வாழ்க வளமுடன் ..
கிடைத்த அரை நாள் இடைவெளியில் நாங்கள் கண்ட இடங்களை இனி பகிர்கிறேன் ....
முதலில் பார்த்தது பரா இமாம்பரா (Bara Imambara)...
பரா இமாம்பரா ஒரு அழகிய பிரமாண்டமான கட்டமைப்பை உள்ள இடம் ...
இதை அசாஃப்-உத்-தோஹலாவின் 4 வது நவாப் கட்டியுள்ளார், மேலும் கட்டிடப் பணிகள் 1784 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. இது முடிவடைய 14 ஆண்டுகள் ஆனது.
இதை வடிவமைத்தவர் கட்டிடக் கலைஞர் ஹபீஸ் கிஃபாயத் உல்லா, ஷாஜஹானாபாதி, அந்தக் காலத்தின் முக்கிய கட்டிடக் கலைஞர்.
வெளிப்புறம் |
நுழைவு வாயில் |
உட்புறம் |
ஒரு பெரிய மண்டபம், பெரிய வளைவு நுழைவாயில்கள் என இவ்விடம் உள்ளது . இமாம்பராவின் மத்திய மண்டபம் கிட்டத்தட்ட 50 மீட்டர் நீளமும் 16 மீட்டர் அகலமும் கொண்டது.
இக்கட்டிடத்தின் உள்ளே தூண்கள் ஏதும் இல்லை..அதுவே இங்கு சிறப்பாக கூறப்படுகிறது ....
மேலும் இமாம்பரா மூன்று தளங்களை கொண்டது ...
கீழ் தளம் ... |
மேல் தளம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை அடுத்த பதிவில் காணலாம் ....
முந்தைய பதிவுகள்
1.லக்னோ பயணத்தில் ...
2.விளையாட்டு மைதானத்தில் .....
3 .லா மார்டினியர் காலேஜ் ,லக்னோ
4.லா மார்டினியர் காலேஜ் - 2
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
அபூர்வமான புகைப்படங்கள் மிக மிக அழகு. மேலே உள்ள ஓவியமும் மிக அழகு. காணத்தந்தமைக்கு அன்பு நன்றி!
ReplyDeleteபரா இமாம்பரா ஒரு அழகிய பிரமாண்டமான கட்டமைப்பை நேரில் பார்த்த உணர்வு.
ReplyDeleteஅழகான படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி அனு.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபரா இமாம்பரா பற்றி செய்திகள் அறிந்து கொண்டேன். பிரமாண்டமாய் அழகிய கட்டிட கலையைப் பார்த்து வியப்பு மேலிட்டது. மிக அழகாக கண்களுக்கு விருந்தாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.