09 December 2022

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருஅவதார உற்சவம்...

திருநாங்கூர் திருவாலி திருநகரி ஸ்ரீ குமுதவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருஅவதார உத்ஸவ காட்சிகள் -


திருமங்கையாழ்வார்  ஸ்ரீராமர்  திருக்கோலம்---- 






பரகால நாயகியாக திருமங்கையாழ்வார் ----












 திருமங்கையாழ்வார்  வேங்கட கிருஷ்ணன் திருக்கோலத்தில்  ...










ஸ்ரீ  திருமங்கையாழ்வார்   வேணுகோபாலன் திருக்கோலத்தில்  ....















 திருமங்கையாழ்வார்  வாமன அவதார திருக்கோலத்தில் ....






ஸ்ரீ திருமங்கையாழ்வார் வெண்ணை கண்ணன் திருக்கோலத்தில் .....








 யானை வாகனத்தில் திருமங்கையாழ்வார் -- குமுதவல்லி நாச்சியார்....









ஸ்ரீ திருமங்கையாழ்வார்  ஸ்ரீ சரஸ்வதி  திருக்கோலத்தில் ... 





 ஸ்ரீ திருமங்கையாழ்வார்  ஆடல்மா குதிரை வாகனத்தில் புறப்பாடு...












 தேரழுந்தூர் ஸ்ரீ ஆமருவியப்பன் பெருமாள் திருமாலைகள்  பஹுமானங்களுடன் திவ்ய ஸேவை....


          






ஸ்ரீ மணவாள  மாமுனிகள் அருளிய 
திருமங்கையாழ்வார் வடிவழகு சூர்ணிகை

 அணைத்தவேலும், தொழுதகையும், அழுந்திய திருநாமமும்,
ஓம் என்றவாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதித்த நெற்றியும், நெறித்த புருவமும்
சுருண்ட குழலும், வடிந்த காதும் அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும்,
திரண்ட தோளும் நெளித்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும்,
தொங்கலும் தனி மாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்,
சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,
தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கணைக்காலும்,
குளிரவைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும்,
வயலாளி மணவாளனும், வாடினேன் வாடி (என்று)
வாழ்வித்தருளிய , நீலிக்கலிகன்றி, மருவலர்தம் உடல்துணிய
வாள்வீசும் பரகாலன், மங்கைமன்னனான வடிவே.

உறை கழித்த வாளையொத்த விழிமடந்தை மாதர்மேல், 
உருகவைத்து மனமொழித்து, இவ்வுலகளந்த நம்பி மேல், 
குறையைவைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்  
கொல்லைதன்னில்  வழிபறித்த குற்றமற்ற செங்கையான்
 மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்க,  அவன்முனை 
மடியொடுக்கி மனமடங்கி வாய்புதைத்து ஒன்றலார்
 கறைகுளித்த வேலனைத்து நின்றவிந்ததிலைமை, என்
 கண்ணைவிட்டு கன்றிடாது கலியனாணை ஆணையே.


காதும் சொரிமுத்தும் கையும் கதிர்வேலும்
தாதுபுனை தாளிணையும் தனிச்சிலம்பும் — நீதிபுனை
தென்னாலி நாடன் திருவழகைப் போல
என்னாணை ஒப்பார் இல்லையே.

வேலணைத்த மார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச்செவியும் — தாளினிணைத்
தண்டையும் வீரக்கழலும் தார்க்கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும்மேன்கண்.


இதுவோ ! திருவரசு இதுவோ! திருமணங்கொல்லை 
இதுவோ! எழிலாழி என்னுமூர் 
இதுவோ! தான்வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை 
எட்டெழுத்தும் பறித்தவிடம். 



கார்த்திகையில் கார்த்திகை ஸ்ரீ திருமங்கையாழ்வார்  திவ்ய ஸேவை...






No comments:

Post a Comment