31 December 2022

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2023

 வாழ்க வளமுடன் .....                                                                  


அனைவருக்கும் 
எங்களது 

இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்   2023 ................🌼🌻🌺🌸🌹


Happy New Year 2023......


திருச்சியிலிருந்து  


16. திருப்பாவை - நாயகனாய் நின்ற

 பதினாறாம் பாசுரம் - இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள்.


30 December 2022

15. திருப்பாவை - எல்லே! இளங்கிளியே!

பதினைந்தாம் பாசுரம் - இதில் ஆண்டாளும் அவள் தோழிகளும் தன் திருமாளிகைக்கு வருவதான அழகிய காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.




29 December 2022

14. திருப்பாவை - உங்கள் புழைக்கடைத்

  பதினான்காம் பாசுரம் -- இதில் தான் வந்து எல்லோரையும் எழுப்புவேன் என்று வாக்களித்து அதை மறந்து தன் வீட்டிலேயே படுத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.





28 December 2022

13. திருப்பாவை - புள்ளின் வாய் கீண்டானைப்

 பதிமூன்றாம் பாசுரம் - இதில் தன் கண்களின் அழகைத் தானே ஏகாந்தத்தில் ரசித்துக்கொள்ளும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். கண்கள் பொதுவாக ஞானத்தைக் குறிக்கும் என்பதால் இவள் எம்பெருமான் விஷயத்தில் பூர்ண ஞானம் உடையவள். இவள் கண்ணன் தானே இவளைத் தேடி வருவான் என்று நினைத்திருக்கிறாள். கண்ணன் அரவிந்தலோசனன் என்று சொல்லப்பட்டிருப்பதால் இவள் அவனுக்குத் தகுதியான கண்ணழகு படைத்தவள்.




27 December 2022

12. திருப்பாவை - கனைத்து இளங் கற்று எருமை

 பன்னிரண்டாம் பாசுரம் -  இதில் கண்ணன் எம்பெருமானுக்கு நெருங்கிய தோழனான, ஒரு இடையனின் தங்கையான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். 




26 December 2022

11. திருப்பாவை - கற்றுக் கறவை

  பதினோறாம் பாசுரம் - இதில் கண்ணனைப் போலே வ்ருந்தாவனத்திலேயே மிகவும் விரும்பப்படும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். 




25 December 2022

10. திருப்பாவை - நோற்றுச் சுவர்க்கம்

பத்தாம் பாசுரம் - இதில் கண்ணனுக்குப் பிரியமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் எம்பெருமானே உபாயம் என்பதில் உறுதியுள்ள ஸித்த ஸாதன நிஷ்டை, இதனால் அவனால் மிகவும் விரும்பப்படுபவள்.




24 December 2022

9. திருப்பாவை - தூமணி மாடத்து

 ஒன்பதாம் பாசுரம் - இதில் எம்பெருமானே உபாயம் என்ற விச்வாஸத்துடன், எம்பெருமானுடன் சேர்ந்து பல ரஸங்களை அனுபவிக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் ஸீதாப் பிராட்டி ஹனுமானிடம் “ஸ்ரீராமனே வந்து என்னைக் காப்பார்” என்று உறுதியுடன் இருந்ததைப் போலே இருப்பவள்.




23 December 2022

ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி ...

 இன்று  ஹனுமத் ஜெயந்தி.... மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில்  ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 


நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் கோவில் ஹனுமத் ஜெயந்தி விழா....


8. திருப்பாவை - கீழ்வானம்

எட்டாம் பாசுரம்  - இதில் கண்ணனால் மிகவும் விரும்பப்படுபவளும் அதனால்  மிகுந்த பெருமையை உடையவளுமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.



22 December 2022

தொண்டரடிப்பொடியாழ்வார்

 தொண்டரடிப்பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை




7. திருப்பாவை - கீசு கீசு என்று

 ஏழாம் பாசுரம் - இதில் க்ருஷ்ணானுபவத்தில் தேர்ந்தவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவளோ ஆண்டாள் மற்றும் தோழிகளின் இனிய குரலைக் கேட்பதற்காக உள்ளே காத்திருக்கிறாள்.




