26 December 2019

திருப்பாவை – பாசுரம் 10

நோற்றுச் சுவர்க்கம்

“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?”










நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றஅம்மனாய்! *

மாற்றமும்தாராரோ? வாசல்திறவாதார் *

நாற்றத்துழாய்முடி நாராயணன் நம்மால் *

போற்றப்பறைதரும் புண்ணியனால் * பண்டுஒருநாள்

கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும் *

தோற்றும்உனக்கே பெருந்துயில்தான்தந்தானோ? *

ஆற்றஅனந்தலுடையாய்! அருங்கலமே! *

தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்.







பொருள்: 

முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே!

உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை.

பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான்.

முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள்.

உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.







ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. ஆண்டாளின் படங்கள் அழகு.அருமையான தரிசனம்.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. சேர்த்திருக்கும் படங்கள் வெகு அழகு. பாசுரமும் அதன் விளக்கமும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete