10 December 2019

திருமங்கையாழ்வார்

இன்று    திருமங்கையாழ்வார்  அவதார  திருநட்சித்திரம்  ......


கார்த்திகையில் கார்த்திகை .....





சௌரிராஐ பெருமாள் திருக்கோலம்.




 திருமங்கையாழ்வார்  வாழி திருநாமம்!



கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே

காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே

நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே

நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே

இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே

இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே

வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே

வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே .....!









திருமங்கை மன்னன் ,

மனிதனாகப் பிறந்து, முரட்டு வீரனாக வளர்ந்து, அரசனாகப் பதவி அனுபவித்து, மங்கையின் மீது காதல் கண்டார்,அந்தக் காதலியின் வார்த்தைகளால், எம்பெருமான் மீது காதல் கொண்டார்,

பரம வைஷ்ணவனாக மாறி, அரச பொறுப்பைத் துறந்து அரங்கனுக்காக,அவன் ஆலயத்தின் திருமதில்களைக் கட்டுவதற்காக, “திருடனாகவும்” மாறினார்,


எம்பெருமானையே நேரில் கண்டு, அவன் திருவாயினாலே,
“ஓம் நமோ நாராயணாய” என்ற திருஎட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்றார்,


அரங்கன் ஆலயத்தில்,அரங்கனைப் பாடி, அரங்கனை மகிழ்வித்து, அவனிடமே ஆழ்வார்களின் தமிழுக்கு ஒரு விழா வேண்டி, இன்று வரை, இன்னும் வரும் காலங்களிலும், தொடர்ந்து நடைபெறும் வகையில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறக் காரணமானவர், திருமங்கையாழ்வார்.


 துணைவியுடன் இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்.


திருமங்கையாழ்வார் வைபவம்  ...

பரகால நாயகியாக திருமங்கையாழ்வார்




சந்திர பிரபையில் புறப்பாடு.





 திருமங்கையாழ்வாரின் சிறப்புக்கள்

        திருமங்கையாழ்வாரின் வாள் வீச்சும், கவிதை வீச்சும் வேறு எவரிடமும் காண முடியாதவை.

பெரிய திருமொழி (1084 பாடல்கள்)
திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)
திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)
திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் – 47 அடிகள்)
சிறிய திருமடல் (ஒரு பாடல் – 155 அடிகள்)
பெரிய திருமடல் (ஒரு பாடல் – 297 அடிகள்)

   என்கிற ஆறு வகை பிரபந்தங்களை  அருளிச் செய்து, அதிகமாக 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தார்.






திருக்குறுந்தாண்டகம் 

நிதியினைப்பவளத்தூணை நெறிமையால்நினையவல்லார் * 
கதியினைக்கஞ்சன்மாளக் கண்டுமுன்அண்டமாளும் * 
மதியினைமாலைவாழ்த்தி வணங்கிஎன்மனத்துவந்த * 
விதியினைக்கண்டுகொண்ட தொண்டனேன்விடுகிலேனே. (2)

1 2032


காற்றினைப்புனலைத்தீயைக் கடிமதிளிலங்கைசெற்ற 
ஏற்றினை * இமயம்மேய எழில்மணித்திரளை * இன்ப 
வாற்றினை அமுதந்தன்னை அவுணனாருயிரையுண்ட 
கூற்றினை * குணங்கொண்டுஉள்ளம் கூறுநீகூறுமாறே. 

2 2033



பாயிரும்பரவைதன்னுள் பருவரைதிரித்து * வானோர்க் 
காயிருந்துஅமுதம்கொண்ட அப்பனைஎம்பிரானை * 
வேயிருஞ்சோலைசூழ்ந்து விரிகதிரிரியநின்ற * 
மாயிருஞ்சோலைமேய மைந்தனைவணங்கினேனே. 

3 2034


கேட்கயானுற்றதுண்டு கேழலாய்உலகங்கொண்ட * 
பூக்கெழுவண்ணனாரைப் போதரக்கனவில்கண்டு * 
வாக்கினால்கருமந்தன்னால் மனத்தினால்சிரத்தைதன்னால் * 
வேட்கைமீதூரவாங்கி விழுங்கினேற்குஇனியவாறே. 

4 2035




வேணு கோபாலன் அலங்காரம்.

 இரும்பனன்றுண்டநீர்போல் எம்பெருமானுக்கு * என்தன் 
அரும்பெறலன்புபுக்கிட்டு அடிமைபூண்டுஉய்ந்துபோனேன் * 
வரும்புயல்வண்ணனாரை மருவிஎன்மனத்துவைத்து * 
கரும்பினின்சாறுபோலப் பருகினேற்குஇனியவாறே. 

5 2036


மூவரில்முதல்வனாய ஒருவனை. உலகம்கொண்ட * 
கோவினைக்குடந்தைமேய குருமணித்திரளை * இன்பப் 
பாவினைப்பச்சைத்தேனைப் பைம்பொன்னைஅமரர்சென்னிப் 
பூவினை * புகழும்தொண்டர் என்சொல்லிப்புகழ்வர்தாமே.

6 2037


பரகால நாயகியாக 


இம்மையைமறுமைதன்னை எமக்குவீடாகிநின்ற * 
மெய்ம்மையைவிரிந்தசோலை வியன்திருவரங்கம்மேய * 
செம்மையைக்கருமைதன்னைத் திருமலையொருமையானை * 
தன்மையைநினைவார் என்தன்தலைமிசைமன்னுவாரே. 

7 2038


வானிடைப்புயலைமாலை வரையிடைப்பிரசம்ஈன்ற * 
தேனிடைக்கரும்பின்சாற்றைத் திருவினைமருவிவாழார் * 
மானிடப்பிறவி அந்தோ! மதிக்கிலர்கொள்க * தந்தம் 
ஊனிடைக்குரம்பைவாழ்க்கைக்கு உறுதியேவேண்டினாரே. 


8 2039











         ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!


அன்புடன்,
அனுபிரேம்

No comments:

Post a Comment