17 December 2019

திருப்பாவை – பாசுரம் 1

மார்கழித் திங்கள் நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்






மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால் *

நீராடப்போதுவீர் போதுமினோநேரிழையீர்! * 

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்! * 

கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன் *

ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம் *

கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான் *

நாராயணனே நமக்கேபறைதருவான் *

பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய். (2)






பொருள்: 

அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! 

சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! 

மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. 

இன்று நாம் நீராடக் கிளம்புவோம்.

 கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும்,

கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும்,

 நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். 

அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.









ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. பாடலும், பொருளும், படங்களும் அருமை.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. படங்கள் மிக அருமை. ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

    ReplyDelete