24 December 2019

திருப்பாவை – பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று

கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி










கீழ்வானம்வெள்ளென்று எருமைசிறுவீடு *

மேய்வான்பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும் *

போவான்போகின்றாரைப் போகாமல்காத்து * உன்னைக்

கூவுவான்வந்துநின்றோம் * கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு *

மாவாய்பிளந்தானை மல்லரைமாட்டிய *

தேவாதிதேவனைச் சென்றுநாம்சேவித்தால் *

ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்.



பொருள்: 

மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்டவளே! அழகுச்சிலையே!

கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன.

எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள்.

அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம்.

கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும்,

அந்த தேவாதி தேவனை நாம் அணுகி, அவன் அடி பணிந்தால்,

நம் குறைகளை ஆராய்ந்து, அச்சோ என்று இரங்கி நமக்கு அருள் புரிவான் என்று கூறி தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.




ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. ஆண்டாள் படம் மிக அழகு.
    கண்ணை திறந்து பார்ப்பது போலவே உள்ளது.
    பாடலுக்கு விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மா ...ஸ்ரீரெங்கம் வெளி ஆண்டாள் சன்னதியில் சேவை சாதிக்கும் ஆண்டாள் படம் மா ..

      Delete