25 December 2019

திருப்பாவை – பாசுரம் 9

தூமணி மாடத்து

"மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ?"











தூமணிமாடத்துச் சுற்றும்விளக்கெரிய *

தூபம்கமழத் துயிலணைமேல்கண்வளரும் *

மாமான்மகளே! மணிக்கதவம்தாள்திறவாய் *

மாமீர்! அவளையெழுப்பீரோ? * உன்மகள்தான்

ஊமையோ? அன்றிச்செவிடோ? அனந்தலோ? *

ஏமப்பெருந் துயில் மந்திரப்பட்டாளோ? *

மாமாயன்மாதவன் வைகுந்தனென்றென்று *

நாமம்பலவும் நவின்றேலோரெம்பாவாய்.




பொருள்:

பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய,

நறுமணதிரவியம் மணம் வீச,

அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே!

உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக.

எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு.

உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே!

அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா?

உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்



3 comments:

  1. பாடல் விளக்கவுரை அருமை.
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. கடைசி படம் ரொம்பவே அழகு. சிலை வடித்தவருக்கு ஒரு பூங்கொத்து...

    பாசுரமும் விளக்கமும் சிறப்பு. தொடரட்டும் மார்கழி சிறப்புப் பதிவுகள்.

    ReplyDelete