21 December 2022

6. திருப்பாவை - புள்ளும் சிலம்பின

 6ஆம் பாசுரம் முதல் 15ஆம் பாசுரம் வரை, ஆண்டாள் நாச்சியார், பஞ்சலக்ஷம் குடும்பங்களைக் கொண்ட திருவாய்ப்பாடியில் இருக்கும் கோபிகைகளை எழுப்புவதைக் காட்டும் வகையில் பத்து கோபிகைகளை எழுப்புகிறாள். வேதம் வல்லார்களான அடியார்களை எழுப்பும் க்ரமத்தில் இந்தப் பத்து பாசுரங்கள் அமைந்துள்ளன.

ஆறாம் பாசுரம்  இதில் க்ருஷ்ணானுபவத்துக்கு புதியவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் கண்ணனைத் தானே அனுபவிப்பதிலேயே த்ருப்தி அடைகிறாள் – இது ப்ரதம பர்வ நிஷ்டை – முதல் நிலை. பாகவதர்களுடன் கூடி இருப்பதை உணர்ந்தால், அது சரம பர்வ நிஷ்டைக்குக் (இறுதி நிலை) கொண்டு செல்லும்.




20 December 2022

5. திருப்பாவை - மாயனை மன்னு

 ஐந்தாம் பாசுரம் - நாம ஸங்கீர்த்தனத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் கர்மங்கள் முழுமையாகத் தொலையும் என்று காண்பிக்கிறாள். முன் செய்த வினைகள் தீயினில் போட்ட பஞ்சு போலே அழியும், இனி வரும் வினைகள் தாமரையில் தண்ணீர் போலே ஒட்டாமல் விலகும். முன் செய்த வினைகளை எம்பெருமான் முழுமையாக விலக்குகிறான். ஆனால் வரும் காலத்தில் தெரியாமல் செய்யும் வினைகளை விலக்குகிறான், ஆனால் தெரிந்து செய்யும் வினைகளை அனுபவித்தே தீர்க்கும்படி செய்கிறான்.



19 December 2022

4. திருப்பாவை - ஆழி மழைக் கண்ணா

  நான்காம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் செழிப்புடன் இருந்து க்ருஷ்ணானுபவம் செய்ய மழைக்கு தேவதையான பர்ஜந்யனை மாதம் மூன்று முறை  மழை பொழியுமாறு ஆணையிடுகிறாள்.



18 December 2022

3. திருப்பாவை - ஓங்கி உலகு அளந்த

 மூன்றாம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் தன் க்ருஷ்ணானுபவத்துக்கு அனுமதி அளிப்பதால் அவர்கள் அனைவருக்கும் நன்மைகள் விளைய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறாள். எல்லோருக்கும் க்ருஷ்ணானுபவம் கிடைக்க வேண்டும் என்பதே உள்ளர்த்தம்.






17 December 2022

2. திருப்பாவை - வையத்து வாழ்வீர்காள்

  இரண்டாம் பாசுரம்- க்ருஷ்ணானுபவத்தில் ஈடுபடும்போது நோன்புக்கு அங்கமாக எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவிக்கிறாள். 



16 December 2022

1. திருப்பாவை - மார்கழித் திங்கள்

 முதல் பாசுரம் - ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்கழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.



ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் --ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்.



11 December 2022

மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.......

 வாழ்க வளமுடன்.....


இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்....... ஆகவே கவியின் நினைவுகள் சில..




09 December 2022

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருஅவதார உற்சவம்...

திருநாங்கூர் திருவாலி திருநகரி ஸ்ரீ குமுதவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருஅவதார உத்ஸவ காட்சிகள் -


திருமங்கையாழ்வார்  ஸ்ரீராமர்  திருக்கோலம்---- 





08 December 2022

ஸ்ரீ திருப்பாணாழ்வார்

  இன்று ஸ்ரீ திருப்பாணாழ்வார்  அவதார  திருநட்சித்திரம்  ....  கார்த்திகையில் ரோஹிணி ...





07 December 2022

திருமங்கையாழ்வார்....

கார்த்திகையில் கார்த்திகை .....

நீலன், கலியன், ஆலிநாடன், அருள்மாரி, அரட்ட முக்கி அடையார் சீயம்,
கொங்கு மலர்க் குழலியர் வேள்,
மங்கை வேந்தன், கொற்ற வேல் பரகாலன்
நாலுகவிப் பெருமாள், குமுதவல்லி மணாளன்,
திருமங்கை ஆழ்வார் அவதார நந்நாள் இன்று !






