 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது ...
ஆனால் இப்பொழுது ஏரியின் பராமரிப்பு பாவம் .. மிகவும் மோசம்.. ..
ஆனாலும் கோவிலை விட இங்கு கும்பல் அதிகம் ..அன்று ஞாயிறு என்பதால் நிறைய மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர் .....உண்டு, குளித்து என மிக மகிழ்வாக அனைவரும் இருந்தனர் ....
செல்லும் வழியில் இருந்த காட்சிகள் ...
குட்டையான செவ்விளநீர் மரம் ..
வழியெல்லாம் வெல்லம் காய்சும் மணம் ...எங்கு திரும்பினாலும் வெல்லம் காய்சும் ஆலைகள் ....
மலை மலையாய் கரும்பு சக்கைகள் ...
இணையத்திலிருந்து |
இணையத்திலிருந்து |
இணையத்திலிருந்து |
நாங்கள் இங்கிருந்து 4 மணிக்கு மீண்டும் புறப்பட்டு இரவு 7 மணிக்கு பெங்களுருவை அடைந்தோம் .....
மிகவும் மகிழ்வான பயணம் ....
எங்களுடன் மேல்கோட்டை பயணத்தை படித்து ,
இரசித்த அனைவருக்கும் மிகவும் நன்றி ....
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவ விதிவழி யடையநின் றனரே.
-நம்மாழ்வார்
முதல் திருமொழி
(2904)
அன்புடன்
அனுபிரேம்
ஏரியில் நீரைப் பார்ப்பதே அருமையான காட்சி.
ReplyDeleteஆம் ரொம்ப அழகு ...நன்றி ஸ்ரீராம் சார்
Deleteபுகைப்படங்கள் அழகு வாழ்த்துகள் சகோ
ReplyDeleteமிகவும் நன்றி..உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..
Deleteபடங்கள் அழகு....
ReplyDeleteமிகவும் நன்றி..உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..
Deleteஏரியின் படம் மனதைக் கவர்கிறது சகோதரியாரே
ReplyDeleteமிகவும் நன்றி ஐயா ..உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..
Deleteசகோ மிக அருமையான புகைப்படங்கள். அந்த ஏரி மிக அழகு!
ReplyDeleteகீதா: அனு இங்கு சென்ற அனுபவம் உண்டு. பல வருடங்களுக்கு முன்பு. எனக்கு ஒரு சிறிய வருத்தம் உண்டு.
நம் மக்கள் ஏரி, குளங்கள்ம் கால்வாய், ஆறு, நீர்வீழ்ச்சி இவைகளில் குளிப்பதில் தவறு இல்லை ஆனால் சோப், ஷாம்பூ துணி துவைத்தல் என்று செய்வது மனம் ஏற்க மறுக்கின்றது. சாப்பிட்டுவிட்டுக் குப்பைஅகளை கரையில் போடுவது போன்றதும். அதனாலேயே நம்மூர் நீர்னிலைகள் பாழடைந்து போகின்றன...சுற்றுலா மகிழ்வான ஒன்று ஆனால் அதே சமயம் நமது வருங்கால சந்ததியினரும் இவற்றை அனுபவிக்க வேண்டும் அல்லவா அதனால்தான்...
அனு நீங்கள் இன்னும் குறிப்புகள் கொடுத்தால் நன்றாக இருக்குமே. இது ஒரு பரிந்துரை அவ்வளவே. அழகான படங்கள் தருகின்றீர்கள். அதனால்தான் ஓகேயா...
மிக்க நன்றி பகிர்விற்கு. இன்னும் நிறைய பதியுங்கள் இது போன்றவற்றையும் உங்கள் கட்டுரைகளையும்...வாழ்த்துகள்
கருத்திர்க்கு மிகவும் நன்றி சகோ
Deleteஉண்மையான வார்த்தைகள் ...
நாங்கள் எப்பொழுதும் கையில் ஒரு பை வைத்திருப்போம் ....ரயிலோ ,பேருந்தோ,காரோ எதுவாக இருந்தாலும் ...சேரும் குப்பைகளை அதில் சேர்த்து குப்பை தொட்டியில் சேர்ப்பது எங்கள் வழக்கம் ...
பசங்களும் அதில் பழகியாச்சு ...
ஆனால் ரயிலில் செல்லும் போது மற்றவர்களின் பார்வை மிகவும் அதிசயமாக பார்ப்பார்கள் ....
உங்களின் பதிவையும்,கருத்துகளையும்(மிக நீண்ட ) பார்த்து மலைப்பது உண்டு ....
முடிந்தவரை எனக்கு தெரிந்த தகவல்களை இங்கே பகிர்கிறேன் ....உங்கள் ஊக்கத்திர்க்கு மிகவும் நன்றி ...இன்னும் பல நல்ல பதிவுகளை பல செய்திகளுடன் தர முயலுகிறேன் ...
அன்புடன் நான்