22 December 2022

7. திருப்பாவை - கீசு கீசு என்று

 ஏழாம் பாசுரம் - இதில் க்ருஷ்ணானுபவத்தில் தேர்ந்தவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவளோ ஆண்டாள் மற்றும் தோழிகளின் இனிய குரலைக் கேட்பதற்காக உள்ளே காத்திருக்கிறாள்.






கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

      பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

      வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?

      நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

     தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய்


(க்ருஷ்ண பக்தி இருந்தும் அதை உணராமல் இருக்கும்) அறிவிலியே! 

எல்லா திசைகளிலும் பரத்வாஜ பக்ஷியின் கீசு கீசு என்று கலந்து பேசிய பேச்சின் ஒலியைக் கேட்கவில்லையோ?

 வாசனை மிகுந்த அழகிய கூந்தலை உடைய இடைச்சிகளுடைய அச்சுத்தாலி முளைத்தாலி போன்ற ஆபரணங்கள் கல கல என்று ஓசை ஏற்படும்படி கைகளை அசைத்து மத்தினாலே ஓசை ஏற்படுத்திய தயிரின் ஓசையை நீ கேட்கவில்லையோ? 

கோபிகைகளுக்குத் தலைவியாய் இருப்பவளே! 

நாராயணனின் அவதாரமான கண்ணனை நாங்கள் பாடவும், 

இப்படியே நீ கிடக்கலாமோ? ஒளி படைத்தவளே! கதவைத் திற.


மார்கழி மாதம்  ஏழாம் நாள் - ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில்...

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர்  கேசி வதம் திருக்கோலத்தில்  










ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்
அனுபிரேம்🌺🌺🌺

1 comment:

  1. நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
    கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

    ஹரி ஓம்.. ஹரி ஓம்..

    ReplyDelete