06 December 2022

கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் மூன்றாம் திருநாள் ----

  அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை.

 திருக்கார்த்திகை தீபத்திருவிழா- 2022

கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் மூன்றாம் திருநாள் ---- 

ஸ்ரீ விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம். 

ஸ்ரீ சுப்ரமணியர் - வெள்ளி மயில் வாகனம். 

ஸ்ரீ சுவாமி - அம்பாள் மர சிம்ம வாகனம் 

ஸ்ரீ அம்பாள் - மர அன்னபக்ஷி வாகனம் 

ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷப  வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா. 



05 December 2022

திருவண்ணாமலையில் ....

 அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை.

 திருக்கார்த்திகை தீபத்திருவிழா- 2022

முதல் நாள்  - வெள்ளி அதிகார நந்தி வாகனம்..... 


வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருள்மிகு அண்ணாமலையார்

திருமங்கையாழ்வார் - திருவெழுக்கூற்றிருக்கை

  திருமங்கையாழ்வார் அருளியவை ----  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,  திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய  திருமடல், சிறிய திருமடல்.




அணைத்த வேலும் தொழுத கையும்... கலியன்


04 December 2022

கைசிக ஏகாதசி.....

இன்று கைசிக ஏகாதசி (4.12.2022) .....

கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும்  "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி  நிச்சயம்.  அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".

மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான "வைகுண்ட ஏகாதசி". 

மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான "கைசிக ஏகாதசி".  மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.






03 November 2022

ஸ்ரீ பேயாழ்வார்

 ஸ்ரீ பேயாழ்வார்  அவதார  திருநட்சித்திரம் இன்று ...  ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...











01 November 2022

ஸ்ரீ பொய்கையாழ்வார்

 இன்று ஸ்ரீ பொய்கையாழ்வார் திருநட்சித்திரம் -  ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.....






31 October 2022

முருகன் தரிசனம் ...

குமாரவயலூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கந்தசஷ்டி திருவிழா 2022 

 3 ஆம் திருநாள் இரவு ரிஷப வாகனம்


30 October 2022

ஸ்ரீ மணவாள மாமுனிகள் --- குடை புறப்பாடு ..............

 மணவாளமுனிகள் 652 ஆவது திருநட்சத்திர உற்சவம்-

ஸ்ரீ மணவாள மாமுனிகள்  திருநட்சத்திரம் நேற்று  --- ஐப்பசி  திருமூலம்.....


கந்த சஷ்டி பெருவிழா .....

ஓம் சரவணபவ


முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். 

சூரபத்மனின்  -- ஒருபாதி “நான்”என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும் அமையப்பெற்றவன்.

சூரபத்மன் ஆணவ மலம் கொண்டவன். தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது. 

அதாவது எம்மைப் பீடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இன் நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது.

 



28 October 2022

குமார வயலூர்....

திருச்சியில் இருந்து மேற்கே, 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். குமாரவயலூர் என்னும் வயலூர், வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர். 

இவ்வூரை 'உறையூர் கூற்றத்து வயலூர்', 'தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்' 'ராஜகம்பீர வளநாடு'  'மேலைவயலூர்' என்று குறிப்பிடுகின்றன.

24 October 2022

தீபாவளி வாழ்த்துக்கள்....

  அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....




22 October 2022

பெருமாள் மலை, துறையூர்

  ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி (தென்திருப்பதி) திருக்கோவில், பெருமாள்மலை, துறையூர்.

துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை.





17 October 2022

'பசவண்ணர்' .....

 வாழ்க வளமுடன் ...

 லேபக்க்ஷி கோவிலுக்கு  எதிராக சுமார் 20 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்ட நந்தி உள்ளது. பசவண்ணா  என்றழைக்கப்படும் இந்த நந்தி சாதாரண நந்தி போல் அல்லாமல் கொஞ்சம் தலை தூக்கியவாறு ஆனால் பணிவான தொனியில் அமைக்கப்பட்டுள்ளது.






15 October 2022

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில்.

 திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 95 திவ்ய தேசம். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.