02 December 2022

வாரணாசி ......

 வாழ்க வளமுடன் ...


காசி வீதியில் ,....



இறைவனின் ஆசியால்  எங்களுக்கும் காசி, கயா, அலஹாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதனாலே இந்த 20 நாட்களாக எந்த பதிவும் இல்லை.

மிக சிறப்பான பயணம்...  5 நாட்கள் பயணம் தான், ஆனாலும் எந்த சுற்றுலா நிறுவனத்துடனும் செல்லாமல் நாங்களே அனைத்து இடத்திற்கும் முன்பதிவு செய்து சென்று வந்தோம்.  வித்தியாசமான அனுபவங்களும், பல மனிதர்களை காணும் பயணமாக இது அமைந்தது. 

இங்கு பல வலைதளங்களில் வாசித்து  இவ்விடங்களை  காணும்  ஆவலும், ஆசையும் ஏற்பட்டது,  அதன் பயனாக அமைந்தது எங்களின் இந்த பயணம்.

ஸ்ரீராம் சாரின் காசி பயணம், வெங்கட் சாரின் அலஹாபாத் பயணங்களை வாசித்து  ரசித்த பொழுது இத்தனை  விரைவில் நாங்களும் செல்லுவோம் என எண்ணவில்லை, இன்றும் கனவு போலவே உள்ளது.  நான், கணவர், மாமியார் மற்றும் ஒரு அத்தை  என நான்கு  பேர் மட்டும் சென்று வந்தோம். தனியாக செல்லுவதை விட குழுவாக இந்த ஆன்மீக பயணங்களை செல்லுவது இன்னும் நல்ல அனுபவமாக இருக்கும். ஆனால்  எங்களுக்கு செல்லும் நாட்கள் குறைவாக இருந்ததால்  நாமே  செல்லலாம் என அவனை நம்பி சென்றோம். எங்கும் குறை இல்லாமல் மிக அருமையான பயணமாக அமைந்தது.



விஷ்ணு பாதம்  கோவில் , கயா 

புத்தகயாவில் ராமர் 

காசி கங்கா ஆரத்தி ...

நாட்டுக்கோட்டை செட்டியார் மடத்தில் கவர்ந்த வரிகள் 

படகு பயணத்தில் 

சிறகை விரித்தேன் நானும் ...

ரத்னேஷ்வர் மகாதேவ் கோவில் 

மணிகர்ணிகா காட் 

சிவ சிவா 

படகு பயணம் ஓவியமாக 

ராம் காட், பிந்து மாதவ பெருமாள் கோயிலில் இருந்த  சிவ பெருமான் 

தேவ் தீபாவளி ஆரத்தி முடிந்த பிறகு ...

திரிவேணி சங்கமத்தில் 

அலஹாபாத்தில்  

சூரியனுடன் நேரே 

பனி பாறையோ 

சென்னை விமான நிலையத்தில் 

விரைவில் இப்பயண அனுபவங்களை  இங்கு தொடர்கிறேன் ...






அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼






8 comments:

  1. நாங்கள் திரும்பவும் மார்ச் இந்த இடங்களுக்குச் செல்கிறோம். காசி கயா இரண்டாவது முறை. ப்ரயாக்ராஜ் திரிவேணி சங்கம்ம் மூன்றாவது முறை.

    படங்களுக்கான ஒரு வரி இல்லாமல் படங்கள் வெளியிட்டது ஏமாற்றம். மணிகர்ணிகா காட் லாம் கங்கை ந்திப் படகுப் பயணத்திலிருந்து எடுத்திருக்கீங்க. சிவலிங்கம் எங்குள்ளதுன்னு குறிப்பிடலை. அனேகமா நீங்க செல்லாத காசிராஜா அரண்மனைக்குச் செல்லலாம் என நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார் சென்று வாருங்கள் ...

      இதோ அந்த ஒரு வரியை சேர்த்துவிட்டேன் ..

      அந்த சிவலிங்கம் பிந்து மாதவ பெருமாள் கோவில் , ராம் காட் ல் எடுத்தது...

      காசி ராஜா அரண்மனை ஆஹா சென்று வாருங்கள் சார் உங்கள் குறிப்புகளை தந்தால் அடுத்த பயணத்தில் சேர்த்துக் கொள்கிறேன் ...

      அங்கு நாங்கள் பார்க்காமல் விட்ட இடங்கள் கேதார் காட் கோவில் , துளசி மாதா கோவில் இன்னும் சில ...இரு நாட்களில் காசியை நடையாக நடந்து சென்றதே இன்னும் பிரமிப்பாக உள்ளது

      Delete
  2. விமானப் பயணம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். எனக்கு விமானப் பயணம் பிடிப்பதில்லை. அதனால் இரயில் பிரயாணம்தான்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் ரயில் பயணம் தான் முடிவு செய்தோம் ...பிறகு திட்டத்தை மாற்றி விமானத்தில் சென்று வந்தோம் சார்

      ஆனால் இந்த பயணத்தில் விமானம், ரயில் , மெட்ரோ ரயில் , double decker ரயில் , ஆட்டோ , கார் , படகு என அனைத்து சவாரியும் கிடைத்தது ...

      Delete
  3. இந்த மாதத்துக்குள் பிரயாணக்குறிப்பை எழுதிவிடுவீர்களா? ஜனவரிக்குள் முடித்துவிடப் பாருங்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் வாய்ப்பு இல்லை சார் ,ஜனவரிக்கு மேலே தான் எழுதும் எண்ணம் உள்ளது...

      Delete
  4. இப்பவே என் மனைவி, மணிகர்ணிகா காட் டுக்கெல்லாம் போகக்கூடாது, படம்லாம் எடுக்கக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டிருக்கா..ஹாஹா. இதுவரை கங்கையில் படகுப்பயணம் சென்றதில்லை (எல்லா காட்டுக்கும் செல்ல முடியாது என்பதால்). இந்தமுறை அது நிறைவேறுகிறதான்னு பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. படகில் பயணம் செய்து பாருங்கள் சார் , அருமையான பயணமாக இருந்தது .. ஆஹா கங்கையில் என்னும் எண்ணமே சிலிர்க்க வைத்தது..

      64 காட் ம் பார்க்கலாம் ன்னு சொல்லுவாங்க ஆனா சும்மா சுத்திட்டு வந்துடுவாங்க ...நான் கொஞ்சம் குறிப்புகளுடன் சென்றதால் பிந்து மாதவ பெருமாள் கோவில் கிட்ட போங்க ன்னு சொன்னா டென்ஷன் ஆனாங்க...அப்புறம் ரொம்ப கேக்கல்ல, ஆனாலும் காலபைரவர் பார்த்திட்டு நடந்தே பிந்து மாதவ பெருமாள் கோவிலுக்கு வந்தோம் ... ஒரே குறுகிய சந்துகள் வழி கேட்டு வழி கேட்டு வந்தோம் ...நல்லா இருந்தது

      Delete